த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: பெண்களும் விவசாயமும்

கால்நடை

வீட்டு உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யவும் வருமானத்தை ஈட்டுவதற்கும் உதவும் முதன்மையான ஒன்று கால்நடை. பெரும்பாலான பண்ணைகளில் கால்நடைகள் இருக்கும். கால்நடைகளின் எண்ணிக்கை, நிலத்தின் அளவு, பயிர் முறைப் பாங்கு, தீவனம் மற்றும் மேய்ச்சலுக்கான நிலங்கள் ஆகியக் காரணிகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது. கிராமப்புரப் பகுதிகளில் பெண்களைத் திருமணம் செய்யும் பொழுது, பெண்கள் வரதட்சணையாக ஒரு கால்நடையைக் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகின்றது. பால் மற்றும் கால்நடைகள் விற்பதன் மூலம் கிராமப்புரப் பெண்கள் அதிக வருமானம் பெறுகின்றனர். பெரும்பாலும், கால்நடைகள், கொட்டகைகள் ஆகியவற்றை சுத்தம் செய்தல், நீர் பாய்ச்சுதல் மற்றும் பால் கரத்தல் ஆகிய வேலைகளையும் கிராமப்புரப் பெண்கள் அதிகமாக செய்கின்றனர். எருக்களை சேகரித்தல் மற்றும் எறு தட்டுதல் ஆகியவற்றை செய்வதன் மூலம் ஏழைக் குடும்பங்களுக்கு அதிக வருமானத்தைப் பெறப் பயன்படுகின்றது. தெளிவாக, கிராமப்புரப் பெண்கள் அனைத்து கால்நடை நடவடிக்கைகளிலும் தீராது ஈடுபடுகின்றனர். கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதைத் தவிர அனைத்து கால்நடை மேலாண்மைகளிலும் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். கொட்டகைகளை சுத்தம் செய்வதிலும் தொழு உரம் சேகரிப்பதிலும் பெரும்பாலான பெண்கள்  ஈடுபடுகின்றனர். உடம்பு சரியில்லாத கால்நடைகளை ஆண்கள் கண்காணித்துக் கொள்கின்றனர்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016