விற்பனை வழிகள்
- பொருள்: தொலைதூர கிராமங்களில் உள்ள விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும். வேளாண்மை பொருட்களானது, புறநகரம் மற்றும் நகர பகுதிகளில் உள்ள நுகர்வோர்களுக்கு கிடைக்கமாறு செய்தல். இந்த உற்பத்தி பொருளானது நுகர்வோர்களின் பயன்பாட்டிற்கும், உட்கொள்வதற்கும் உணவு பொருளாக அமைகிறது. கடைசி நிலையான நுகர்வோர்களுக்கு கிடைக்கும் வரை பல்வேறு முகாம்கள் மற்றும் செயற்பாடுகள் உள்ளது. நுகர்வோர்கள் அல்லது தொழில் பகுதிக்கு உற்பத்தி பொருட்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல்வேறு விற்பனை வழிகள் அல்லது வழிகளை உள்ளடக்கிய பகிர்மானம் முறையின் மூலம் சென்றடைகிறது. இந்த பகிர்மானம் என்பது உற்பத்தியாளர்களிடம் இருந்து உற்பத்தி பொருட்கள் அதற்குரிய வழிபாதைகள் மூலம் நுகர்வோர்கள் அல்லது தொழில் பகுதிக்கு அனுப்பப்படுகிறது.
- விற்பனை வழிகளை நிர்ணயிக்கும் காரணிகள்:
உற்பத்தி அல்லது வர்த்தக பொருட்களை பொறுத்து பல்வேறு விற்பனை பகிர்மான வழிகள் உள்ளன. ஒவ்வொரு வர்த்தக பொருட்களுக்கும் விற்பனை வழிகளில் லேசான மாறுபாடு இருக்கும். இதன் காரணிகள் பின்வருமாறு.
- அமுக்கத்தக்க நிலையில் உள்ள உற்பத்தி (எ-கா) பழங்கள், காய்கறகள், மலர்கள், பால்பொருட்கள், இறைச்சி போன்றவை.
- அளவு மற்றும் எடை - பருத்தி, தீவனம் போன்றவை அதிக அளவு இருக்கும். ஆனால் குறைவான எடை
- சேமிப்பு வசதிகள்
- வழுவற்ற அல்லது வழுவான விற்பனை முகவை
- உள்ளூர் சந்தை அல்லது அதிக தூரம் உடைய சந்தையை பொறுத்து உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையேயுள்ள தூரம்.
3 . விற்பனை வழிகளின் வகைகள்:
வெவ்வேறு உற்பத்தி பொருட்களுக்கு தகுந்தாற்போல் உள்ள விற்பனை வழிகளின் வகைகள், பின்வருமாறு.
அ) நெல் / அரிசியின் விற்பனை:
1. உற்பத்தியாளர் - தானியங்களை அரைப்பவர் - நுகர்வோர் (உற்பத்தியாளர் கிராமப்புற விற்பனை)
2. உற்பத்தியாளர் - தானியங்களை அரைப்பவர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர் (உள்ளூர் விற்பனை)
3. உற்பத்தியாளர் - மொத்த விற்பனையாளர் - தானியங்களை அரைப்பவர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர்
4. உற்பத்தியாளர் - தானியங்களை அரைக்கும் மொத்த விற்பனையாளர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர்
5. உற்பத்தியாளர் - கிராமப்புற வியாபாரி - தானியங்களை அரைப்பவர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர்
6. உற்பத்தியாளர் - பொருட்களை பெறும் அரசாங்கம் - தானியங்களை அரைப்பவர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர்.
ஆ) பிற உணவு தானியங்களின் விற்பனை வழிகள்:
1. உற்பத்தியாளர் - நுகர்வோர் (கிராமப்புற விற்பனை)
2. உற்பத்தியாளர் - கிராமப்புற வியாபாரி நுகர்வோர் (உள்ளூர் விற்பனை)
3. உற்பத்தியாளர் - மொத்த விற்பனை மற்றும் தரகுமுகவர் - நுகர்வோர்
4. உற்பத்தியாளர் - முதல்நிலை விற்பனையாளர் - இரண்டாம் நிலை மொத்த விற்பனையாளர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர்.
5. உற்பத்தியாளர் - முதல்நிலை மொத்த விற்பனையாளர் - தானியங்களை அரைப்பவர் - நுகர்வோர்.
6. உற்பத்தியாளர் - பொருட்களை பெறும் அரசாங்கம் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர்.
7. உற்பத்தியாளர் - அரசாங்கம் - தானியங்களை அரைப்பவர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர்.
இ) பருத்தியின் விற்பனை வழிகள்:
1. உற்பத்தியாளர் - கிராமப்புற வியாபாரி - மொத்த விற்பனையாளர் அல்லது கொட்டையை நீக்கும் தொழிற்சாலை - மிருதுவான துணியின் மொத்த விற்பணையாளர் - ஜவுளி தொழிற்சாலை (நுகர்வோர்).
2. உற்பத்தியாளர் - முதல்நிலை மொத்த விற்பனையாளர் - கொட்டையை நீக்கும் தொழிற்சாலை - இரண்டாம் நிலை மொத்த விற்பனையாளர் - நுகர்வோர் (ஜவுளித்துறை)
3. உற்பத்தியாளர் - வணிகர் - கொட்டையை நீக்கும் தொழிற்சாலை - மிருதுவான துணியின் மொத்த விற்பணையாளர் - நுகர்வோர் (ஜவுளித்துறை)
4. உற்பத்தியாளர் - அரசாங்க முகவை - கொட்டையை நீக்கும் தொழிற்சாலை - நுகர்வோர் (ஜவுளித்துறை)
5. உற்பத்தியாளர் - வணிகர் - கொட்டையை நீக்கும் தொழிற்சாலை - மொத்த விற்பனையாளர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர் (ஜவுளியற்ற பயன்)
ஈ) காய்கறிகளின் விற்பனை வழிகள்:
1. உற்பத்தியாளர் - நுகர்வோர் (கிராமப்புற விற்பனை)
2. உற்பத்தியாளர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர் (உள்ளூர் விற்பனை)
3. உற்பத்தியாளர் - வணிகர் - தரமு முகவர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர்
4. உற்பத்தியாளர் - தரமு முகவர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர்
5. உற்பத்தியாளர் - முதல்நிலை மொத்த விற்பனையாளர் - இரண்டாம் நிலை மொத்த விற்பனையாளர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர் (தொலைதூர சந்தை).
உ) பழங்களின் விற்பனை வழிகள்:
1. உற்பத்தியாளர் - நுகர்வோர் (கிராமப்புற விற்பனை)
2. உற்பத்தியாளர் - வணிகர் - நுகர்வோர் (உள்ளூர் விற்பனை)
3. உற்பத்தியாளர் - அறுவடைக்கு முன் ஒப்பந்தகாரர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர்
4. உற்பத்தியாளர் - தரமு முகவர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர்
5. உற்பத்தியாளர் - அறுவடைக்கு முன் ஒப்பந்தகாரர் - தரமு முகவர் - சில்லறை விற்பனையாளர் - நுகர்வோர்
6. உற்பத்தியாளர் - தரமு முகவர் - இரண்டாம் நிலை மொத்த விற்பனை - சில்லறை விற்பனையாளர் (தொலைதூர சந்தை).
இது போன்ற விற்பனை வழிகளில் எடுத்து செல்வதற்கான கட்டணம், தரகு கட்டணம், போன்றவையும் அடங்கும் மற்றும் வணிகள், தரகு முகவர், மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கப்படும் வியாபாரத் தொனையும் இந்த விற்பனை வழிகளை பொருத்து அமையும். இறுதிகட்டமாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் நுகர்வோர்கள் வாங்குவதன் மூலம், உற்பத்தியாளர்களின் பங்கு கொடுக்கப்படுகிறது. இந்த விற்பனை வழிகள்மூலம் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதற்கும், உற்பத்தியாளர்களுக்கு அதிக பங்கு தருவதற்கும் வழிசெய்கிறது.
|