வெளியீட்டு பிரிவு:
|
விரிவாக்க கல்வி இயக்கத்தின் ஒரு முக்கிய பிரிவாக 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக் கழகத்தின் ஆப்செட் மற்றும் பிரிண்டிங் பிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு, பிரிண்டிங் பிரஸ், இந்த திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்கத்தின் ஒரு அங்கமானது. 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஆப்செட் மற்றும் பிரிண்டிங் பிரஸ், இந்த இயக்ககத்தின் கீழ் வந்தது. |
நோக்கங்கள்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் வெளியீடுகளாக வளரும் வேளாண்மை தமிழ்நாடு வேளாண்மைபல்கலைக்கழக செய்திமடல், ஆண்டு அறிக்கை, ஆராய்ச்சி விளக்க கையேடு மற்றும் இதை போன்ற இதர வெளியீடுகளின் பிரிண்டிங் செயல்கினை எடுத்துக்கொண்டு ஒருங்கிணைந்து செய்கிறது.
இளங்கலை மற்றும் முதுகலை கல்விக்கு, வினா புத்தகம், படிப்பு மற்றும் பாடத்திட்டம் போன்ற வெளியீட்டு செயல்களை செய்ய ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
சான்றிதழ் பாடம் முதுகலை பட்டயம் மற்றும் முதுகலை பட்டம் போன்ற திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வியில் நடத்தப்படும் பாடங்களுக்கு பாடக்கையேடுகளை பிரிண்ட்/அச்சிட்ட வெளியிடுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் நடைபெறும் புத்தக கண்காட்சி, புத்தக விற்பனை முதலியவற்றிற்கான செயல்களை செய்கிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு தேவையான, நிலையான அட்டைத்தாள், பால் கூடங்கள், எல்லா வகை பதிவேடுகள், விற்பனை புத்தகம், காலண்டா போன்றவைகளை தேவைப்படும் போது அச்சிட்டு அளிக்கிறது.
இந்த தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைககழகத்தின் ஆப்செட் மற்றும் பிரிண்டிங் பிரஸ் பிரிவில் கம்போஸிங் பிரிவு, எழுத்து அச்சு பிரிவு தட்டு தயாரிக்கும் பிரிவு, ஆப்செட் பிரிவு மற்றும் பைண்டிங் பிரிவு என்ற 5 பிரிவுகளின் செயல்பாடு அடங்கியுள்ளன. இந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து அச்சிட்டுக்களை செய்ய நவீன பிரிண்டிங் இயந்திரங்கள் இங்கு அமைந்துள்ளது. திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்விக்கு தேவையான அனைத்தையும், இங்கே அச்சிட்டு வெளியிடப்படுகிறது. எனவே இந்த இயக்கமானது, பல்கலைக்கழகத்தின் மூன்று பணிகளை செய்து வலுவேற்றும் அங்கமாக செயல்படுகிறது.
வெளியீட்டு செயல்கள்:
இந்த இயக்கமானது, தொழில்நுட்பத்தை வழங்க, அறிஞர்களை புத்தகங்கள் மற்றும் இதர தொழில்நுட்ப வெளியீடுகளை வெளியிட எழுதுவதற்கு ஊக்கப்படுத்துகிறது. அதன்மூலம் ஐஎஸ்பிஎன் எண் கொண்ட புத்தகங்களாக வெளியிட்டு வருகிறது. அதனால் இந்த இயக்கமானது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வெளியீட்டாளராகவும் செயல்படுகிறது.
|