1868 |
சென்னை சைதாப்பேட்டையில் வேளாண்மை பள்ளி தொடங்கப்பட்டது |
1906 |
வேளாண் பள்ளி சைதாப்பேட்டையிலிருந்து கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டது. சென்னையில் வேளாண் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. |
1908 |
மாணவர்கள் வேளாண் கல்வி திட்டம் மூலம் வேளாண்மை தகுதிச்சான்றுக்கு அனுமதிக்கப்பட்டனர் (L.Ag.) |
1909 |
சர் ஆர்தர் லாலி என்பவரால் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (AC &RI) தொடங்கப்பட்டது. |
1920 |
AC &RI சென்னை பல்கலைகழகத்துடன் இணைந்திருந்தது. புதிதாக மூன்றாண்டு இளநிலை வேளாண் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. |
1945 |
இரண்டாவதாக வேளாண் கல்லூரி பாபட்லாவில் (தற்போது ஆந்திர பிரதேசம்) தொடங்கப்பட்டது. |
1958 |
வேளாண்மை, தோட்டக்கலையில் முதுகலை பட்டப்படிப்பிற்காக மண்டல முதுநிலை பட்டதாரி மையம் தொடங்கப்பட்டது |
1960 |
பல்கலைக் கழகத்துடன் ஒருங்கிணைந்த நான்காண்டு இளநிலை வேளாண் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது, அதனுடன் வேளாண்மையில் முனைவர் படிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. |
1965 |
மூன்றாவதாக வேளாண் கல்லூரி மதுரையில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, மதுரையில் முதுநிலை பட்டப்படிப்பு 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. |
1971 |
தமிழ்நாடு வேளாண்மை கல்லூரிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் தலைமையகம் என நடைமுறைப்படுத்தப்பட்டது. |
1972 |
தோட்டக்கலை ஒரு தனிபிரிவாக அமைக்கப்பட்டு அதில் இளநிலை பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. வேளாண் பொறியியல் கல்லூரி கோயம்புத்தூரில் நிறுவப்பட்டது, இளநிலை வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. |
1973 |
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கோயம்புத்தூரில் முனைவர் பட்டப்படிப்பு அறிமுகம் |
1975 |
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் கோயம்புத்தூரில் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியலில் முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. |
1976 |
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் ஆக்கக் கூறாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், இளநிலை கால்நடை மருத்துவ பட்டப்படிப்பில் பொருத்தமான மறுதிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. |
1977 |
மீன் வளர்ப்பு துறையில் இளநிலை பட்டப்படிப்பு திட்டம் தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது.
முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு வேளாண் பொறியியல் துறையில் அறிமுகம் |
1980 |
மனையியல் துறையில் இளநிலை (B.sc(H.sc) பட்டப்படிப்பு மதுரையில் தொடங்கப்பட்டது |
1981 |
மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரையில் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. முனைவர் படிப்பு 1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது |
1989 |
முனைவர் பட்டப்படிப்பு திட்டம் வேளாண்மைத் துறையில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை, முதுகலை பட்டப்படிப்பு திட்டம், வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மேட்டுப்பாளையத்தில், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளத்தில் தொடங்கப்பட்டது. |
1990 |
முதுகலை வேளாண் பட்டப்படிப்பு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம், தூத்துக்குடி மாவட்டம், வனகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையத்தில் முனைவர் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. |
1998 |
உணவு பதப்படுத்தப்படும் துறையில் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்பு சுய ஆதரவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. |
2002 |
இளம் அறிவியல் தோட்டக்கலை தொழில்நுட்பம் மற்றும் இளம் அறிவியல் வேளாண் உயிர் தொழில்நுட்பவியலில் சுய ஆதரவு திட்டம் அறிமுகம் |
2004 |
இளம் அறிவியல் (ஆற்றல் மற்றும் சுற்றுச்சூல் பொறியில் துறையில்) சுய சார்பு திட்டம் அறிமுகம் |
2005 |
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. |
2006 |
பி.டெக். (உயிரிதகவலியல்) சுய ஆதரவு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது |
2008 |
கார்னல் பல்கலை, இதாகா , அமெரிக்கா முதுநிலை இரட்டை பட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. டல்ஹெளசிக்கு,கனடா பல்கலைக்கழகம்- இரட்டை பட்டம் , பி.டெக் இளம் அறிவியல் (சுற்றுச்சூழல் இயற்கை தோட்டக்கலை) |
2011 |
இளம் அறிவியல் (பட்டுபுழுப்வியல்) அறிமுகப்படுத்தப்பட்டது. எம்.டெக். (Ag.) நானோ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது, எம்.டெக். சுற்றுச்சூழல் பொறியியல் அறிமுகப்படுத்தப்பட்டது |
2012 |
முதுநிலை தாவர மரபணு வள தொலையுணர்வு அறிமுகப்படுத்தப்பட்டது |