Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: உழவுக் கருவிகள்


நவீன இரும்புப் கலப்பை

பயன்          :           நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தலாம்
பரிமாணம்         :          3500 x 250 x 900 மிமீ
விலை         :           ரூ.1,500/-
எடை          :
       17 கிலோ
திறன்          :           ஒரு நாளில் 0.5 எக்டர் உழவு செய்யலாம்

அமைப்பு      :  

புதிய இரும்புக கலப்பையில் கலப்பையின் கருத்தடியைத் தவிர மற்ற பாகங்கள் அனைத்தும் இரும்பினால் செய்யப்பட்டவை. மரக்கலப்பையில் கொழு தேய்ந்துவிட்டால் அதை மாற்றியாக வேண்டும். ஆனால் இரும்புக்கலப்பையில் கொழு தேயத்தேய நீட்டி வைத்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இரும்புக் கலப்பையில்கொழு. கலப்பையின் உடல் பாகத்தின் அடிப்புறத்தில் பொறுத்தப்பட்டு இருப்பதால் மண் தங்குதடையின்றி திருப்பிப்போட ஏதுவாகிறது. மாடுகளின் உயர்திற்கேற்ப கருத்தடியின் உயரத்தை மேலும் கீழும் மாற்றி வைத்து. கலப்பை உழும் ஆழத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். உழும் ஆட்களின் உயரத்திற்கு ஏற்றவாறு கைப்பிடி உயரத்தை மாற்றிஅமைத்துக் கொள்ளும்

சிறப்பு அம்சங்கள் : 

  • இக்கலப்பையின்அடிப்பாகம் முழுவதும் இரும்பினால் செய்யப்பட்டிருப்பதால் தேய்மானம்
    அம்சங்கள் குறைவு.
  • மண்ணை புரட்டிபோடுவதற்கான வளைதகட்டை கலப்பையின் மேற்பகுதியில் பொருத்திக் கொள்ளலாம்
  • உழும் ஆழத்தை எளிதாக மாற்றிக் கொள்ளலாம்
  • அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்ற இக்கலப்பை ஒரு ஜோடி மாடுகளால் இழுக்கப்படுகிறது.