வேளாண்மைத் தொழில்களில் பெண்களின் பங்கு
வேளாண் தொழில்களில் ஈடுபாடு |
சதவீதம் |
நிலத்தை தயார் செய்தல் |
32 |
விதைகளை சுத்தம் செய்தல் |
80 |
ஊடு சாகுபடி செய்தல் |
86 |
அறுவடை, பதரடித்தல், காய வைத்தல், சுத்தம் செய்தல் மற்றும்
சேமித்தல் |
84 |
அதிக வேலை குறைந்த வருமானம்:
கடந்த ஐந்து – ஏழு ஆண்டுகளில், இருபது சதவீதத்திலிருந்து எழுபத்து ஏழு சதவீதம் வேலையின்மை அதிகரித்துள்ளது. ஒரு வருத்தத்திற்கு சில நாட்களில் மட்டும்தான் விவசாயத்தில் வேலை இருக்கின்றது. இதன் காரணத்தால், நல்ல ஊதியம் இருக்கும் வேலையைத் தேடி ஆண்கள் வெளியூர் செல்கின்றனர். இதனை பூர்த்தி செவதற்கு பெண்கள் ஆண்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்கின்றனர். ஆண்களைப் போல எளிதாக வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து வேலை செய்ய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், பெண்கள் தங்கள் சொந்த கிராமத்தில் விவசாயப் பணியை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறிப்பாக விதைத்தல் மற்றும் சாகுபடியின் உச்சக் காலக்கட்டங்களில் பெண்கள் அதிகமாக வேலை பார்க்க வேண்டியுள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம், ஏழைப் பழங்குடியினப் பெண்களுக்கு ஏற்ற வேலையாக இருந்தது. இப்பொழுதும் பாரம்பரிய முகலாயப் பெண்கள் தங்கள் பர்தாக்களை உடுத்திக்கொண்டு கூலி வேலை செய்யப் சிலப் பகுதிகளில் செல்கின்றனர். தொழிலாளர் அமைச்சகம், ஆண்கள் வாங்கும் கூலியில் அறுபது சதவீதம் பெண்கள் பெறுகின்றனர் எனக் கூறுகின்றது. ஆனால், இந்திய தொழிலாளர் பத்திரிக்கை, ஆண்கள் வாங்கும் கூலியில் எழுப்பத்தைந்து சதவீதம் பெண்கள் பெறுகின்றனர் எனக் கூறுகின்றது.
|