Agriculture Engineering
| | | | | | | | | |
அரவை மற்றும் பிரித்தெடுக்கும் இயந்திரம்

பருப்பு உடைக்கும் இயந்திரம்

பயன்

:

பயறு வகைகளை உடைத்து பருப்பு எடுப்பதற்கும் தானியங்களை மாவாக அரைக்கவும் ஏற்றது.

திறன்

:

மணிக்கு 200 கிலோ

விலை

:

ரூ. 10000 /-

அமைப்பு

:

பருப்பு உடைக்கும் இயந்திரமானது எல்லா விதமான பயறு வகைகளையும் பருப்பாக உடைக்கும் திறன் கொண்டது. பயறு வகைகளை பருப்பாக மாற்றுவதற்கு முன்பு, தண்ணீரில் ஊறவைப்பது, எண்ணெயுடன் கலப்பது, காயவைப்பது போன்றவற்றளை செய்யவேண்டும். செலுத்துவான், திருகு அமைப்பு மற்றும் உடைக்கும் தட்டு ஆகியவை இக்கருவியில் உள்ளன. பருப்பு உடைக்கும் பகுதியில் பயறானது, நிலையான இரும்பு தகடு மற்றும் இரப்பர் தண்டுகளுக்கு இடையில் செல்லும்போது பருப்பாக உடைக்கப்படுகிறது. பருப்பின் அளவைப் பொறுத்து இரப்பர் தட்டுக்கும் இடையே உள்ள இடைவெளியை மாற்றிக்கொள்ளலாம். ரப்பர் தட்டை நீக்கி, சொரசொரப்பான இரும்புத் தட்டை மாற்றுவதன் மூலம் தானியங்களை மாவாக அரைக்க ஏற்றவாறு இக்கருவி மாற்றப்படுகின்றது.

சிறப்பு அம்சங்கள்

:

இது அனைத்து விதமான பயறு வகைகளுக்கும் ஏற்றது.
அரவை திறன் 90 சதம்.
விவசாயி தன்னுடைய பண்ணையில் விளைவித்த பயறுவகைகளை இந்த இயந்திரத்தை உபயோகித்து பருப்பாக உடைத்து அதிக இலாபம் ஈட்டலாம்.