தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் 1971-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. வேளாண்மைத்துறை முன்னேற்றத்தில் இப்பல்கலைகழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ்நாட்டில் வேளாண்மை துறையின் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழக முழுமுதற் பொறுப்பு என்றால் மிகையாகாது. இப்பல்கலைகழகம் வேளாண் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க சேவைகள் போன்றவைகளை வழங்குகிறது. மேலும் வேளாண்மையில் நடைமுறையில் மற்றும் வருங்காலத்தில் தோன்றும் சவால்களைச் சந்தித்து உயர்தர மனித வளத்தை உருவாக்குகின்றது. அதோடு இல்லாமல் ஆயிரக்கணக்கான உழவர்களுக்கு மற்றும் விரிவாக்கத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பண்ணைத் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தொழில்முனைவோர் முன்னேற்றத்திற்கு திறமையான பயிற்சி மற்றும் பயனீட்டாளர்களுக்கு சேவையும் தருகிறது. அரசிடமிருந்தும் பல திட்டங்களை பெற்று திறம்பட செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்திய வேளாண்மையில் ஒரு வியத்தக மாற்றம் தேவைப்படுகிறது. இந்த மாற்றங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் தேவையை பூர்த்தி செய்ய உலகமயமாக்கல் மற்றும் வேளாண் பொருட்கள் சம்மந்தமான ஏற்றுமதிக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இந்த வழியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் அறிவியல் சார்ந்த முன்னேற்றத்திற்கும், மற்றும் உழவர்களின் வாழ்க்கை தரத்தைத் உயர்ததுவதற்கு ஒரு வழிகாட்டியாகவும் திகழ்கின்றது. தற்சமயம் காணப்படும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், வோள்ணமை விரிவாக்கதுறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், ஆராய்ச்சிகள், வெளி நடவடிக்கைகள், மனிதவள மேம்பாடு மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் இடையூறுகள் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.