த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: பெண்களும் விவசாயமும்

கோழி வளர்ப்பு

கோழி வளர்ப்பு, கிராமப்புற பொருளாதாரத்தின் முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாகும். வீட்டு அளவிலான கோழிப்பண்ணைகளில் கிராமப்புறப் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. கிராமப்புரப் பெண்கள், தடுப்பூசி, மேம்படுத்தப்பட்ட தீனிகள் போன்ற நவீன மேலாண்மை முறைகளைக் கையாண்டு கோழிப் பண்ணைத் தொழிலை மேலும் சுவாரசியாமாக மாற்றுகின்றனர். ஒவ்வொரு வருடமும் கோழிப் பண்ணையிலிருந்து வரும் வருமானம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது. மேலும் வருவாயை அதிகரிப்பதற்கு கிராமப்புர பெண்கள் அனைத்து முட்டைகளையும் கோழி இறைச்சியையும் தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்தாமல் விற்று அதிக வருமானத்தைப் பெறுகின்றனர். வறுமை மற்றும் போதிய அளவு புரதச்சத்து இல்லாதக் காரணத்தினால் பெரும்பாலான கிராமப்புற பெண்கள் மிகவும் மோசமான உடல்நலத்தோடு வாழ்கின்றனர். பெரும்பாலான கிராமப்புர பெண்கள், சத்துக்குறைபாட்டினால் சிரமப்படுகின்றனர்.  
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016