Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: விதைக்கும் கருவிகள்


காற்றழுத்த விதைப்புக் கருவி

பயன் : சிறிய விதைகள் விதைப்பதற்கு                       
திறன் : நாளொன்றுக்கு 5 எக்டர் நிலத்தில் விதைக்கலாம்
விலை : ரூ.35,000/-
செலவு: எக்டேருக்கு ரூ. 150/-

அமைப்பு : இக்கருவி கொத்துக் கலப்பையின் மேல் இணைக்கப்பட்டு காற்று ஊதி. விதைக் கலன், விதையை சீராக பிரித்து சாலுக்கு அனுப்பும் பிரிப்பான். சால் திறந்து மூடும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இக்கருவியில் காற்று ஊதியில் இருந்து வரும் காற்றைக்கொண்டு உறிஞ்சும் அழுத்தத்தை ஏற்படுத்தி அதன் மூலம் விதைகளை காற்று விசைக்குள் இழுத்து பிரிப்பானுக்கு கொண்டு செல்லும் அமைப்பு மாட்டப்பட்டுள்ளது. பிரிப்பான் இந்த விதைகளை எல்லா சால்களுக்கும் சீராக அனுப்புகிறது. விழுந்த விதைகளை சங்கிலி அமைப்பு கொண்ட சால் மூடுவான் மூடுகிறது.

சிறப்பு அம்சங்கள் :

  • எள், கம்பு. சோளம் மற்றும் எடை குறைவான சிறு விதைகளுக்கு ஏற்றது.
  • செலவில் சேமிப்பு 55 விழக்காடு
  • நேரத்தில் சேமிப்பு 92 விழுக்காடு
  • செலவு: எக்டேருக்கு ரூ. 150/-