Agriculture Engineering
| | | | | | | | | |
பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள்


டிராக்டரால் இயங்கும் சட்டிக் கலப்பை

பயன்:

முதல் பண்படுத்தலுக்கும், முக்கியமாக கடினமாக மற்றும் உலர்ந்த, சருகு, கற்கள் அல்லது மரத்தின் குச்சிகள் உடைய நிலத்தில் பயன்படுத்த உதவும். இதில் மண்ணரிப்பு தான் முக்கிய பிரச்சனை ஆகும்.

திறன்:
உழுசாலின் எண்ணிக்கை
:
2 - 4
வட்டின் அளவு (மி.மீ)  
:
600 - 800
நீளம் (மி.மீ)      
:
1180 - 2362
அகலம் (மி.மீ)   
:
889 - 1194
உயரம் (மி.மீ)       
:
1092 – 1118
வெட்டிய பின் உள்ள அகலம் / தட்டு (மி.மீ)   
:
200 – 300
வேலையின் போது சரிசெய்யும் அகலம் (மி.மீ)     
:
600 – 1200
வேலை செய்யும் கருவியின் அகலம் (மி.மீ)      
:
300 மி.மீ வரையில்
மின்சாரம் தேவைப்படும் அளவு (ஹெச். பி)  
:
25 - 50இ டிராக்டர்
எடை (கிலோ) 
:
236 – 376

அம்சங்கள்

இதில் முக்கிய கட்டமைப்பு,வட்டு ஏர்க்கால்,பாறை சுழல் தண்டு வகை – 1 அல்லது வகை – 2, கனமான சுருள் கொண்ட உழுசால் சக்கரம் மற்றும் அளவி சக்கரம் இவைகளைக் கொண்டது.சில வடிவங்களில் உழும் வட்டுகள் 2,3 அல்லது 4 வட்டுகள் கீழே இருக்கும்.இதில் தேவைக்கேற்ப வட்டு ஏர்க்கால்களை பொருத்திக் கொள்ளலாம். வட்டின் கோணம் 40 லிருந்து 45 வரை வெட்டப்படும் அகலம் மற்றும் சாய்வான கோணத்தின் அளவு 15 லிருந்து 250 வரை ஊடுருவிச் செல்லும்.உழும் வட்டில் அதிக கரிமம் அல்லது உலோ இரும்பு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் முனைகள் கடினமாகவும்,கூர்மையாகவும் இருக்கும்.வட்டுகளின் மேல் மெழுகு போன்று உருளை தாங்கியால் ஏற்றப்பட்டுள்ளது.வட்டில் உள்ள சுரண்டும் கருவிகள் ஒட்டும் மண்ணில் இருந்து பாதுகாக்க உதவும்.உழுசால் துண்டுகளுடன் முக்கோண வளைவுகள் சேர்ந்து மண்ணை பொடிப் பொடியாக ஆக்கிவிடும்.