பயன் : நன்செய் நிலங்களில் நேரடியாக ஒரே சீராக வரிசையில் நெல் விதைக்கலாம் திறன் : நாளொன்றுக்கு 1.1 எக்டர் விலை : ரூ.4800/- எடை : 10 கிலோ பரிமாணம்: 2000 x 1500 x 640 மிமீ அமைப்பு : இந்த மேம்படுத்தப்பட்ட நெல் விதைக்கும் கருவி உடுக்கை வடிவ 200 மிமீ, விட்டம் கொண்ட விதைப்பெட்டியில் 10மி.மீ. விட்டமுள்ள 9 துளைகளைக் கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது. இந்த கருவியை மணிக்கு 1 கி.மீ. வேகத்தில் இயக்கும் பொழுது நெல் நிர்ணயிக்கபட்ட அளவில் சமச்சீராக விழுகிறது. மேலும் விதைப்பெட்டியின் உள்ளே இரு துளைகளுக்கு இடையே சிறு தடுப்புகள் அமைத்து விதைக்கும் பொழுது விதை சீராக விழுவதற்கு ஏதுவாக தடுப்புகள் செயல்படுகிறது.மேலும் களிமண் போன்ற பிடிப்பு நிலங்களில் இரண்டு சக்கரங்களை பயன்படுத்துவதால் வழுக்கும் தன்மை குறைகிறது. சேற்றில் சால் திறப்பதற்கான அமைப்பை பயன்படுத்தும் பொழுது நெல் விதைக்கப்பட்ட இடத்திலேயே முளைக்க உதவுகிறது.
சிறப்பு அம்சங்கள்
நெல் தொடர்ந்து இடைவெளியில்லாமல் விதைப்பது தவிர்க்கப்படுகிறது.
விதை சீராக விழுவதால் அளவான நிர்ணயிக்கப்பட்ட பயிர் எண்ணிக்கையை கொடுக்கிறது.
விதைப்பெட்டியை அதன் கொள்ளளவில் பாதியளவு நிரப்பி இயக்குதல் அவசியம்
ஒரு எக்டருக்கு தேவைப்படும் விதை அளவு குறைகிறது.
பயிர் குறைப்பு செலவு குறைகிறது.