Agriculture Engineering
| | | | | | | | | |
உமி/தோல்/தானியம் நீக்கும் கருவிகள்

தானியங்களை தூற்றும் கருவி

பயன்

:

அறுவடைக்கு பிறகு தானியங்களைத் தூற்றி செய்ய ஏற்றது.

திறன்

:

மணிக்கு 500-750 கிலோ

விலை

:

ரூ. 20000 /-

அமைப்பு

:

இந்த இயந்திரம் அறுவடைக்கு பின் தானியங்களை தூற்றி தூய்மைப்படுத்துகிறது. இதில் உட்செலுத்துவான், தானியங்களை தூய்மைப்படுத்த உட்செலுத்துவதற்கு உதவுகிறது. தூய்மைப்படுத்தியிலிருந்து தானியங்களை வெளியேற்றி, அளவில் பெரிய வேண்டாத பொருள்கள் அகற்றப்படுகின்றன. காற்று துறுத்தி இயந்திரத்தின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இது காற்றை சல்லடையின் மீது விழும் தானியங்களுக்கு எதிர்திசையில் செலுத்துகிறது. இது வைக்கோல், பதர் மற்றும் வேண்டாத பொருட்களை தனியாகப் பிரிக்கிறது. தூய்மைப் படுத்திய தானியங்கள் இயந்திரத்தின் அடிப்பகுதியில் உள்ள வெளிவாய் வழியாக வெளியேற்றப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

:

இக்கருவி அனைத்து தானியங்களுக்கும் ஏற்றது.
இக்கருவியில் சுத்தம் செய்யும் திறன் 97 சதவீதமாகும்.