Agriculture Engineering
| | | | | | | | | |
உலர்த்தும் சாதனங்கள்

காளான் மிதவைப் படுகை உலர்த்தி

பயன்

:

சிப்பி மற்றும் பால் காளானை உலர வைக்க ஏற்றது.

திறன்

:

ஒரு தடவைக்கு  6 கிலோ

விலை

:

ரூ.45,500 /-

அமைப்பு

:

இந்த மிதவை படுகை உலர்த்தியில் மின்சாரத்தால் சூடேற்றும் சாதனங்கள், உலர்த்தும் அறை, காற்று துறுத்தி மற்றும்  காற்றுப்பெட்டி  போன்றவைகள் உள்ளன. காளானை உலர்த்துவதற்கு தேவைப்படும் காற்று, 3 குதிரைத்திறன் மோட்டரால் இயக்கப்படும் காற்றுப்பெட்டியால் சூடேற்றும் அறையினுள் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உலர்த்துவதற்கு தேவையான காற்றை சூடேற்றும் அறையில் ள500 வாட் திறன் உடைய 4 வெப்பச்சுருள்கள் சூடேற்றுகின்றன. சூடேற்றும் அறையிலிருந்து 50 முதல் 90 செ. வெப்பமுடன் கூடிய, நிமிடத்திற்கு 9-32  கன மீட்டர்  பாயும் திறனுடைய சூடான காற்றைப் பெறலாம். இந்த முழுஅமைப்பு இரும்பால் செய்யப்பட்ட சட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

:

சிப்பி மற்றும் பால் காளானுக்கு ஏற்றது.
சிப்பிக்காளான் 2 மணி நேரத்திலும், பால் காளான் 6 மணி நேரத்திலும் உலர வைக்கப்படுகிறது.
ஒரு தடவைக்கு 6 கிலோ காளானை உலர வைக்கலாம்.