வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை | |||||||||
ஏற்றுமதி செயல்முறைகள்
இந்தியாவில் உள்ள ஏற்றுமதி அபிவிருத்திக் குழுக்கள்
ஏற்றுமதிக்கான வழிமுறைகள் 2 வகைகளில் பின்பற்றப்படுகிறது. அ. சரக்குகளை கொண்டு செல்பவர்களுக்கான வழிமுறைகள் இதே வழிமுறைகள் தான் இறக்குமதிக்கும், ஆனால் நோமாறாக பின்பற்றப்படும். ஏற்றுமதி அனுப்பீடுக்கு எப்போதும் தடை இல்லை. நம்நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்றுமதி என்பது மிகவும் முக்கியமான ஒன்று, ஏற்றுமதி அனுப்பீட்டில் ஏதாவது தடை என்பது ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி வரிசைப்படி இழப்பு மற்றும் நாட்டிற்கு அந்நியச் செலாவணி இழப்பு ஏற்படுதலாகும். ஆகவே ஏற்றுமதி அனுப்பீடுகளின் நகர்வு எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது. ஏற்றுமதி அனுப்பீட்டை எந்த வித காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கக் கூடாது. ஏதாவது சந்தேகம் எழுந்தால், சுங்கத்துறை அதிகாரிகள் ஏற்றுமதியாளர்களைத்தான் கேள்வி கேட்பார்கள். ஏற்றுதியாளர்கள் தான் ஏற்றுமதிப்பொருட்களில் ஏதேனும் தவறு நடந்தால் பொறுப்பேற்க வேண்டும். (ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை 1997 – 2002 – ல் முக்கியமானவை) சரக்குகளை கொண்டு செல்பவர்களுக்கான வழிமுறைகள் ஏதாவது புதிய வான்வழி, கப்பல் வழி, போக்குவரத்து இருந்தால் சுங்கத்துறை அமைப்புகளில் (கப்பல் போக்கவரத்து செய்வதற்கான மின் செயல்பாடுகளுக்கு) பதிவு செய்ய வேண்டும். சரக்குகளை கொண்டு செல்பவர்களுக்கான வழிமுறைகள் பின்வருமாறு: வெளியே செல்ல அனுமதி சரக்குகளை கொண்டு செல்லும் கலன்களில் “வெளியே செல்ல அனுமதி” என்றிருக்க வேண்டும். இதற்குப் பிறகு தான் சரக்குகளை வண்டிகளில் ஏற்ற வேண்டும். (சுங்கவரிச் சட்டம், பிரிவு 39) கப்பல் வழி போக்குவரத்து செய்யும் ஏஜென்ஸிகள் “வெளியே செல்ல அனுமதி” என்ற விண்ணப்பத்தை கப்பல் இரசீது பெறுவதற்கு முன்பே இணைக்க வேண்டும். இந்த வழிமுறைகளை செய்த பிறகு தான் சரக்குகளை கப்பலில் ஏற்றமுடியும். அனுமதியுடன் சரக்குகளை ஏற்றுதல் கப்பல் கட்டண இரசீது அல்லது ஏற்றுமதி இரசீது பெற்ற பின்பே சரக்குகளை கப்பலில் ஏற்ற வேண்டும். ஏற்றுமதியாளர்கள் சரக்குகளை கொண்டு செல்பவர்களிடம் ஒப்படைத்த பின்னர், சுங்கத்துறை அதிகாரிகள் இந்த அனுமதியை தருவார்கள் பைகளில் சரக்குகளை கொண்டு செல்லுதல் மற்றும் தபால் பைகளுக்கு கப்பல் கட்டண இரசீது தேவையில்லை. ஆனால் சுங்கத்துறை அதிகாரியின் அனுமதி மட்டும் பெற வேண்டும். (பிரிவு 40) ஏற்றுமதி அறிக்கை பிரிவு 41 ன் படி, ஏற்றுமதி அறிக்கையை பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்துடன் பொருட்களை எடுத்துச் செல்லும் முன் இணைத்து அனுப்ப வேண்டும். இதே விபரங்கள் தான் இறக்குமதி அறிக்கைக்கு தேவையானவை. ஏதாவது தவறுகள் நடைபெறாமல் இருக்க, இந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கை தான் சரக்குகள் கொண்டு செல்வதற்கான அத்தாட்சியாகும். சரக்குகளை கொண்டு செல்பவர் இதில் கையெழுத்திட வேண்டும். கப்பலில் பயணப்பெட்டியுடன் பயணம் செய்பவர்களுக்கு இந்த அறிக்கை தேவையில்லை.
சி.பி.இ & சி யின் சுங்கத்துறை கையேடு 2001 – ன் பாகம் 3 , பகுதி II – ல் ஏற்றுமதியாளர்களுக்கான வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்: டி.ஜி.எப்.டி – யிடமிருந்து வணிக அடையாள எண் (BIN) பெற வேண்டும். இது ஒரு நிலையான எண் (PAN) ஐ அடிப்படையாகக் கொண்டது. ஏதாவது ஒரு அங்கிகரிக்கப்பட்ட வங்கியில் புதிதாக வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும். சுங்கவரி நிலையங்களில் அனுமதி பதிவு பெறவும், முன் அனுமதி பெறுவதற்காக வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும். ஏற்றுமதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்றுமதிகள் இருந்தால், ஏற்றுமதியாளர் வான் வழியாக அனுப்ப கப்பல் ஏற்றுவதற்கான இரசீதை அல்லது சாலை வழியாக அனுப்ப ஏற்றுமதி இரசீதை சமர்பிக்க வேண்டும். சரக்குகள் சுங்கவரி விதிப்பவையாக இருந்தாலோ அல்லது சுங்கவரி ஏதும் இல்லாமல் இருந்தாலும் கூட ‘சுங்கவரி இல்லை’ என்று உறுதிப்படுத்தி அனுப்ப வேண்டும். ஏற்றுமதியாளர் சமர்ப்பிக்க வேண்டிய கப்பல் வழி அனுப்பும் இரசீது: கப்பலில் அனுப்பும் இரசீது மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளின் இரசீதை சமர்ப்பிக்க வேண்டும். சரக்குகளை திரும்பப்பெறுவதாக இருந்தால் : மேலும் ஒரு இரசீதை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கென 5 வடிவங்கள் உள்ளன.
செய்வதற்கான கப்பலில் அனுப்பும் இரசீது – இது பச்சை வண்ணத்தில் இருக்கும்.
கப்பலில் அனுப்புவதற்கான இரசீதைப் பெற்ற பின், சரக்குகளை பரிசோதிப்பதற்கு உரிய அறைக்கு அனுப்ப வேண்டும். அங்கு ஆய்வாளரால் சரக்குகள் பரிசோதிக்கப்படும். இந்த ஆய்வால் தடைசெய்யப்பட்ட சரக்குகள் ஏதும் ஏற்றுமதி செய்யப்படாது, சரக்குகளின் முழு விவரம் மற்றும் இன்வாய்ஸ் இருப்பதாலும் எங்காவது சுங்கவரி கேட்கப்பட்டால் திரும்ப பெறுவதற்கும் இந்த ஆய்வு செய்யப்படுகிறது. சுங்கத்துறை அதிகாரிகளால் ஏற்றுமதி அனுமதி தருதல்: சுங்கத்துறை அதிகாரி பொருட்களை ஆய்வு செய்து, ஏற்றுமதிக்காக தடை செய்யப்பட்ட பொருட்கள் இல்லை என்று உறுதி அடைந்தவுடன், தேவைப்பட்டால் ஏற்றுமதி வரி செலுத்தி, அனுமதி பெற வேண்டும். சுங்கத்துறை அதிகாரிகள் ‘கப்பலில் ஏற்றலாம்’ அல்லது ‘ஏற்றுமதி செய்யலாம்’ என்று ஆணை தருவார்கள். இதர சுங்கத்துறை வழிமுறைகள்: பலதரப்பட்ட வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமாக பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு:
கடற்கரைச் சரக்குகள்
|
|||||||||
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024 |