வேளாண் ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி 1901-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் முதன்முதலாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட ஆராய்ச்சி நிலையமாகும். நம் நாடு சுதந்திரம் பெற்றபின் இந்த வேளாண் ஆராய்ச்சி நிலையமானது பருத்தி மற்றும் சிறுதானிய ஆராய்ச்சி நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு சென்னை வேளாண்மை துறையின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்நிலையம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துடன் 1.4.1981 முதல் இணைக்கப்பட்டு ஓர் சிறந்த மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
- ஆராய்ச்சி நிலையத்தின் நோக்கங்கள்:
- மானாவாரி பயிர்களான பருத்தி, தானியங்கள், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள் மற்றும் மிளகாய் போன்ற பயிர்களில் ஆராய்ச்சி மேற்கொள்வது
- உயர் விளைச்சல் தரும் இரகங்களை உருவாக்குதல்
- வானிலை முன்னறிவிப்பு செய்தல்
- மானாவாரிப் பயிர்களுக்கான உழவியல் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம்
- மானாவாரிப் பயிர்களுக்கான ஊட்டச்சத்து மேலாண்மை
- மானாவாரிப் பயிர்களுக்குத் தேவையான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வழிமுறைகளை கண்டறிதல்
- பண்ணை செயல்முறை திடலின் மூலமாக புதிய இரகங்களையும் தொழில்நுட்பங்களையும் பிரபலப்படுத்துதல்
- மானாவாரிக்கேற்ற பயிர் இரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கிடையே ஏற்படுத்தி பயிர் உற்பத்தியைப் பெருகச்செய்தல்.
- வேளாண்துறை, தொலைக்காட்சி, அகில இந்திய வானொலி, பருவகால பயிற்சிகள், வயல் விழா மற்றும் செயல்விளக்கத் திடலின் மூலமாக தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கிடையே பரப்புதல்
- ஆராய்ச்சி நடவடிக்கைகள்
- நடுத்தர பருத்தி இழை அபிவிருத்தித் திட்டம்
- சம்பா மிளகாய் அபிவிருத்தித் திட்டம்
- பருத்தியில் முன்னிலை விளக்கத் திடல்கள்
- கலப்பின பருத்தி தெரிவு செய்தல்
- அகில இந்திய ஒருங்கிணைந்த சூரியகாந்தி அபிவிருத்தித் திட்டம்
- அதிக விளைச்சல் தரக்கூடிய மானாவாரி மற்றும் நெல் தரிசில் பயரிட உகந்த உளுந்து இரகங்களை மரபியல் ரீதியாக உயர்த்துதல்
- சோள ஆராய்ச்சி இயக்குனரகம் - அகில இந்திய ஒருங்கிணைந்த சோள அபிவிருத்தித் திட்டம் இயற்கையான உணவுப் பதார்த்தங்களை தயாரிப்பதற்குத் தகுந்த சோள இரகங்களை தேர்ந்தெடுத்தல்
- சோள ஆராய்ச்சி இயக்குனரகம் - அகில இந்திய சோள இனவிருத்தித் திட்டத்தின் கீழ் சோளத்தில் பயிர் சிலந்திக்கான எதிர்ப்பு இரகங்களை தெரிவு செய்தல்
- சோள ஆராய்ச்சி இயக்குனரகம் - அகில இந்திய சோள இனவிருத்தித் திட்டத்தின் கீழ் சோளத்தில் கதிர் ஈக்கான எதிர்ப்பு இரகங்களை தெரிவு செய்தல்
- தேசிய அளவிலான காலநிலை மாற்றத்திற்கு உகந்த வேளாண் வானிலைத் திட்டம்
- அகில இந்திய ஒருங்கிணைந்த மானாவாரி வேளாண்மைத் திட்டம்
- அகில இந்திய ஒருங்கிணைந்த வேளாண் வானிலை ஆராய்ச்சித் திட்டம்
- அகில இந்திய ஒருங்கிணைந்த சோள அபிவிருத்தித் திட்டம்
- மத்திய கால வேளாண் வானிலை முன்னறிவிப்புச் சேவைத் திட்டம்
- அங்கக பருத்தி சாகுபடிக்கான தொழில்நுட்பங்களைத் தீர்மானித்தல்
- தமிழ்நாடு - நீர்வள நிலவளத் திட்டம்
- மிளகாயில் உண்மைநிலை விதை உற்பத்தித் திட்டம்
- சுழல்நிதி வேளாண் பயிர்களில் விதை உற்பத்தி
- விரிவாக்கப்பணிகள்
வேளாண் கல்வி நிறுவனம், கோவில்பட்டி ஆராய்ச்சி நிலையத்தில் 2008-09-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த படிப்பு நான்கு பருவங்களைஉள்ளடக்கியது. மாணவர்களுக்கு வேளாண் கல்வியைக் கற்பித்து அவர்களை சிறந்த தொழில் முனைவராக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
4.சாதனைகள்
அ.வெளியிடப்பட்ட இரகங்கள்
வ.எண். |
பயிர்கள் |
எண்ணிக்கை |
பெயர்கள் |
1 |
பருத்தி(கா.அர்போரியம்) |
9 |
கே1, கே2, கே3, கே4, கே5, கே6, கே7, கே8, கே9, |
2 |
பருத்தி(கா.ஹிர்சூட்டம்) |
5 |
எம.சி. யூ 6, கேசி1, கே.சி.எச்1, கே.சி2 மற்றும் கேசி3 |
3 |
சோளம் |
12 |
கே1, கே2, கே3, கே4, கேநெட்டை, கே5, கே6, கே7, கே8, கே9, கே10 மற்றும் கே11 |
4 |
கம்பு |
4 |
கே1, கே2, கே3, கே4 எச்.பி |
5 |
மக்காச்சோளம் |
2 |
கே1 மற்றும் கே2எச்.எம் |
6 |
கேழ்வரகு |
7 |
கே1, கே2, சாரதா, பி.ஆர் 202, கே5, கே6, மற்றும் கே7 |
7 |
திணை |
3 |
கே1, கே2 மற்றும் கே3 |
8 |
குதிரைவாலி |
2 |
கே1 மற்றும் கே2 |
9 |
பனிவரகு |
2 |
கே1 மற்றும் கே2 |
10 |
வரகு |
1 |
கே1 |
11 |
சாமை |
1 |
கே1 |
12 |
உளுந்து |
1 |
கே1 |
13 |
பாசிப்பயறு |
1 |
கே1 |
14 |
சூரியகாந்தி |
2 |
கே1 மற்றும் கே2 |
15 |
குசும்பா |
1 |
கே1 |
16 |
மிளகா ய் |
2 |
கே1 மற்றும் கே2 |
|
மொத்தம் |
55 |
|
ஆ.வேளாண் தொழில் நுட்பங்கள்
பயிர் மேலாண்மை
- பருவ விதைப்பு – சோளம் மற்றும் பின்பருவ விதைப்பு – சூரியகாந்தி மற்றும் கம்பு
- பருவ மழை இடர்ப்பாடுகள் நேர்ந்தால் எள், கொத்தமல்லி, சில ஆவாரை(சென்னா) பயரிடலாம்
- சோள விதையை 2% பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கொண்டு விதை நேர்த்தி செய்வதால் வறட்சியைத் தாங்கும் தன்மை கிடைக்கிறது.
- பயிர்களுக்கு ஏற்ற களைக்கொல்லியைத் தேர்ந்தெடுத்து களைகளைக் கட்டுப்படுத்துதல்
- மானாவாரிப் பயிர்கள் அனைத்திற்கும் 30 லிருந்து 45 நாட்களுக்குள் நிலப் போர்வை அமைத்தும் அல்லது ஒரு தடவை கைக்களை எடுப்பதும் சிறந்ததாகும்.
- பருத்தியை முள்ளங்கியில் ஊடுபயிராகப் பயரிடுவது கூடுதல் வருமானத்துக்கு வழிவகை செய்யும்
- பருத்தியில் ஊடுபயிராகப் பயறு வகைகளை 2:1 விகிதத்தில் பயரிடலாம்.
- சோளத்தில் ஊடு பயிராக தட்டைப்பயறு 2:1 விகிதத்தில் பயிரிடலாம்.
- மானாவாரி கரிசல் நிலங்களுக்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணைய முறையாக பயிர் சாகுபடியுடன் வெள்ளாடு(3+1), செம்மறி ஆடு( 20+ 1) கறவைப்பசு(1) பராமரிப்பதால் மண்வளம் குறையாமல் நிகர வருமானம் கூடுதலாகக் கிடைத்தது.
- பருத்தி மற்றும் தானியப் பயிர்களில் பரிந்துரைக்கப்படும் தழைச்சத்தை 50 சதவிகிதம் இரசாயன உரங்கள் மூலமும் மீதி 50 சதவிகிதம் அங்கக உரங்கள் மூலமாகவும் இட வேண்டும்.
- பருத்தி மற்றும் சிறுதானியப் பயிர்களுக்கு அடி உரமாக எக்டருக்கு 40 கிலோ தழைச்சத்து 20 கிலோ மணிச்சத்து பரிந்துரைக்கப்படுகிறது.
- பருத்திப் பயிரில் மக்னீசியச்சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 0.5 சதம் மக்னீசியம் சல்பேட்டுடன் 0.1 சதம் ஜிங்க் சல்பேட்டும் 1 சதம் யூரியாவும்சேர்த்துவிதைத்த 50 மற்றும் 85 வது நாளில் பருத்திப் பயிருக்குத் தெளிக்கவேண்டும்.
பயிர் பாதுகாப்பு
- பருத்தி விதைப்புக்குமுன்அடிஉரமாகஹெக்டேருக்கு 150 கிலோவேப்பம்புண்ணாக்குமற்றும் 25வது நாளில் பயிருக்கு 1 சத வேப்பஎண்ணெய்கரைசலைதண்டுப்பகுதிநனையும்படிஊற்றுவதால்தண்டுகூன்வண்டின்தாக்குதலைக்குறைக்கலாம்.
- 1 கிலோ சோள விதைக்கு 10 மிலிஇமிடாகுளோபரிட்என்றஅளவில்கலந்துவிதைநேர்த்தி செய்து விதைப்பதால்சோள குருத்து ஈயைக் கட்டுப்படுத்தலாம்.
- சோள பயிரை செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் விதைப்பதால்சோள குருத்து ஈயின் தாக்குதல்குறையும்.
- பருத்தியில் ஊடுபயிராக கொத்தவரை, மக்காச்சோளம், பாசிப்பயறு, அவரை, தட்டைப்பயறு, உளுந்து, மொச்சை, வெண்டை மற்றும் வெங்காயம் போன்ற பயிர்களில் ஏதாவது ஒன்றைப் பயிர் செய்வதால் தண்டுகூன்வண்டின்தாக்குதலிலிருந்துபருத்தியைப் பாதுகாக்கலாம்.
மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு
- நிலத்தை ஒரு முறை சட்டி கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்தபின் இரண்டு முறை பல் கலப்பை கொண்டு உழுவதால் மண்ணின் ஈரம் பாதுகாக்கப்படுகிறது.
- ஆழ்ச்சால் ஆழப்பகுதி அல்லது பகுதிபாத்தி அல்லது வரப்புசால் போன்ற தொழில்நுட்பங்கள் மண் அரிப்பைத் தடுத்து மண்ணின் ஈரத்தைப் பாதுகாக்கும்.
இ.பெற்ற விருதுகள் / பதக்கங்கள்
- சிறந்த வானிலை ஆராய்ச்சி உதவி மையத்திற்கான விருது 2012 – ல் வழங்கப் பட்டது
- சவுதரிலால் விருது 2009 –ஆம் ஆண்டில், அகில இந்திய ஒருங்கிணைந்த மானாவாரி வேளாண்மைத் திட்டத்திற்கு வழங்கப் பட்டது
- சிறந்த வேளாண் ஆராய்ச்சி நிலையத்திற்கான விருது 2004 மற்றும் 2010 ல் வழங்கப் பட்டது
- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் 25 வருட சேவைக்கான விருது டிசம்பர் 2000 ம் ஆண்டு வழங்கப்பட்டது.
தொடர்புக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வேளாண் ஆராய்ச்சி நிலையம்,
கோவில்பட்டி- 628 501, தூத்துக்குடி.
Phone: (04632) 220533; 221133
E-mail: arskovilpatty@tnau.ac.in
|