Agriculture Engineering
| | | | | | | | | |
உமி/தோல்/தானியம் நீக்கும் கருவிகள்


நிலக்கடலை தோல் நீக்கும் இயந்திரம் (விசையால் இயங்குவது)

பயன்

:

நிலக்கடலை உடைத்து தோல் நீக்கம் செய்ய ஏற்ற இயந்திரம்.

திறன்

:

மணிக்கு 400 கிலோ.

விலை

:

ரூ.30000/-

அமைப்பு

:

இந்த இயந்திரத்தில் உட்செலுத்தும் கலன் முன்னும் பின்னும் இயங்கும் அமைப்பு.  சல்லடை, மின் மோட்டார் மற்றும் சட்டம் ஆகியன உள்ளன.  நிலக்கடலை தோலானது முன்னும் பின்னும் இயங்கும் அமைப்புக்கும், நிலையாக உள்ள குவி சல்லடைக்கும் இடையில் பிரிக்கப்படுகிறது.  பிரித்தெடுக்கப்பட்ட தோல் மற்றும் நிலக்கடலை பருப்பு இரண்டும் சல்லடையின் வழியே வருகிறது.  இந்த நிலக்கடலை தோலானது காற்று துறுத்தியின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது.  நிலக்கடலை பருப்பு, வெளிவாய் மூலம் சேகரிக்கப்படுகிறது.  நிலக்கடலை தோல் காற்றோடு கருவியிலிருந்து வெளியேற்றப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

:

பல்வேறு இரகங்களுக்கேற்ற கருவியாக அமைக்கப்பட்டுள்ளது.
குவி வடிவ சல்லடை, நிலக்கடலையின் இரகம் மற்றும் பருமனுக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளலாம்.