பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள் |
|||||||||||||||||||||
கையால் இயங்கும் சுழல்வகை பொடி பிசுவான்
பயன் இந்தக் கருவியை நாற்றங்கால், காய்கறி தோட்டம், வயல், தேயிலை மற்றும் காபி தோட்டப்பயிர், பசுமையகம், கண்ணாடி வீடு மற்றும் கிடங்குகளில் உள்ள பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து கட்டுப்படுத்த இரசாயணங்களை பொடி போன்ற அமைப்பில் பயிர்களின் மேல் தெளிக்க இந்தக் கருவி பயன்படுகின்றது. திறன்
அம்சங்கள் கையால் இயங்கும் சுழல் வகைப் பொடி பிசுவானில் இரண்டு வகை உண்டு.தோள் மற்றும் வயிற்றின் மேல் ஏற்றப்பட்டு இயக்கப்படும் வகை ஆகும்.இது பொதுவான தூள் தூவும் கருவி வகை இதனை விவசாயிகளாலேயே பயன்படுத்தக் கூடியவை.தூள் தூவும் கருவியில் வெட்டுவான்,விசிறி/காற்று ஊதி,கடினமான/இளக்கமான வெளியேற்றும் குழாய்,பல்சக்கரப்பெட்டி,சுழுல் கைப்பிடி,தோள்வார் மற்றும் அளவு காட்டும் இயக்க முறை இந்தக் கருவியில் உள்ளது.வெட்டுவானில் இயந்திரக் குலுக்கியை பல்சக்கரப் பெட்டியுடன் பொருத்தப்பட்டிருக்கிறது.இது இரசாயணங்களை அழுத்தி மற்றும் அது வெளிவரும் போது கெட்டியாக இருப்பதை தடுத்து வெளிக்கொணரும்.வெட்டுவானின் அடியில் சரிபடுத்தும் ஓட்டை உடைய தட்டு பொருத்தப்பட்டிருக்கிறது.இயங்கும் போது வெட்டுவானில் ½ லிருந்து ¾ பங்கு வரை நிரப்பவும்.இது தோள் / வயிற்றின் மேல் ஏற்றப்பட்டு இயக்கப்படும்.கருவியின் மேல் வாரின் உதவியுடன் பொருத்தப்பட்டிருக்கிறது. வெளியேற்றும் குழாயில் கரண்டி வகை விலக்கி பொருத்தப்பட்டிருக்கிறது.வெளியேறும் குழாயில் கரண்டி வகை விலக்கி பொருத்தப்பட்டிருக்கிறது.இதனைப் பயன்படுத்தும் போது கைப்பிடியை தொடர்ச்சியாக சுழற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.இரசாயணங்கள் பொடியில் இருந்து வெட்டுவானில் துளிகளாக வெளிவரும்.இதில் காற்று ஓடையில் இருந்து காற்று ஊதியாக உருவாகும்.இந்தப் பொடிகள் மேகம் போல வெளிவெளியேற்றும் குழூய் வழியாக வெளியேறி செடியின் இலைகள், தண்டுகள் மற்றும் செடியின் வேறு பகுதிகளில் தங்கிவிடும். |
|||||||||||||||||||||
முதல்பக்கம் | திட்டங்கள்| மானியம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | வாடகை இயந்திரங்கள் | பயிற்சி | தயாரிப்பாளர்கள்/ விற்பனையாளர்கள் | காட்சியகம் | கேள்வி பதில் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013 |
|||||||||||||||||||||