Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: விதைக்கும் கருவிகள்


மாடுகளால் கொத்துக் கலப்பபையுடன் இணைந்த விதைக்கும் கருவி

பயன் :      விதை விதைப்பதற்கு
திறன் :      நாளொன்றுக்கு 1 எக்டர் நிலத்தில் விதைக்கலாம்
விலை :     ரூ.8,000/-
அமைப்பு : இக்கருவியானது மூன்று கலப்பைகள். விதைப்பெட்டி. விதைகள் உடையாமல் ஒவ்வொன்றாக எடுத்து சாலில் போடுவதற்கேற்ற குவளை அமைப்பு கொண்ட சாதனம். இவற்றை இயக்கும் சக்கர அமைப்பு சால்களில் விதை விழுந்தவுடன் அதை மண் மூடுவதற்கேற்றஅமைப்பு ஆகியவைகளைக்கொண்டுள்ளது. கலப்பை உழும் ஆழத்தை தேவைக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். தேவையில்லாதபோது விதைவிழுவதை நிறுத் கிறச் என்னும் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியை இயக்கும் பொழுது விதைப் பெட்டியின் மேல்பாகம் சமநிலையில் உள்ளவாறு பார்த்துக் கொள்வது அவசியம். இல்லையெனில் குவளைகள் எடுத்து வரும் விதை புனலில் விழாமல் வெளியில் விழுவதற்கு எதுவாகும்.
சிறப்பு:
இக்கருவி தானாகவே விதைகளை ஒவ்வொன்றாக எடுத்து தகுந்த இடைவெளியில் குறிப்பிட்ட ஆழத்தில் விதைகளை சால் விடுகிறது. ஆகவே விதை இடுவதற்கான வேலையாட்கள் மீதமாகிறது.
இக்கருவியை உபயோகப்படுத்துவதனால் ஒரு எக்டருக்கு 12 மணி நேரம் மீதமாகிறது.
இக்கருவியில் உள்ள விதைக் குவளையை மாற்றுவதன் மூலம் நிலக்கடலை கொண்டைக் கடலை மக்காச்சோளம், சோளம் மற்றும் பருப்பு வகைகள் போன்ற விதைகளை விதைக்கலாம்.