தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், ஆங்கில வழி சான்றிதழ் படிப்புகள், நல்ல முன்னோடி விவசாயிக்கும், வேளாண் கல்வியின் மீது ஆர்வமுள்ள நகர்புற படிப்பாளர்களுக்கும் வேளாண் தொழில்களை, எப்படி எதை செய்வது என்தை பற்றி தெரியவும் செய்வதும் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் இக்கல்வியில் கற்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
படிப்புகள்
- நிலத்தை எழிலூட்டுதல் மற்றும் அழகு தோட்டம் அமைத்தல்
- நாற்றுப் பண்ணை தொழில்நுட்பம்
- வணிக தோட்டக்கலை
- நவீன களை மேலாண்மை
- மண் தர மேலாண்மை
தகுதி :
கல்வித் தகுதி |
: |
6 ஆம் வகுப்பு |
மொழி |
: |
ஆங்கிலம் |
காலம் |
: |
6 மாதங்கள் |
பதிவு கட்டணம் |
: |
ரூ. 3000/பாடம் |
வயது |
: |
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் |
எல்லா கற்பவர்களுக்கு ஆங்கிலத்தில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
மேற்கண்ட சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் அருகிலுள்ள படிப்பு மையத்தை குறிப்பிடவேண்டும்.
- ஒரு நேரத்தில் ஒரு சான்றிதழ் படிப்பில் மட்டும் சேரலாம்.
- மாதத்தின் சனிக்கிழமை/ ஞாயிற்றுக் கிழமையில் நேரடி தொடர்பு வகுப்புகள் நடப்பதை முதலிலேயே அறிவிக்கப்படும்.
- கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
- முதல் வகுப்பிலேயே தானே பயிலும் படியான படிப்பு கையேடு/ புத்தகம் வழங்கப்படும்.
- தொடர்பு கொள்ள விலாசத்தை சரியாக எழுத வேண்டும்.
- விலாசத்தில் ஏதும் மாற்றம் இருந்தால், முதலிலேயே சொல்லி விட வேண்டும். கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்கள் மற்றும் செல்பேசி எண்கள்மூலம் தகவல்களை விரைவாக பெறலாம்.
- விண்ணப்பத்தை நேரடியாகவோ அஞ்சல் வழியாகவோ கட்டணம் ஏதுமின்றி பெறலாம்.
படிப்புகள்
நில எழிலூட்டுதல் மற்றும் அழகு தோட்டம் அமைத்தல்
உள் மற்றும் வெளி சுற்றுச்சூழலுக்கு ஏற்ற/தகுந்த செடிகளை கண்டறிய இப்படிப்பு முக்கியமான
ஈடுப்படுகிறது. நில அடிகூட்டதலின் தத்துவம், தோட்டத்தின் நீர்ப்பாசனம் செய்வதன் முக்கியத்துவம், செயற்கை ஊற்றும், குளங்கள் போன்றவைகளைப் பயன்படுத்தல் பற்றியும் தெரியமுடியும். பாறை தோட்டம் அமைத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் போன்றவைகளை பற்றியும் அறியலாம்.
நாற்றுப்பண்ணை மேலாண்மை செய்தல் போன்றவைகளை பற்றியும் அறியலாம்.
நாற்றுப் பண்ணை மேலாண்மை
நாற்றுப்பாத்தி தயாரித்தல் மற்றும் அமைத்தல், விதை நேர்த்தி மண் மற்றும் மண் கிருமிக்கும் செய்தல் போன்றவையும் பல்வேறு இனப்பெருக்க முறைகளான விதை பெருக்கம், விதையில்லாப் பெருக்கம் போன்றவற்றை பற்றி விரிவாகவும், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பாதுகாத்தல் மற்றும் அடுக்குதல் போன்றவற்றை பற்றியும் இக்கல்வி மூலம் அறியமுடியும்.
வணிக தோட்டக்கலை
பயிர் பெருக்கத்தின் அடிப்படை நோக்கங்கள், தேவையான கலவை மற்றும் கருவிகள் பற்றி முக்கியமாக சொல்லிக்கொடுக்கப்படுகிறது. மேலும் உள் அறை செடிகள், அழகு தோட்டம், வீட்டுத் தோட்டம், பூக்கள் மற்றும் காய்கறி பயிர்களில் விதைப் பெருக்கம் முதலியவைகளும், கற்பவர்களின் பயனுக்காக சேர்க்கப்பட்டுள்ளது. காய்கறி வகைகள், காய்கறி தோட்டம், காய்கறி உற்பத்தி தொழில்நுட்பம் போன்றவையும், விதை உற்பத்தி பாடங்களாக விதை உற்பத்தியின் நோக்கம் மகரந்த சேர்க்கையை கட்டுப்படுத்துதல். பூக்கள் மற்றும் காய்கறி பயிர்களில் விதை பிரித்தெடுத்தல் உட்பட சாகுபடி முறைகள் மற்றும் பதப்படுத்தும் தொழில்நட்பம் போன்றவையும் இப்படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
நவீன களை மேலாண்மை:
களைகளைக் கண்டறிதல், நிலம் மற்றும் தோட்டக்கலை செடிகளில் ஒருங்கிணைந்த களை மேலாண்மை பிரச்சனையளிக்கக்கூடிய களைகள் மற்றும் பயிர் கழிவு மேலாண்மை போன்றவை முக்கியப் பாடங்களாகும். பல்வேறுப்பட்ட களைகளைக் கட்டுப்படுத்த களைக்கொல்லி பயன்படுத்தும் தொழில்நுட்பம், தெளிப்பான்களை உபயோகித்தல் மற்றும் பாதுகாத்தல் பற்றியும் அறியலாம். ஒருங்கிணைந்த களை மேலாண்மையில் படிப்பவர்களின் நலனுக்காக, நல்லமுறை கட்டுப்படுத்தலுக்கான வழிமுறைப்பற்றி சொல்லித்தரப்படுகிறது. களைக்கொல்லி, செடியில் தங்கி இருந்தால் அவற்றை மேலாண்மை செய்வது பற்றி ஆழமாக விவரிக்கப்பட்டுள்ளது.
மண் வள மேலாண்மை:
நீர் மறுசுழற்சி, தொழுஉரம் தயாரித்தல் தொழில்நுட்பம், வேளாண்மையில் கரும்பாலை கழிவு மற்றும் சாம்பல் உபயோகம் பற்றி முக்கியமாக சொல்லப்படுகிறது. மண்புழு உரம் தயாரித்தல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம், உற்பத்தி முறைகள், சேமித்தல் மற்றும் சிப்பமிடல் மற்றும் இடுதல் போன்றவையும், பயிர்க்கழிவு, தென்னை நார்க்கழிவு, கரும்பு தோகை, காகித ஆலை, கழிவுகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரித்தல் பற்றியும், பயிர் உற்பத்தியில் நகர்புற கழிவு பயன். |