Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: உழவுக் கருவிகள்


பவர்டில்லரால் இயங்கும் சமப்படுத்தும் கருவி

பயன் :  இக்கருவியை நன்றாக உழுத் நிலத்தில் உரமான பகுதியில் உள்ள மண்ணை தாழ்வான பகுதிக்குக் கொண்டு சென்று நிலத்தைச் சமப்படுத்த பயன்படுத்தலாம்
விலை :          ரூ.5,000/-
பரிமாணம் : 1000 x 780 x 580 மிமீ
எடை  : 35 கிலோ

திறன் :           ஒரு மணிக்கு 0.08 கன மீட்டர் மண்ணால் சமப்படுத்தலாம்

அமைப்பு :    

பவர்டில்லரால் இயக்கப்படும் இக்கருவி ஒரு மீட்டர் அகலமுள்ள உள்நோக்கி லேசாக வளைக்கப்பட்ட கெட்டியான இரும்புத் தகட்டினால் ஆனது. இத்தகட்டின் கீழ்ப்பாகத்தில் மண்ணை வெட்டிச் செல்வதற்கான இரும்புப் பட்டை பொருத்தப்பட்டுள்ளது. இரு பக்கங்களிலும் மண் சிந்துவதை தவிர்க்க பக்கவாட்டில் சிறகுகள் இணைக்கப்ட்டுள்ளன. இக்கருவி பவர்டில்லரின் முன்புறம் உறுதியாக பொருத்தப்பட்டுள்ளது. பவர்டில்லரால் இக்கருவி உந்தி முன்னுக்கு தள்ளப்படும் பொழுது இரும்புப் பட்டையினால் வெட்டப்பட்ட மண் சேகரிக்கப்பட்டு வேண்டிய இடத்திற்கு கடத்தப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள் :

  • மேட்டுப்பகுதியிலிருந்து மண்ணை பள்ளத்திற்கு எடுத்துச் சென்று நிலத்தைச்  சமன்படுத்த மிகவும் உதவும்
  • நிலத்தின் குறுக்கே வரப்புகள் போட்டு மண் அரிப்பைத் தடுப்பதுடன் மண்ணின் ஈரத்தன்மையை காக்க உதவுகிறது.
  • மரச்சட்டம் மற்றும் பலகையினால் நிலத்ததை சமப்படுத்துவதை ஒப்பிடும் பொழுது நேரம் மீதப்படுவதுடன் நிலம் சீராக சமப்படுத்தப்படுகிறது.
  • ஒரு கன மீட்டர் மண்ணை ஒரு மீட்டர் நீளத்திற்கு கடத்த ஆகும் செலவு ரூபாய் மூன்று என கணக்கிடப்பட்டுள்ளது.