Agriculture Engineering
| | | | | | | | | |
சுத்தம் செய்யும் கருவிகள்

காப்பிப் பழத்திலிருந்து தோல் நீக்கும் கருவி

பயன்

:

காப்பிப் பழத்திலிருந்து தோல் நீக்கி கழுவும் இயந்திரம்.

திறன்

:

மணிக்கு 500 கிலோ.

விலை

:

ரூ.50000/-

அமைப்பு

:

காப்பிப் பழத்திலிருற்து தோல் நீக்கம் செய்து வழுவழுப்பான கொட்டைகளை கழுவி சுத்தம் செய்வது, மலைத் தோட்டங்களில் மிக முக்கிய பணியாகும்.  தற்சமயம் உள்ள முறையில் தனித்தனிக் கருவிகள் கொண்டு செய்யப்பட்டு வருகின்றன.  இதனால் தண்ணீரின் தேவை மற்றும் சக்தி அதிகமாகிறது.  இதனைக் குறைக்க, இந்தக் கருவியில் தோல் நீக்கம் செய்யவும், வழுவழுப்பைக் கழுவவும் தனித்தனி கருவிகள், ஒரே சட்டத்தில் பொறுத்தப்பட்டு ஒரே மோட்டாரல் (3 குதிரைத் திறன்) இயக்கப்படுகிறது.  தண்ணீரின் தேவையம் குறைகிறது.

சிறப்பு அம்சங்கள்

:

இக்கருவி காப்பிப் பழத்தை தோல் நீக்கி கழுவ நடுத்தர மலைத் தோட்டங்களுக்கு ஏற்றது.
தண்ணீரின் தேவை ஒரு கிலோ காப்பிக் கொட்டைக்கு 14 லிட்டரிலிருந்து  4 லிட்டராக குறைகிறது.
காப்பிக் கொட்டை உடைவதும் குறைகிறது.