பவர் டிரில்லர் இயங்கும் பழத்தோடட தெளிப்பான்
பயன்
மாதுளை, ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற பழத்தோட்டப் பயிர்களுக்கு மருந்து தெளிக்கப் பயன்படுகிறது.
தேவைக் குறிப்புகள்
தேவையான விசை : 12-14 குதிரை சக்தி கொண்ட பவர் டில்லர்
மருந்து வெளியேற்றம் லி / நிமிடம் : 36
வேகம் : 950
அழுத்தம் கிகி / செ.மீ 2 : 30-35
தொட்டியின் கொள்ளளவு (லி) : 200
பீச்சுக் குழல் எண்ணிக்கை : 6
பீச்சுக் குழல் இடைவெளி (மி.மீ) : 325
அமைப்பு
இக்கருவி தன்னகத்தே எக்கி (Pump), அடிமனை (Chasis) யோடு கூடிய போக்குவரத்தோடு பயன்படுகிற சக்கரங்கள், மருந்து தொட்டி மற்றும் மருந்தைக் கலக்கும் அமைப்பு, மருந்தை துண்டிக்கும் சாதனம் மற்றும் பீச்சுக் குழல்களைக்கொண்டுள்ளது. 9-18 கிகி / செ.மீ 2 வரையுள்ள அழுத்தத்தை தாங்கும் விதத்தில் பீச்சுக்குழல்கள் வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.
இந்தப் பீச்சுக்குழல்கள் 100-150 மைக்ரான் அளவுள்ள சொட்டுக்களை வெளியிடுகின்றன. செடியின் அளவு மற்றும் அதன் வரிசை இடைவெளிக்கு ஏற்ப குழாய்களை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். தெளிப்புக் குழாய்கள் அனைத்தும் ஓட்டுனருக்கு பின்னால் பொருத்தப்பட்டுள்ளது. |