தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம் – 614 906
ஆராய்ச்சி முடிவுகள்
- லட்சத்தீவு சாதாரணம் × கொச்சின் சைனா என்ற நெட்டை× நெட்டை வீரிய ஒட்டு இரகம் ஆண்டிற்கு ஒரு மரத்திற்கு 198.2 காய்களை கொடுத்துள்ளது. இதன் சராசரி தொடர் ஆண்டு மகசூல் ஒரு மரத்திற்கு 135.42 ஆகும்.
- 21 வீரிய ஒட்டு இரகங்களை ஆய்வு செய்ததில் எம்.ஜீடி × இசிடி என்னும் வீரிய ஒட்டு சராசரியாக ஆண்டிற்கு 233.33 காய்கள் /மரத்திற்கு கொடுத்துள்ளது. இசிடி x எம்ஒடி என்னும் வீரிய ஒட்டில் சராசரி தொடர் ஆண்டு மகசூல் 141.22 காய்கள், மரத்திற்கு கொடுத்துள்ளது.
- 2009-10க்கான ஆண்டு மகசூல் மற்றும் தொடர் மகசூல் இனம்வளம் இரண்டாம் குழுவில் கணக்கிடப்பட்டது. 11 இரகங்களில் சான்சிபார் அதிகமான தொடர் ஆண்டு மகசூலாக 178.80 காய்கள் வருடத்திற்கு தருகிறது.
- 2010-11 ஆம் ஆண்டிற்கான இனவள குழுவில் பரிசோதனையில் 20 நெட்டை மரங்களும் 8 குட்டை வகை மரங்களும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஜாவா ஜெய்ண்ட இரகத்தில் அதிக காயின் எடை (1500 கி) மற்றும் பருப்பின் எடை (500கி) காணப்பட்டது. கொப்பரையின் எடை சான்பிலாஸ் (290கி) என்னும் இரத்தில் காணப்பட்டது. குட்டை வகை மரங்களில் எம்ஜிடி இரகத்தில் அதிக காயின் எடை (1213.3கி) காணப்பட்டது. எம்ஒய்டி என்னும் இரகத்தில் அதிக உரித்த காயின் எடை (540கி) காணப்பட்டது.
- இளநீர் பயன்பாட்டிற்காக பல்வேறு வீரிய ஒட்டுகளில் ஆய்வு மேற்கொண்டதில் எம்ஒடி × டபுள்யூசிடி என்னும் வீரிய ஒட்டு இரகத்தில் அதிக மொத்த சர்க்கரை (5.080பிரிக்ஸ்) இருப்பதாக கண்டறியப்பட்டது.
- சிஒடி,எம்ஒடி மற்றும் எம்ஒய்டி ஆகிய குட்டை இரக தாய் மரங்கள் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு எக்டர் வீதம் நடவு செய்யப்பட்டது. மேலும் டபுள்யூசிடி என்னும் நெட்டை இரகம் ஒரு எக்டர் பரப்பளவில் குட்டை x நெட்டை உருவாக்குவதற்கு நடவு செய்யப்பட்டது.
- சொட்டு நீர் பாசனம் 75 சதம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து மைக்ரே சொட்டு நீர் பாசனம் அதிகளவில் காய்களின் எண்ணிக்கை உயர்வுக்கு 91.60 காரணமாக விளங்குகிறது. மேலும் எவ்வித உர பரிசோதனை இல்லாத மரம் 76.40 காய்களையே கொடுத்துள்ளது. 100 சதம் தழை, மணி மற்றும் சாம்பல் கொடுத்த மரங்களில் அதிக காய்கள் காய்ந்துள்ளன. இவை 75 சதம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்தைவிட அதிகமாகும்.
- தென்னையில் ஊடுபயிர் செய்வதற்கு மருத்துவ பயிர்களான, சித்தரத்தை, அலோவீரா, துளசி மற்றும் நறுமணப்பயிர்கான எலும்பிச்சை புல், பச்சோலி ஆகியவை உகந்ததாக கருதப்படுகின்றது.
- தென்னையில் அங்கங்கள் வாயிலாக ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்த பரிசோதனைாயனது 1996 ம் ஆண்டு 29 வயது நிரம்பிய கிழக்கு கடற்கரை நெட்டை இரக தென்னையில் மேற்க்கொள்ளப்பட்ட ஆய்வில், 5 விதமான ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாக முறைகள் பரிசோதிக்கப்பட்டதில் 50% தழைச்சத்து (மக்கிய தென்னை நார்கழிவிலிருந்தும்)+50% தழைச்சத்து (இரசாயன உரத்திலிருந்தும்) அளிக்கையில் தென்னையின் மகசூல் மேம்படுவதுடன், மண்வளமும் பராமாகிக்கப்படுகிறது.
- நெட்டை இரக தென்னைக்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக தயாரிப்பு அங்கக எருக்கலவையான 40 கிலோ மண்புழு உரம், 500 கிராம் ராக்பாஸ்பேட் தலா 12.5 கிராம், அஸோஸ்பைரில்லம், பாஸ்யா பாக்டீரியா மற்றும் 250 கிராம் கடலை புண்ணாக்கு அடங்கிய கலவையை முதல் வருடத்தின் மாதமொருமுறை என 12 தவணைகளிலும், அதனை தொடர்ந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை என வருடத்திற்கு நான்கு தவணைகளிலும் இடுகையில் ஆரம்ப வருடங்களில் தென்னை மகசூல் குறைந்தபோதிலும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இரசாயன உரம் இடப்பட்ட தென்னைக்கு நிகரான மகசூல் கிடைக்கப் பெற்றது மேலும் மண்வளமும் பராமரிக்கப்பட்டது.
- வீரிய ஒட்டு (வி.எச்.சி2) தென்னைக்கான உரத்தேவையை தீர்மானிக்கும் பொருட்டு தென்னைக்கு தேவையான தழைசத்தினை 50% சத இரசாயன உரமாகவும் எஞ்சிய 50% இயற்கை உரமாகவும் அளித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மண்புழு உரத்தினில் உள்ள சத்துக்களை கணக்கிட்டு 50% தழைச்சத்து தரும் வகையில் மண்புழு உர அளவு கணக்கிடப்பட்டது. மண்புழு உரத்தில் உள்ள மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து போக எஞ்சிய மணி மற்றும் சாம்பல் சத்துகள் மற்றும் 50% தழைச்சத்து இரசாயன உரமாக அளிக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் வீரிய ஒட்டு ரக தென்னைக்கு உர அளவு வருடத்திற்கு மரத்திற்கு 1000:250:2000 கி. இவற்றுடன் 50 கிகி இயற்கை உரத்தையும் இடுவதன் மூலம் பொருளாதார ரீதியாக வீரிய ஒட்டு தென்னையில் மகசூல் அதிகரிப்பதுடன் மண் வளம் மேம்படுவதும் கண்டறியப்பட்டது. வீரிய ஒட்டு தென்னையில் நீடித்த நிலையான மகசூலுக்கும், மண் வள பராமரிப்பிற்கும் மற்றும் அதிக நிகர லாபத்திற்கும் பரிந்துரைக்கப்பட்ட தழைசத்தில் 50% இரசாயன உரமாகவும் எஞ்சிய 50% இயற்கை உரமான மண்புழு உரம் அல்லது மக்கிய தென்னைநார் உரமாகவும் இடுவது சிறந்தது.
- தென்னையில் காண்டாமிருகவண்டு மற்றும் சிவப்பு கூன்வண்டுகளை இனகவர்ச்சி பொறி கொண்டு கட்டுப்படுத்திட ஒன்பது இடங்களில் நடத்தப்பட்ட வயல்வெளி ஆய்வுகளின் படி சிபிசிஆர்ஐ பொறிகள் பிசிஐ பொறிகளை காட்டிலும் சிறந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
- மகிழங்கோட்டை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ன தென்னை அடித்தண்டழுகல் நோய் நிர்வாக சோதனையில் கட்டுப்பாடு முறைகளை கடைபிடிப்பதற்கு முன்பு மண்ணில் உள்ள சூடோமோனாஸ் புளுரசன்ஸ் மற்றும் ட்ரைகோடடெர்மா விரிடி ஆகியவற்றின் எண்ணிக்கை முறையே ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரையிலும், ஆயிரத்திலிருந்து இரண்டாயிரத்து ஐநூறு வரையிலும் ஒரு கிராம் காய்ந்த மண்ணில் இருப்பது கண்டறியப்பட்டது.
- போட்ரியோ டிப்ளோடியா தியோபுரோமே, பெனிசிலியம், ரைசோபாஸ், அஸ்பர்ஜில்லஸ் நைஜசர் ஆகியவை கொப்பரையிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டன. மேற்கூறிய பூசணங்களின் வளர்ச்சியை சூடோமோனாஸ் புளரசன்ஸ் மற்றும் சிட்ரிக் அமிலம் அகியவறை திறன்பட குறைந்துள்ளன.
- தென்னையில் தோன்றும் குருத்தழுகல் நோயை கட்டுப்படுத்த நாட்டுச்சாலை, காசாங்காடு, மன்னங்காடு, சிலம்பவேளாங்காடு மற்றும் வேப்பங்குளம் ஆகிய இடங்களில் பருவ மழைக்கு முன்பும், பின்பும் ஒரு சத ட்ரைகோடிடர்மா விரிடி, ஒரு சத சூடோமோனாஸ் புளுரசன்ஸ்0.2 சதம் ரிடோமில் மற்றும் 0.3 சதம் காப்பர் ஆக்ஸி குளோரைடு ஆகியவை தெளிக்கப்பட்டுள்ளன. மேற்கூறிய இளந்தோப்புகளில் மருந்து தெளிப்பதற்கு முன்பும், பின்பும் மருந்து தெளித்த மரங்களில் குருத்தழுகல் நோய் காணப்படவில்லை.
- இலைக்கருகலை உண்டு பண்ணும் லாசியோடிப்ளோடியா தியோபுரோமே என்ற பூசணத்தை ரிடோமில் என்ற பூஞ்சாண கொல்லி 500 பிபிஎம் என்ற அளவில் முழுமையாக கட்டுப்படுத்தியது.
ஆராய்ச்சிகளை வெளிகொண்டு செல்லும் செயல்பாடுகள்:
- இருபது ஆராய்ச்சி கட்டுரைகள், 8 பிரபல்ய கட்டுரைகள் மற்றும் ஒரு புத்தகம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகள் வேளாண் விரிவாக்க அலுவலர்கள் ஒரு புத்தகம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வேளாண் விரிவாக்க அலுவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு இருபது பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளது.
- ஊட்டச்சத்தின் மேலாண்மை, மதிப்பு கூட்டுதல், பூச்சி மேலாண்மை சம்பந்தமாக மூன்று வானொலி ஒலிபரப்புகள் ஒலிபரப்புகள் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்திலிருந்து நிகழ்த்தப்பட்டுள்ளன. சென்னை தொலைக்காட்சியிலிருந்து ஒன்பது ஆராய்ச்சி விளக்கவுரைகள் நிகழ்த்தப்பட்டுள்ள. திருச்சி வேளாண் கல்லூரி, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வேளாண் கல்லூரி, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வேளாண் அறிவியல் நிலையங்கள், வம்பன் மற்றும் சிக்கல் ஆகிய இடங்களில் நடந்த விவசாய கண்காட்சியில் பங்கேற்று ஆராய்ச்சி முடிவுகள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பட்டுக்கோட்டை தாலூக்காவிலிருந்து விவசாயிகள் ஆழியார் நகர், பொள்ளாச்சி, ஆனைமலை, வாகரை, பழனி, திண்டிவனம் மற்றும் விருத்தாச்சலம் ஆகிய இடங்களுக்கு கண்டுனர் பயிற்சிக்காக அழைத்துச் சென்று வரப்பட்டுள்ளார்கள்.
எதிர் காலத்தில் செய்யப்பட்ட உள்ள ஆராய்ச்சிகள்
- தென்னையில் குட்டை x நெட்டை, நெட்டை x நெட்டை மேலும் குட்டை x குட்டை ஆகிய வீரிய ஒட்டு இரகங்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளன.
- ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளை உருவாக்குதல் மற்றும் உயிரியல் முறை நோய் மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை உருவாக்குதல் ஆகியன தென்னையில் எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டிய ஆராய்ச்சிகளில் மிக முக்கியமானவை ஆகும்.
வீரிய ஒட்டு இரகங்கள்
தென்னையில் அதிக மகசூல் பெறுவதற்காக நெட்டைக்கும் குட்டைக்கும் இடையே கருவொடு் முறை 1970ல் தொடங்கப்பட்டு வீரிய ஒட்டு வெளியிடப்பட்டது. இந்தியாவில் முதல் வீரிய ஒட்டு தென்னை இரகத்தை வெளியிட்ட பெருமை வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தை சாரும். 1982-ஆம் ஆண்டு வி.எச்.சி 1 என்ற பெயரில் முதல் நெட்டை ஒ குட்டை வீரிய ஒட்டு இரகம் வெளியிடப்பட்டது.
வீரிய ஒட்டு இரகங்கள்
1.வேப்பங்குளம் வீரிய ஒட்டு தென்னை -1 (வி.எச்.சி-1)(இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் வீரிய ஒட்டுத் தென்னை) |
வெளியிடப்பட்ட ஆண்ட |
: |
1982 |
பெற்றோர்கள் |
: |
கிழக்கு கடற்கரை நெட்டை X பச்சை குட்டை |
பூக்கும் வயது |
: |
3½ ஆண்டுகள் |
மகசூல் |
: |
120 காய்கள், மரத்திற்கு, ஆண்டுக்கு |
கொப்பரை எடை |
: |
142 கிராம் /காய் |
கொப்பரை விளைச்சல் |
: |
14.0 கிலோ கொப்பரை/மரத்திற்கு/ஆண்டுக்கு |
எண்ணெய் சத்து |
: |
69.0 விழுக்காடு |
சிறப்பு குணாதிசயங்கள் |
: |
நெட்டை இரகங்கள் காட்டிலும் அதிக மகசூல் 38 சதம் அதிக காய்மகசூல் கொப்பரை, எண்ணெய் சதம் அதிகம் விரைவாக குறுகிய காலத்தில் பூக்கும் தன்மை |
2.வேப்பங்குளம் வீரிய ஒட்டு தென்னை -2 (வி.எச்.சி-2) |
வெளியிடப்பட்ட ஆண்ட |
: |
1988 |
பெற்றோர்கள் |
: |
கிழக்கு கடற்கரை நெட்டை X மலேசியன் மஞ்சள் குட்டை |
பூக்கும் வயது |
: |
3½ ஆண்டுகள் |
மகசூல் |
: |
142 காய்கள்/மரத்திற்கு/ஆண்டுக்கு |
கொப்பரை எடை |
: |
149.0 கிராம்/காய் |
கொப்பரை விளைச்சல் |
: |
22.0 கிலோ /மரத்திற்கு/ஆண்டுக்கு |
எண்ணெய் சத்து |
: |
70.00 விழுக்காடு |
சிறப்பு குணாதிசயங்கள் |
: |
வி.எச்.சி.1ஐவிட அதிக காய்கள், கொப்பரை எடை மற்றும் எண்ணெய் சத்து கிழக்கு கடற்கரை நெட்டையைவிட 55 சதம் அதிக காய் மகசூல்மட்டை மற்றும் குலை சரியாத்தன்மை் |
3.வேப்பங்குளம் வீரிய ஒட்டு தெனை் -3 (வி.எச்.சி-3) |
வெளியிடப்பட்ட ஆண்ட |
: |
2000 |
பெற்றோர்கள் |
: |
கிழக்கு கடற்கரை நெட்டை X மலேசியன் ஆரஞ்சு குட்டை |
பூக்கும் வயது |
: |
3½ ஆண்டுகள் |
மகசூல் |
: |
157 காய்கள்/மரத்திற்கு/ஆண்டுக்கு |
கொப்பரை எடை |
: |
162.0 கிராம்/காய |
கொப்பரை விளைச்சல் |
: |
25.4 கிலோ /மரத்திற்கு/ஆண்டுக்கு |
எண்ணெய் சத்து |
: |
70.2 விழுக்காடு |
சிறப்பு குணாதிசயங்கள் |
: |
- வி.எச்.சி-2 வீரிய ஒட்டை 9 சதம் அதிக மகசூர்
- கிழக்கு கடற்கரை நெட்டையைவிட 67 சதம் அதிக காய் மகசூல்
- மட்டை மற்றும் குலை சரியாத்தன்மை
|
4.வேப்பங்குளம் -3 (வி.பி.எம். 3) |
வெளியிடப்பட்ட ஆண்ட |
: |
1994 |
பெற்றோர்கள் |
: |
அந்தமான் சாதாரணம் என்ற வெளிநாட்டு நெட்டை தென்னையில் இருந்து தேர்வு செய்யப்பட்டது |
பூக்கும் வயது |
: |
5½ ஆண்டுகள் |
மகசூல் |
: |
92 காய்கள்/மரத்திற்கு/ஆண்டுக்கு |
கொப்பரை எடை |
: |
176.0 கிராம்/காய் |
கொப்பரை விளைச்சல் |
: |
16.2 கிலோ /மரத்திற்கு/ஆண்டுக்கு |
எண்ணெய் சத்து |
: |
70.0விழுக்காடு |
சிறப்பு குணாதிசயங்கள் |
: |
மானாவரி மற்றும் இறவைக்கு ஏற்றது அதிக கொப்பரை எடை கொண்டது கிழக்கு கடற்கரை நெட்டையை விட 15% அதிக மகசூல் |
5.வேப்பங்குளம் -4 (வி.பி.எம்.4) |
சிறப்பியல்புகள் |
: |
கிழக்கு கடற்கரை நெட்டை இரகத்தை விட (72 மாதம்) குறுகிய காலத்தில் (58 மாதம்) பூகு்கும்பருப்பின் கனம் அதிக அளவில் இருக்கும் அதிக கொப்பரை மகசூல் (3.6டன்/எக்) அதிக எண்ணெய் சத்து (67.8 சதம்) அதிக எண்ணெய் பிழித்திறன் (2.44 டன்/எக்) மானாவரி மற்றும் ரவையில் பயிரிட ஏற்றது |
மகசூல் |
: |
152 காய்கள்/மரம்/ஆண்டு |
கிலோ/எக் |
: |
26600/காய்கள் |
அதிகபட்ச மகசூல் |
: |
250 காய்கள் /மரம்/ஆண்டு |
கிழக்கு கடற்கரை நெட்டை |
: |
29.6 |
வி.பி.எம்-3 |
: |
47.6 |
உழவியல் தொழில்நுட்பங்கள்
நாற்றங்கால் பராமரிப்பு
- நெட்டை மற்றும் ஒட்டு இரகங்களில் தரமான தென்னங்கன்றுகளை பெற்றிட அறுவடை செய்த நெற்றுகளை ஒரு மாத காலத்திற்கு நிழலில் உலரவைத்து பின்னர் இரண்டு மாத காலத்திற்கு மணலில் பதப்படுத்தல் வேண்டும். குட்டை இரகமாக இருப்பின் அறுவடைக்குப்பின் நெற்றுகளை குறுகிய காலத்திற்கு நிழலில் உலரவைத்தால் போதுமானது.
- தென்னை நாற்றாங்காலில் களைகளைக் கட்டுப்படுத்திட, நாற்றுக்களை நட்டபின்பு அடுத்தடுத்து இரண்டு முறை சணப்பு விதைத்து 45 ஆம் நாள் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்திட வேண்டும். பின்னர் ஆறாவது மாதத்தில் ஒரு கைக்களை எடுத்திட வேண்டும்.
- நடவுக்கு உகந்த தென்னங்கன்றின் வயது 9-12 மாதங்களாகும்
தென்னை நடவு
- வருடத்தில் ஜீன் – ஜீலை மற்றும் டிசம்பர் – ஜனவரி மாதங்கள் அதாவது ஆடி மற்றும் தைப்பட்டங்கள் தென்னங்கன்றுகள் நடவுக்கு உகந்தவை.
- 7.5மீக்கு 7.5மீஅ அதாவது 25க்கு 25 அடி என்ற பயிர் இடைவெளியில் தென்னை கன்றுகளை நடவு செய்வது சாலச்சிறந்ததாகும்.
- மேற்கண்ட பயிர் இடைவெளியில் ஹெக்டேருக்கு 175 கன்றுகளை நடவு செய்யலாம்.
- வயல் வரப்புகளில் ஒரு வரிசையாக நடவு செய்யும்போது 6 மீ. பயிர் இடைவெளியினைப் பின்பற்றுதல் வேண்டும்.
- நடவுக்கு ஒரு கன மீட்டர் அதாவது 1 மீ நீளம், 1 மீ அகலம் மற்றம் 1 மீ ஆழத்தில் கழி எடுத்தல் வேண்டும். எரு, செம்மண் மற்றும் மணலினை 1:1:1 என்ற சரி விகிதத்தில் கலந்து குழியில் ஒர் அடி உயரத்திற்கு நிரப்பிட வேண்டும்.
நீர் மேலாண்மை
- தென்னைக்கு 6 அடி ஆரமுள்ள வட்டப்பாத்தியில் தேவைப்படும் 410 லி நீரினை மார்ச் செப்படம்ர் மாதங்களில் 5 நாட்களுக்கு ஒரு முறையும், அக்டோபர் – பிப்ரவரி மாதங்களில் 8 நாட்களுக்கு ஒரு முறையும் அளித்திட வேண்டும். வட்டப்பாத்தி நீர்ப்பாசன முறையில் வாய்க்கால் நீர்க்கசிவு மற்றும் நீராவிப்போக்கினால் ஏற்படும் நீரின் இழப்பினை ஈடுகட்ட சுமார் 135 முதல் 165 லி நீரினை அதிகப்படியாக அளித்திட வேண்டும்.
- சொட்டு நீர்ப்பாசன முறையில், மார்ச் – செப்டம்பர் மாதங்களில் ஒரு நாளைக்கு மரம் ஒன்றுக்கு 80 லி நீரும் அக்டோபர் – பிப்ரவரி மாதங்களில் நாளொன்றிற்கு 50 லி நீரும் தேவைப்படுகிறது.
- கோடைக்காலங்களில், அதிகப்படியான நீராவிப் போக்கினால் ஏற்படும் நீரிழைப்பைத் தடுத்து மண்ணின் ஈரம் காத்திட வட்டப்பாத்திகளில் நிலப்போர்வை அமைத்திட வேண்டும். ஒரு மரத்திற்கு 100 தேங்காய் உரிமட்டைகள் அல்லது 15 தென்னை மட்டைகள் அல்லது 10 செ.மீ. உயரத்திற்கு தேங்காய் நார்க் கழிவு கொண்டு நிலப்போர்வை அமைத்திடலாம்.
- வறட்சியிலிருந்து தென்னையைப் பாதுகாத்திட மரத்தினைச் சுற்றி 5 அடி தூரத்தில் ஒரு அடி அகலம் மற்றும் இரண்டு அடி ஆழத்தில் குழி எடுத்து சுமார் 100 உரிமட்டையினை குழிபாகம் மேல்நோக்கி இருக்குமாறு புதைத்து மண் அணைத்திட வேண்டும். இரண்டு தென்னை மர வரிசைகளுக்கு நடுவில் மரத்திலிருந்து 3 மீ தூரத்தில் 5 அடி அகலம் மற்றும் 1.5 அடி ஆழத்தில் குழிகள் எடுத்து உரிமட்டைகளை இட்டும் மண் அணைத்திடலாம்.
உர நிர்வாகம்
- ஐந்து வயதுடைய நெட்டை வகை தென்னை மரத்திற்கு வருடம் ஒன்றுக்கு 60 கிராம் தழை, 320 கிராம் மணி, 1200 கிராம் சாம்பல் சத்து மற்றும் 50 கிலோ தொழு உரம் தேவைப்படுகிறது.
- ஐந்து வயதுடைய வீரிய ஒட்டு தென்னைக்கு வருடம் ஒன்றுக்கு 1000 கிராம் தழை, 250 கிராம் மணி, 2000 கிராம் சாம்பல் சத்து மற்றும் 60 கிலோ தொழுஉரம் தேவைப்படுகிறது.
- மேற்கூறிய உர சிபாரிசில் கால், அரை மற்றும் முக்கால் பங்கினை முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்கு வயதுடைய தென்னை மரங்களுக்கு அளித்திட வேண்டும்.
- சிபாரிசு செய்யப்படும் உரங்களை சரிசமபாகமாகப் பிரித்து வருடத்தில் இரண்டு முறை அதாவது ஜீன்-ஜீலை, டிசம்பர்-ஜனவரி மாதங்களில் அளித்திடலாம்.
- குரும்பை கொட்டுதல் மற்றும் ஒல்லிக்காய் தோன்றுவதினை தடுத்து மகசூலினை அதிகரித்திட ஆறுமாத இடைவெளியில் வருடத்திற்கு இரண்டு முறை மரத்திற்கு 200 மி.லி. வீதம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தென்னை டானிக்கினை வேர்மூலம் செலுத்திட வேண்டும்.
- தென்னைக்கும் தேவைப்படும் தொழு உரத்திற்கு மாற்றாக ஆண்டொன்றுக்கு அடுத்தடுத்து மூன்று முறை வட்டப்பாத்தியில் 50 கிராம் சணப்பு விதைகளை விதைத்து பூப்பதற்கு முன்பாக மடக்கி உழுது மக்கச் செய்திடலாம்.
- தென்னைக்கு விவசாயிகள் தற்பொழுது கடைப்பிடித்து வரும் உரஅளவானது 1.3 கிலோ யூரியா, 2.0 கிலோ சூப்பர், 2 கிலோ பொட்டாஷ் உரங்களை அங்கக எரு இன்றி ஒரே தவனையாக வருடத்திற்கு ஒருமுறை இடுவதைக் காட்டிலும் (விவசாயிகள் முறை) தழை, மணி, சாம்பல் சத்தினை விகிதாச்சார அடிப்படையில் அதாவது 2:1:4 @ 2.5 கிலோ/மரம்/6 மாதம் என்ற அளவில் நெட்டை ரக தென்னைக்கும், 4:1:8 @4.0கிலோ/மரம்/6 மாதம் என்ற அளவில் வீரிய ஒட்டு ரக தென்னைக்கு 25 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து இடுகையில் நெட்டை ரக தென்னையின் மகசூல் 141 காய்கள் / மரம் /வருடம் (13.7%கூடுதல்), வீரிய ஒட்டு ரக தென்னையின் மகசூல் 157 காய்கள்/மரம்/வருடம் (23.6%கூடுதல்) என்ற அளவில் சராசரி மகசூல் பெறப்பட்டது.
- தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தினால் மாற்றி அமைக்கப்பட்ட தென்னைக்கான நுண்ணூட்ட கலவையினை வருடத்திற்கு தென்னை ஒன்றிற்கு 1 கிலோ என்ற அளவில் மக்கிய தொழுவுரத்துடன் கலந்து இடுகையில் நெட்டை ரக தென்னையின் மகசூல் 133 காய்கள் /மரம்/வருடம் (14.7%கூடுதல்), வீரிய ஒட்டு ரக தென்னையின் மகசூல் 168 காய்கள்/மரம்/வருடம் (17.5 கூடுதல்) என்ற அளவில் சராசரி மகசூல் இருந்தது.
பின்செய்பயிர் நேர்த்திகள்
- தென்னந் தோப்பினை வருடத்திற்கு இரண்டு முறை அதாவது ஜீன்-ஜீலை மற்றும் டிசம்பர் –ஜனவரி மாதங்களில் தென்னை மரத்தின் வேர்களை பாதிக்காத வண்ணம் உழுதிட வேண்டும்
- ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மி.லி. கிளைபாசேட் களைக்கொல்லி மற்றும் 20 கிராம் அம்மோனியம் சல்பேட் கலந்து சீராக தெளித்தும் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
ஊடுபயிர் சாகுபடி
- தென்னங்கன்றுகளை நடவு செய்து 7 வருடம் வரை, கடலை, எள், சூரியகாந்தி, மக்காச்சோளம், பயறு வகைகள், மஞ்சள் மற்றும் காய்கறிகளை மண் வளம் மற்றும் தண்ணீர் வசதியினை பொருத்து பயிர் செய்திடலாம்.
- ஏழு முதல் 20 வயதுடைய தோப்புகளில் பசுந்தாள் மற்றும் தீவனப்பயிர்களை பயிர் செய்யலாம்.
- இருபது வருடத்திற்கு மேல், வாழை, மரவள்ளி, சேனைக்கிழங்கு, மஞ்சள், அன்னாசி, கோகோ, சர்க்கரை வள்ளி கிழங்கு, சிறுகிழங்கு மற்றும் வெண்டை போன்றவற்றை பயிர் செய்திடலாம.
- அதிக லாபம் தரக்கூடிய ஊடுபயிர்களில் முக்கியமானவை மொந்தன் ரக வாழை (ரூ.23,445/எக்டேர்), பி.எஸ்ஆர் ரக மஞ்சள் (ரூ.24,312/எக்டேர்), ஸ்ரீபத்மா என்ற ரக சிறுகிழங்கு (ரூ.16,715/எக்டேர்), கோ 2 ரக மரவள்ளி (ரூ.7,809/எக்டேர்), மாரூஷியஸ் என்ற ரக அன்னாசி (ரூ 24,400/எக்டேர்) மற்றும் அக்கா அனாமிகா என்ற ரக வெண்டை (ரூ.5,490/எக்டேர்), ஆகியவனவாகும்.
பயிர் வினையியல்
தென்னையில் குரும்பை உதிர்தல் மற்றும் ஒல்லிக்காய்கள் உற்பத்தி
மரத்தின் பாரம்பரிய குணம், மண்ணின் கார உவர்தன்மை, வடிகால் வசதி மற்றும் சத்து பற்றாக்குறைகளாலும் பயிர் வினையூக்கிகளின் பற்றாகுறையினாலும் குரும்பைகள் உதிர்கின்றன. தென்னை மரத்திற்கு 200 கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் வேப்பங்குளம் நுண்ணூட்ட சத்து கலவையை 100 மி.லி/மரம் என்ற அளவில் வேர்மூலம் செலுத்துவதால் காய்பிடிப்புத் தன்மையை (3.2%) அதிகரிக்கலாம். TNAU தென்னை டானிக்கை 40 மி.லி+160 மிலி நீருடன் கலந்து வேர்மூலம் செலுத்தி குரும்பை உதிர்தலை தடுக்கலாம். பிளானோபிக்ஸ் என்ற விற்பனை பெயரைக்கொண்ட வளர்ச்சி ஊக்கியை (நாஃப்தலின் அசிட்டிக் அமிலம்) 20 பி.பி.எம். என்ற அளவில் பாளை வெடித்து முப்பது நாட்கள் கழித்து தெளிப்பதன் மூலம் காய்ப்பிடிப்பு தன்மையை அதிகரிக்கலாம்.மரம் ஒன்றுக்கு ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கிலோ பொட்டாஷியம் மற்றும் 200 கிராம் போராக்ஸ் இடுவதன்மூலம் ஒல்லிகாய்கள் உருவாதை குறைக்கலாம்.
தென்னையில் பென்சில் முனை அறிகுறி
நீண்ட காலமாக போதிய பராமரிப்பின்றி புறக்கணிக்கப்படுவதாலும் தென்னையின் வளர்ச்சி தகுந்த சூழ்நிலையில் அமையாத போதும் மரத்தின் வளர்ச்சி முற்றிலும் குறைந்து தண்டு பகுதி பென்சில் முனை போன்று காணப்படும். இந்த நிலை தொடரும் போது இறுதியில் மரம்பட்டு விடுகிறது. இக்குறைபாட்டை நிவர்த்தி செய்ய வேரின் மூலம் 200 பி.பி.எம் (2கிராம்/லிட்டர்) ஃபெரஸசல்பேட் செலுத்துவதன் மூலம் ஆரம்ப நிலையில் உள்ள மரங்களை மட்டும் காப்பாற்ற இயலும்.
மானாவரி தென்னையில் வறட்சி மேம்பாடு
50 கிலோ மக்கிய தென்னை நார்க் கழிவு இடுவது தண்ணீரை ஈர்த்து வைத்து மண்ணின் ஈரத்தை பாதுகாக்கிறது. தென்னை மரத்திற்கு வேப்பங்குளம் நுண்ணூட்டக் கலவையை காலாண்டு இடைவெளியிலும் 1 சத பொட்டாசியம் குளோரைடு கரைசலை அரையாண்டு இடைவெளியிலும் வேர்மூலம் செலுத்துவதால் மகசூல் கூடுகிறது. N.A.A. 20 பி.பி.எம் I வேர்மூலம் செலத்துவதுடன் கலப்பகோனியத்தை பாத்தியில் வளர்ப்பதால் வறட்சிதாங்கும் தன்மை அதிகரிக்கிறது.
அடித்தண்டழுகல் நோய் தாக்கப்பட்ட தென்னையில் பயிர் வினையியல்
அடித்தண்டழுகல்ட நோய் பாதிக்கப்பட்ட தென்னையை அறிகுறிகள் தெரிவதற்கு முன்பே கண்டறிய இதிலீன் டைஅமின் டெட்ரா அசிடிக் அமில வேதியல் முறை பயனுள்ளதாக உள்ளது இது தவிர, நோய் தாக்கிய மரங்களில் கீழ்க்காணும் வினையியல் மாற்றங்கள் காணப்படுகின்றன.
- குறைந்த நீராவிப் போக்கு (8.06 µg/cm2/sec.)
- அதிக மின் கடத்தும் தன்மை (3.14 sec/cm)
- அதிக மின்கடத்தும் தன்மை (18.67 µmohs/sec)
மேலும் அடித்தண்டலுகல் நோய் தாக்கப்பட்ட மரங்களின் திசுக்களில் பச்சையம், மாவுச்சத்து, அமினோ அமிலங்கள், புரதம், லிக்னின், நுண்ணூட்டம் மற்றும் பேரூட்டங்கள் ஆகியவை குறைவாகவும், சர்க்கரைப்பொருட்கள், புரோலின் ஆகியவை அதிகமாகவும் காணப்பட்டன.
பெராக்சிடேஸ், பாலிடினால் ஆக்சிடேஸ், நைட்ரேட் ரிடக்டேஸ் ஆகிய நொதிப்பொருட்கள் அடித்தண்டலுகல் நோய் தாக்கப்பட்ட தென்னையில் ஆரோக்கியமான தென்னை மரங்களை விட அதிகமாக காணப்பட்டன.
- குறைந்த ஸ்டார்ச்சின் அளவு(6.83 mg/g)
- அதிக சர்க்கரையின் அளவு(1.56%)
- பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் குறைந்த அளவே காணப்படும்
- அதிகமான நைட்ரேட் ரிடக்டேஸ் செயல்பாடு ( 3.13 µg/g/hr)
- அதிக பாலிஃபீனால் ஆக்ஸிடேஸ் (19.78 unit/min) மற்றும் பெராக்ஸிடேஸ் அளவு (2300 u/min)
மண்ணியல்
தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் பெளதிக மற்றும் வேதியில் தன்மைகளை அறிய மேற்கொண்ட ஆய்வில். பண்ணையின் மண் வகை மணல் வகையை (சேண்டிலோம், லோமி சேண்ட்) சார்ந்தது என அறியப்பட்டது. இதில் தழை (220-450கி/எக்) மற்றும் சாம்பல் சத்துக்கள் (110-220 கி/எக்) மத்திய அளவிலும், மணி சத்து அதிக அளவிலும் (> 22.00கி/எக்) உள்ளன. நுண்ணூட்டச் சத்துக்ளில் துத்தநாகம் (1.2பிபிஎம்), தாமிரம் (0.6 பிபிஎம்) மற்றும் மாங்கனீஸ் (1.2 பி.பி.எம்) ஆகியன பயிர்களுக்கு கிட்டும் அளவுக்கு கீழே உள்ளன. ஆனால், இரும்பு சத்து (3.7 பிபிஎம்) பயிர்களுக்கு கிடைக்குமளவுக்கும் மேல் உள்ளது.மண்ணில் அங்கக அளவு குறைந்தும் (< 0.50%) கார அமில நிலை (pH) நடுநிலை சார்ந்தும் கரையும் உப்புகளின் அளவு குறைவாகவும் உள்ளன.
பூச்சியியல்
காண்டாமிருக வண்டு
- எருக்குழிகளில் வளரும் புழுக்களை அழித்திட கார்பரில் 2 கிராம் நனையும் தூளை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து மூன்று மாத இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
- ஒரு பங்கு போரேட் என்ற குருணை மருந்தை 4 பங்கு குறுமணலுடன் கலந்து குருத்துக்கு கீழ் உள்ள மூன்று வரிசை மட்டை இடுக்குகளில் மூன்று மாத இடைவெளியில் இட வேண்டும்.
- துவாரங்களுடன் கூடிய சிறிய பாலித்தீன் பைகளில் (அ) மஸ்லின் துணிகளில் 2.5 கிராம் போரேட் குருணை மருந்தினை இட்டு, மரத்திற்கு இரண்டு பாக்கெட்டுகள் வீதம் நுனிக்குருத்தைச் சுற்றி உள்ள இரண்டு மட்டை இடுக்குகளில் வைக்கலாம்.
- ரைனோலூார் என்ற இனக்கவர்ச்சி பொறியினை ஒரு எக்டருக்கு ஒன்று வீதம் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.
சிவப்பு கூன்வண்டு
- 10 மில்லி மோனோகுரோட்டோபாஸ் மருந்துடன் 10 மில்லி தண்ணீர் கலந்து வேர் மூலம் 45 நாள் இடைவெளியில் தொடர்ந்து 3 முறை உட்செலுத்த வேண்டும்.
- தாக்கப்பட்ட தண்டு தூவாரத்தின் வழியாக 2 அலுமினியம் பாஸ்பைடு (செல்பாஸ்) மாத்திரைகளை இட்டு துளைகளை மணல் சிமெண்ட் கலவை அல்லது களிமண் கொண்டு அடைக்க வேண்டும்.
- பெர்ரோலூர் என்ற இனக்கவர்ச்சி பொறியை எக்டருக்கு ஒன்று வீதம் வைத்து சிவப்பு கூண்வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
ஈரியோபையிட் சிலந்தி
- வெடித்த பூம்பாளைகளில் இதன் தாக்குதல் அதிகமாக காணப்படுவதால் 2 சதம் டைக்கோபால் வெடித்த பூம்பாளைகளின் மேல் தெளித்து இதன் தாக்குதலை குறைக்கலாம்.
- தாக்குதல் அதிகமாக காணப்படும் மரங்களில் மரம் ஒன்றக்கு ஒவ்வொரு ஆண்டும் பூரியா1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் – 2 கிலோ, பொட்டாஷ்-3.5 கிலோ, ஜிப்பசம் -1 கிலோ, மக்னீசியம் சல்பேட் – 500 கிராம், போரெக்ஸ் – 50 கிராம் வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ, தொழு உரம் -50 கிலோ இடுவதன் மூலம் மரத்தின் வீரியத்தை அதிகரிக்கச் செய்து தாக்குதலின் அளவைக் குறைக்கலாம்.
- தாவர சிலந்தி கொல்லிகளான அசாடிராக்டின் 1 சதம் 5 மிலி /லிட்டர், வேப்பெண்ணெய் 30 மிலி/லிட்டர், அசாடிராக்டின் 1 சதம் 5மில/லிட்டர் முறையே 45 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து தெளிக்கவும்.
- தாவர சிலந்திக் கொல்லிகளைத் தெளிக்க முடியாத உயரமான தென்னை மரங்களில் அசாடிராக்டின் 1 சதம் 10 மில்லி மருந்தை 10 மில்லி தண்ணீரில் கலந்து வேர் மூலம் 45 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை செலுத்தி சிலந்தியின் சேதத்தை ஒரளவு கட்டுப்படுத்தலாம்.
எலி, அணில் மற்றும் மரநாய்
- எலி மற்றும் அணில்களை கட்டுப்படுத்த கீழ் நோக்கி வளைந்த முக்கோண வடிவ சாய்வான தகரத்தை மரத்தில் 3 மீட்டர் உயரத்தில் பொருத்துவதால் இப்பிராணிகளால் மரத்தில் எளிதில் ஏறமுடியாது. புரோமோடைலான் (0.005சதம்) தயார் நிலை கேக்கை மரத்திற்கு 10 கிராம் வீதம் 12 நாட்கள் இடைவெளியில் இருமுறை வைக்கவும்.
- மரநாய் இரவில் மட்டும் நடமாடும் பாலூட்டி வகை பிராணியாகும். கீரியைப் போன்ற தோற்றமுடைய இவற்றின் எடை சுமார் 2 முதல் 2.5 கிலோ வரை இருக்கும். இவற்றின் வாய் கூர்மையாக நீண்டு, கூறிய பற்களைக் கொண்டிருக்கும். தென்னை அராய்ச்சி நிலையம், வேப்பங்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பினால் ஆன பொறி மரநாய்களை கட்டுப்படுத்துவதில் சிறந்ததாக கண்டறியப்பட்டது.
பயிர் நோயியல்
தென்னையில் காணப்படும் வாடல் நோய் (அடித்தண்டழுகல் நோய்) தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு பரவியுள்ளது என்று கண்டறிவதற்காகவும், நோயின் காரணி மற்றும் அதன் நிர்வாக முறைகளைக் கண்டறிவதற்காகவும் 1965 ஆம் ஆண்டு தமிழக அரசால் அப்போதைய தஞ்சை மாவட்டத்தின் முத்துப்பேட்டையில் தென்னை வாடல் நோய் ஆராய்ச்சித் திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டம் 1973-ஆம் ஆண்டு அகில இந்திய ஒருங்கிணைந்த தென்னை, எண்ணெய்ப் பனைத் திட்டத்துடன் சேர்க்கப்பட்டது. 1.4.1977 அன்று தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளத்துடன் இணைக்கப்பட்டது.
அடித்தண்டழுகல் நோய்
தென்னை வாடல் நோய், தஞ்சாவூர் வாடல் நோய் என்ற பெயர்களில் அழைக்கப்படும் அடித்தண்டழுகல் நோய், தமிழ்நாட்டில் தென்னை பயிரிடப்படும் எல்லா மாவட்டங்களிலும் பரவியுள்ளது. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில், மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள தென்னந் தோப்புகளில் 40 சதவிகித மரங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.
நோயின் அறிகுறிகள் ஆய்வு செய்யப்பட்டு அட்டவணைப் படுத்தப்பட்டன. தென்னை மரத்தின் தண்டின் அடிப்பகுதியிலிருந்து செம்பழுப்பு நிறத்தில் சாறுவடிதல், தொடர்ந்து சாறுவடிதல் மேல்நோக்கிப் பரவுதல், மட்டைக்ள காய்ந்து தொங்குதல், குரும்பைகள், இளங்காய்கள் கொட்டுதல், வேரழுகல் ஆகியன இந்நோயின் முக்கிய சிறப்பு அறிகுறிகளாகும். நோயின் இறுதி கட்டத்தில் மரம் பட்டுவிடுகிறது.
நோயின் காரணி கானோடெர்மா லூசிடம் என்ற பூஞ்சாளம் என்று கண்டறியப்பட்டு அதன் நோயுண்டாக்கும் திறன் நிரூபிக்கப்பட்டது.நோயின் அளவை கணக்கிட ஒரு சூத்திரம் கண்டறியப்பட்டது.நோயின் அளவு = 23.6+17.7h+3.6r-0.6 l இந்த சூத்திரத்தில் ‘h’என்பது மரத்தில் சாறுவடிதல் பரவியுள்ள உயரத்தை (மீட்டரில்) குறிக்கும். ‘r’ என்பது இலை எந்த அளவு சிறுத்துள்ளது (0.4 அளவில்) என்பதையும், ’1’ என்பது கொண்டைப்பகுதியில் உள்ள பசுமையான இலைகளின் எண்ணிக்கையும் குறிக்கும்.
மண்ணின் வெப்பநிலை அதிகரிக்கும்போது நோயின் தீவிரம் அதிகரிக்கின்றது. கோடையில் முறையாக தொடர்ந்து நீர்ப்பாசனம் செய்வது மண்ணின் வெப்ப அளவை குறைத்து நோயின் தீவிரத்தை குறைக்கின்றது.மரம் ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதால் அடித்தண்டழுகல் நோய் குறைகின்றது.வாழை ஊடுபயிர் செய்யப்படும் தென்னந் தோப்புகளில் அடித்தண்டழுகல் நோயின் அளவு குறைகின்றது.
நோய்தாக்கிய தென்னை மரங்களில் ஆறு மாதங்களுக்கு பதனீர் இறக்குவதால் நோயின் தீவிரம் குறைகின்றது. இம்மரங்களில் பதனீர் இறக்கிய மூன்று வருடங்களுக்கு பிறகு கூட நோயின் தீவிரம் அதிகரிக்கவில்லை. பதனீர் இறக்கிய மரங்களில் சர்க்கரைச் சத்து குறைவாகவும் ஃபீனால் அளவு அதிகமாகவும் இருந்தது.
ஆரியோபஞ்சின்-சால் 1.3 கிராம் +0.5 கிராம் மயில்துத்தத்தை 100 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்மூலம் உட்செலுத்துவது அல்லது 2 மில்லி லிட்டர் டிரைடெர்மார்ப் மருந்தை 100 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்மூலம் உட்செலுத்துவது மற்றும் 40 லிட்டர் 1 சதபோர்டோ கலவையை தென்னை மரத்தைச் சுற்றி பாத்தியில் ஊற்றுவது நோய்க்கட்டுப்பாட்டில் நல்ல பலனை கொடுக்கின்றது. மேற்கூறிய மருந்துகளை மூன்று மாத இடைவெளியில் தொடர்ந்து மூன்று முறை இடவேண்டும்.கால்சியம் சல்பேட் மற்றும் மக்னீசியம் சல்பேட் ஆகியவைகளை மரம் ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு தலா 500 கிராம் வீதம் இடுவது நோயின் தீவிரத்தை குறைக்க உதவுகின்றது.
டிரைக்கோடெர்மா ஹார்சியானம் மற்றும் சூடோமோனாஸ் புளுரசன்ஸ் ஆகிய எதிர் உயிரிகளை ஆறுமாதத்திற்கு ஒரு முறை தலா 50 கிராம் வீதம் 50 கிலோ மக்கிய சாணி எருவுடன் கலந்து இடுவதால் நோய் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்படுகின்றது.பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிரை (200 கிராம்), 10 கிலோ மக்கிய சாணி எருவுடன் கலந்து இடுவதால் மரத்தின் வேர் வளர்ச்சி அதிகரித்து நோயின் அளவு குறைந்து தேங்காய் உற்பத்தி அதிகரிக்கின்றது.
எத்திலீன் டை அமின் டெட்ரா அசிட்டிக் அமிலம் டைசோடியம் உப்பை உபயோகித்து அடித்தண்டழுகல் நோயின் அறிகுறிகள் மரத்தில் தெரிவதற்கு 5-11 மாதங்களுக்கு முன்பே நோயுற்ற மரங்களை தெரிந்து கொள்ள ஒரு வேதியில் ஆய்வுச்சோதனை கண்டறியப்பட்டது.ஆர்த்தூபினாந்தரலின் ஆய்வு முறை, டிரைபினால் டெட்ராசோடியம் குளோரைடு ஆய்வுமுறை ஆகிய இரசாயன ஆய்வு முறைகளும் அடித்தண்டழுகல் நோயை நோயின் அறிகுறிகள் தெரிவதற்கு முன்பே கண்டறிய மிகவும் உபயோகமாக உள்ளன.
”எலிசா” என்ற ஊணீர் சோதனை மூலம் நோயுற்ற மரங்களை நோயின் அறிகுறிகள் தெரிவதற்கு ஆறுமாதங்களுக்கு முன்னரே கண்டறிய முடியும்.கிழக்குக் கடற்கரை நெட்டை x நோய் தாங்கி வளரும் கிழக்குக் கடற்கரை நெட்டை என்ற ஒட்டு இரகம், நோய்கிருமிகள் நிறைந்த மண்ணில் நோயைத் தாங்கி வளர்ந்து, கிழக்குக் கடற்கரை நெட்டை ரகத்தைவிட 27 சத அதிக மகசூல் கொடுப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இலைக்கருகல்
பெஸ்டலோஷியாப்சிஸ் பால்மேரம் என்ற பூசணத்தால் ஏற்படும் சாம்பல் இலைக்கருகள் நோய் எல்லா தென்னந்தோப்புகளிலும் பரவலாக காணப்படுகின்றது. பொட்டாஷ் உரம் அதிகமிடுவதால் (மரத்திற்கு ஆண்டொன்றிற்கு 4 கிலோ முயூரியேட் ஆப் பொட்டாஷ்) மரத்திற்கு சாம்பல் இலைக்கருகல் நோய்க்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது
தயோபனேட் மீதைல் அல்லது கார்பண்டசிம் 2 கிராம் மருந்தை 100 மி.லி. தண்ணீரில் கலந்து வேர்மூலம் உட்செலுத்துவதால் நோயின் அளவு குறைகின்றது.
சமீபத்தில் தென்னை மரத்தை கொல்லக்கூடிய ஒரு இலைக்கருகல் கண்டறியப்பட்டது. இது லாசியோடிப்ளோடியா தீயோபுரோமே (போட்ரியோடிப்ளோடியா தீயோபுரோமே) என்ற பூசணத்தால் ஏற்படுகின்றது.
டிரைடெமார்ப் மருந்தை 4 மில்லி லிட்டர் எடுத்து 100 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்மூலம் உட்செலுத்துவதுடன் தென்னை டானிக் 40 மில்லி லிட்டர் + 160 மில்லி லிட்டர் தண்ணீர் கலந்து வேர்மூலம் உட்செலுத்துவதால் இந்த நோயின் தீவிரம் குறைகின்றது.
குரும்பை உதிர்தல்
கொக்லியோபோலஸ் ஹவாயன்சிஸ் என்ற பூஞ்சாணம் தென்னையில் குரும்பைகள் கொட்டுவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பது முதன் முதலாக தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளத்தில் கண்டறியப்பட்டது. இதைக்கட்டுப்படுத்த, 1-4 மாதங்கள் வயதுடைய தென்னங்குலைகளில் 0.2 சத மான்கோசெப் மரந்தை தெளிக்க வேண்டும்.
விரிவாக்கப்பணிகள்
- ஒவ்வொரு ஆண்டும் 40,000 நெட்டை ரகம் மற்றும் 20,000 வீரிய ஒட்டு ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நியோகிக்கப்படுகின்றன.
- தென்னை நாற்றங்கால் பராமரிப்பு, காளான் வித்துக்கள் உற்பத்தி, உணவுக்காளான் உற்பத்தி தென்னை நார்க்கழிவை மக்க வைத்தல், மண்புழு உரம் தயாரித்தல், தென்னையில் மூலிகைப்பயிர்கள் ஊடுபயிர் சாகுபடி, தேனீ வளர்த்தல் ஆகிய தொழில் நுட்பங்களில் விவசாயிகள், தொழில் முனைவார், வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
- தொலைபேசி மற்றும் தபால் மூலமாக தென்னை சம்பந்தமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு தகுந்த தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
- வயல் வெளிகள் பார்வையிடப்பட்டு புதிய பிரச்சனைகள் கண்டறியப்பட்டு தீர்வுக்கான தொழில் நுட்பங்கள் வழங்கப்படுகின்றன. இவை செய்தித்தாள்கள், கையேடுகள் மூலமும் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படுகின்றன.
- ஆராய்ச்சி நிலையத்தின் புதிய கண்டுபிடிப்புகளை விவசாயிகளிடையே பரப்புவதற்காக செயல் விளக்கத்திடல்கள் அமைக்கப்படுகின்றன.
- நவீன தொழில் நுட்பங்கள் வானொலி, தொலைக்காட்சி மூலம் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன.
|