வேளாண் ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரம்
விரிஞ்சிபுரத்தில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாட்டின் வடக்கிழக்கு மண்டலப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையம் வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி தாலுக்காவின் விரிஞ்சிபுரம் கிராமத்தில் உள்ளது. இந்நிலையம் சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையின் வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இருப்பிடம்
அட்சரேகை: 12 டிகிரி வடக்கு
தீர்க்க ரேகை : 79 டிகிரி கிழக்கு
மொத்த பரப்பு : 23.58 ஏக்கர்கள்
பாசனப்பகுதி : 15.30 ஏக்கர்கள்
மானாவாரி : 08.28 ஏக்கர்கள்
மண்வகை : மணல் கலப்பு மண்
PH : 7.8
வருடாந்திர சராசரி மழைப் பொழிவு : 860 மிமீ
நடுமட்ட அதிகபட்ச வெப்பநிலை : 33.1 டிகிரி C
நடுமட்ட குறைந்தபட்ச வெப்பநிலை : 22.8 டிகிரி C
வானிலை இயல் : II வகுப்பு விண்காணகம்
தோற்றம்
இந்நிலையம் 1969ல் “வாழை ஆராய்ச்சி நிலையமாக” வேளாண் துறையால் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய குறிக்கோள், வாழை பண்பகப் பண்ணை பராமரிப்புக்கு வின் பாசன நிலையில் வாழையின் புதிய இரகங்களின் அறிமுகம் மற்றும் மதிப்பாய்வு செய்வது ஆகும். 1981-ல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டது. 1990-ல் இந்நிலையம் வேளாண் பயிற்சி பற்றிய ஆய்வு மேற்கொள்ள “வேளாண் ஆராய்ச்சி நிலையம்” என்று மேம்படுத்தப்பட்டது.
குறிக்கோள்கள்
- வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் விரிவாக்க பணியாளர்கள் மற்றும் உழவர் சமதாயத்தின் தேவைகளை நிறைவேற்றுதல்
- பருப்பு வகை, எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறிகளுக்கான விதை வல்லுநரின் விதைகளை உற்பத்தி செய்தல்.
- உயர் விளைச்சல் தரும் தலைவிரிச்சான் சோள ரகங்களின் மேம்பாடு
- உயர் மது விளைச்சல் தரும் சோள ரகங்களுக்கான இனப்பொருக்க திட்டங்கள் மேற்கொள்ளுதல்
- பச்சைபயறு இரகங்கள் தேர்வு மற்றும் மதிப்பீடு
- உழவர்களுக்கு வயல்வெளி சோதனை / வயல்நிலை செயல் விளக்கம் நடத்துதல்
- பயிர் பாசனத்துக்கு தேவையான தோல் பதனிடும் கழிவுப் பொருள் மறு பயன்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்தல்
- வாழை பண்பகப்பண்ணை பராமரிப்பு மதிப்பீடு மற்றும் வாழையில் புதிய ரகங்களை அறிமுகம் செய்தல்
- நீளமான பப்பாளி வகையை சேகரித்தல் மற்றும் மதிப்பிடல்
- கத்தரிக்காயின் (முள்கத்தரி), முள் செரிந்த உள்ளுர் பயிரிடும் வகைகளை மேம்படுத்துதல்
- மல்லிகையில் காணப்படும் மொட்டுப்புழு கட்டுப்படுத்த மேலாண்மை செய்தல்
- உயிரியல் முறைக் கட்டுப்பாட்டுக் காரணிகள் மூலம் கனகாம்பரம் வாடலை கட்டுப்படுத்துதல்
திட்ட தகவல்கள்
வாழை ஆராய்ச்சி திட்டம்
இத்திட்டம் 1.12.1980ல் இருந்து இந்நிலையத்தில் இயங்கி வருகிறது. வாழை பண்பகப் பண்ணை பராமரிப்பு தவிர பாசன நிலையில் புதிய வாழை ரகங்கள் (Musa spp) அறிமுகம் மற்றும் மதிப்பாய்வு ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள. ஆகும்.
இத்திட்டம் 1.4.1984ல் தொடங்கப்பட்டது.
குறிக்கோள்கள்
- சோள ரகமான உயர் விளைச்சல் தரும் தலைவிரிச்சான் வகையை வெளிப்படுத்துதல்
- நீளமான இறுகிய மற்றும் தடித்த கம்பு ரகங்கள் வெளிப்படுத்துதல்
- பச்சைபயறு மற்றும் நிலக்கடலையில் விதை வல்லுநரின் விதை உற்பத்தி
- இனிப்பு சோள ரகங்களுக்கான மேம்பாடு
தேசிய வேளாண்மை ஆராய்ச்சித் திட்டம் (NARP) பிரிவு II
இத்திட்டம் 1.11.1988ல் இருந்து இம்மையத்தில் இயங்கி வருகிறது.
குறிக்கோள்கள்
- வயல் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் மேம்பாடு
- வயல் மற்றும் தோட்டக்கலைக்கான மொழில்நுட்ப உற்பத்தி வெளிப்படுத்துதல்
- பல்வேறு வயல் பிரிவுகளுக்கான களை மற்றும் நீர் மேலாண்மை ஆய்வுகள்
- வாழை, கத்தரிக்காய், தக்காளி, சோளம், பருப்புவகை, அவரை முதலிய பயிர்களுக்கான பூச்சி மற்றும் நோய் மேலாண்மை ஆய்வுகள்
பயிர் மருத்துவ மையம்
இத்திட்டம் 24.09.1880ம் ஆண்டில் இருந்து இந்நிலையத்தில் இயங்கி வருகிறது.
குறிக்கோள்கள்
- பூச்சிகள், நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்ற பண்ணை இடர்பாடுகளை கண்டறிந்து அதற்கான குறைகளை உழவர்களுக்கு வழங்குதல்
- உழவர்கள் வயலில் புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய வயல்வெளி சோதனைகளை நடத்துதல்
- பூச்சிகள் மற்றும் நோய்களின் நிகழ்வுகள் மற்றும் அதன் தாக்கத்தை முன்னெச்சரிக்கை செய்தல் பற்றிய ஆய்வு மேற்கொள்ளுதல்
- புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் காளான் சாகுபடி பற்றிய பயிற்சிகள் உழவர்கள், விரிவாக்க ஊழியர்கள் மற்றும் பெண்களுக்கு பயிற்சியளித்தல்.
துறை / நூலகங்கள்
ஆய்வகம்
நன்முறையில் நிறுவப்பட்ட மண் அறிவியல், பூச்சியியல் மற்றும் நோயியல் ஆய்வகங்கள் இந்நிலையத்தில் உள்ளன.
தொழில்நுட்பங்கள்
பயிர்பெருக்கம் மற்றும் மரபியல்
- பச்சைபயிறு VRM(Gg) 1, தூயவழித் தேர்வு மூலம் 2000ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இது ஏக்கருக்கு 1020.4 கிலோ உயர் விளைச்சலை பதிவு செய்தது.
- சோள பண்பகப் பண்ணை வரிசை தொவது CSV 15, SPV 88, TNS297, SSVT-SR-350-ISU, 192-15-3, 2029-42 மற்றும் 2026-1-1-1 உயர் மது விளைச்சல் இனிப்பு சோளம் விரிசையாக தேர்வு செய்யப்பட்டது.
- 105 சோள வளர்ப்பு மதிப்பீடு, தலைவிரிச்சான் வகை ஆகியவை சீரிய வளர்ச்சியாக கருதப்படுகிறது.
- VRM (Gg) 1 –ன் 40 கிலோ TFL தவிர பச்சைபயிரின் விதை வல்லுநர் விதை K.851-கின் 3887 கிலோ மாநில வேளாண. துறை மற்றும் உழவர்களுக்கு வழங்கப்படுகிறது.
- VMS 98001 இனிப்பு சோளம் வளர்ப்பு இரட்டை பயனுக்காக தே்வு செய்யப்பட்டுள்ளது. அவை மது மற்றும் தானிய உற்பத்தி
மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல்
- C01 மற்றும் ஆப்பிரிக்க நாட்டை மக்காச் சோளம், C013 ராகி மற்றும் BN2 புல் ஆகியவை தோல் பதனிடுஞ்சாலை மாசு பிரிவுக்கு உகந்த பயிர்களாக கண்டறியப்பட்டுள்ளது.
- பதனிடுஞ்சாலை மாசு பிரிவில் தேங்காய் நார் கழிவு உரம் ஏக்கருக்கு 10 டன்கள் பயன்பாடு சிறந்த மண் திருத்தமாக கண்டறியப்படுகிறது.
- மண்ணில் பதனிடுஞ்சாலை கழிவு பொருள் பயன்பாடு நீரழுத்தக் கடத்துமை 7.48ல் இருந்து 3.35தாகவும், மண் புரைமை 41.2ல் இருந்து 31.6%-மாகவும் குறைந்துள்ளது. மேலும் பரும அடர்த்தி 1.4 – 1.5% g/cc ஆக உயர்ந்துள்ளது.
- பெருனாம்பேட் மற்றும் ஆம்பூர் மண்டலங்களின் நிலத்தடி நீரை பதனிடுஞ்சாலை கழிவுப்பொருட்கள் தூய்மையற்றதாக மாற்றுகிறது.
- மாசுபட்ட நிலத்தடி நீர் மாதிரி மின்கடத்துதிறன் நஞ்சு அளவு EC 9-10 வரை குறிப்பிடுகிறது.
- சோடியம் மற்றும் குளோரைடு போன்ற தாவர நச்சு பொருட்கள் தெிகபட்ச மட்டத்தை தாண்டி 2935 mg/1 ஆகி பதிவாகியுள்ளது.
பயிர் வினையியல்
- மானாவாரி பருப்பு வகை, znso4 (உளுந்து) அல்லது Mnso4 (பச்சைபயறு) 100ppm உடன் விதைச்சீராக்கம் விளைச்சலை 18.6% மற்றும் 15.3% அதிகமாகிறது.
- பூ பூக்கும் நிலை மற்றும் காய் வளரும் பருவங்களில் DAP (2%) இலைவழித்தெளித்தல் பாசனம் பெற்ற பச்சைபயறு (14.7%) மற்றும் உளுந்து (17.6%) விளைச்சலை உயர்த்துகிறது.
- நெல், தக்காளி, கத்தரிக்காய், வெள்ளரிக்காய், நிலக்கடலை, தட்டைப்பயறு, வெண்டைக்காய் மற்றும் குதிரை மசால் ஆகியவை தொட்டி வளர் சோதனையில் தோல் பதனிடுஞ்சாலை கழிவுகள் ஏக்கருக்கு 80 டன்கள் வரை தாவர நச்சு விளைவுகளை உருவாக்குவதில்லை என்று கூறப்படுகிறது.
வேளாண் நுண்ணுயிரியியல்
- தோல் பதனிடுஞ்சாலை கழிவுகளில் உள்ள குரோமியம் நச்சு பொருளை நீர்த்தாமரை உறிஞ்சிக் கொள்ளும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
- தோல் பதனிடுஞ்சாலை கழிவுகளின் நச்சுத் தன்மைளை பேக்டீரியா சூடோமோனஸ் வகைக் குறைக்கிறது.
தோட்டக்கலை
- பூவன் வாழையில் குலையின் கடைசி பகுதி திறந்து 15 நாட்களுக்கு பிறகு 2,4-D (25பிபிஎம்) என்ற அளவில் தெளிப்பதால் குலையின் அளவை அதிகரிக்கலாம்.
- வேப்பம் புண்ணாக்குடன் கலக்கப்பட்ட யூரியா உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் “ரஸ்தாளி” வாழையில் காணப்படும் நூற்புழுவையும் கட்டுப்படுத்துகிறது.
- பூவன் வாழையின் முதல் மற்றும் இரண்டாம் கட்டைபயிறுக்கு, முக்கிய பயிர்களுக்கு தேவைப்டும் அளவு ஒரு மாதத்திற்கு 110:35:330 gNPK அளவு உரம் தேவைப்படுகிறது.
- குட்டை காவென்டிஸ் வாழை 1.5 மீ X 1.5 மீ (ஏக்கருக்கு 4444 தாவரங்கள்) அளவிற்கு மாறாக ஏக்கருக்கு 1,358 வாழை மரங்களை அதிகப்படியாக வளர்க்கலாம்.
- முளைக்கும் முன் களைக்கொல்லியாக பென்டிமேததலினை ஏக்கருக்கு 1 கிலோ என்ற விததிதிலும் தொடர்ந்து முளைத்தபின் களைக்கொல்லியாக ஈமாசத்தேபியர் ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவிலும் உபயோகித்து தக்காளியில் காணப்படும் களைகளை கட்டுப்படுத்தலாம்.
- முன்றாம் மாதத்தில் முதல் மண் அணைப்பிற்கு பிறது 30 நாட்கள. கழித்து நடவு செய்து 30 நாட்கள் கழித்தும் கிளைபாஸ்பேட், கிலோ / ஹெக் என்ற அளவில் அளிப்பதால் குலையின் எடையை அதிகரிக்கலாம்.
- ஒவ்வொரு மாதத்திற்கும் 18g அசோஸ்பைரல்லத்தை மூன்று பகுதியாக (அடித்தள, நடுகைக்கு பின் 3வது மற்றும் 5வது மாதங்களின்) பயன்படுத்தினால் 1:3:17 விகித அளவிற்கு செலவு ஆதாயத்துடன் வாழையின் விளைச்சல் அதிகரிக்கும்.
- VMB7 என்ற “முள்ளுகத்தரி” உள்ளுர் கத்தரிக்காய் ரகம் சீரிய ரகமாகி கண்டறியப்பட்டுள்ளது.
வேளாண் பூச்சியியல்
- பூக்கும் பருவத்தில் 10 நாட்கள் இடைவெளியில் 5% வேப்பங்கொட்டைக்கரைசல் தெளிப்பதன் மூலம் கத்தரியில் பழம் துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
- பூக்கும் பருவத்தில் 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை 5% வேப்பங்கொட்டைக்கரைசல் தெளிப்பதால் துவதைக் காய்ப்புழு மற்றும் துவரை ஹலிகோவர்பா ஆர்மிஜெரா ஆகியவை எதிராக செயல்படும்.
- விதைத்தலுக்கு வின் 10வது மற்றும் 20வது நாளில் வேப்பங்கொட்டை கரைசலை தெளித்தால் சோளக்குருத்து ஈயைக் கட்டுப்படுத்தலாம்.
- விதைத்தலுக்கு பின் 75 மற்றும் 90 நாட்கள் வேப்பங்கொட்டைக் கரைசலைப் பயன்படுத்தினால் எள்ளின் பொட்டு நிற வாய்ப்பூச்சியை கட்டுப்படுத்தலாம்.
- ஒரு ஏக்கருக்கு 600கி அசிப்பேட் மற்றும் ட்ரைசோபேட் ஏக்கருக்கு 500 மிலி 75 மற்றும் 90 நாட்கள் விதைத்தலுக்கு பின் தெளித்தல். இது எள்ளின் பொட்டுநிற வாய்ப்பூச்சிக்கு எதிராக செயல்படும்.
பயிர் நோயியல்
- டிரைகோடெர்மா விரைடு மற்றும் டி கர்சியானம் மற்றும் வேப்பன் பிண்ணாக்கு சேர்ந்து அளிப்பதால் பண்ணையில் தக்காளிப் பயிரைத் தாக்கும் நோய்களை குறைக்கலாம்.
- மூன்று வார இடைவெளியில் மூன்று முறை மேன்கோசெப் 0.2% தெளித்தல் தக்காளியில் காணப்படும் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்தலாம்.
- மூன்று வாரங்கள் இடைவெளியில் கார்பென்டைசம் 0.2% தெளித்தால் ரோஜா பயிரில் காணப்படும் கரும்புள்ளி நோயை கட்டுப்படுத்தலாம்.
- கார்பென்டைசம் 80 mgl கிழங்கு மாத்திரையாக பயன்படுத்தினால் வாழையில் காணப்படும் பனாமா நோயைக் கட்டுப்படுத்தலாம்.
விரிவாக்க நடவடிக்கைகள்
- வயல்களை பார்வையிடுதல் மற்றும் குறைகளை கிளைதல்
- பண்ணை ஆலோசனை சேவை வழங்குதல்
- நிலையம் / நிலையம் சாரா கூட்டம் நடத்துதல்
- புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சிகளை புகட்டுதல்
- விரிவாக்க இலக்கியங்கள் விநியோகம் செய்தல்
- வானொலி மற்றும் பண்ணை இதழ்களின் பிரபலமான கட்டுரைகளை வெளியிடுதல்
- மாதாந்திர மண்டல பயிலரங்கு கூட்டங்கள் மூலம் புதிய பண்ணை தொழில்நுட்ப பரிமாற்றம் செய்தல்
- பூச்சி மற்றும் நோய் கவனக் கண்காணிப்பு கூட்டங்கள் நடத்துதல்
- த.வே.ப.க மற்றும் IVDP திட்டத்தின் கீழ் கிராமங்களை தத்து எடுத்தல்
|