Agriculture Engineering
| | | | | | | | | |
தெளிப்பு நீர்ப்பாசன முறை


தெளிப்பு நீர்ப் பாசனத்தால் பயிரில் ஏற்படும் விளைவுகள்
நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் பாசன நீர் 16 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை சேமிக்கப்படுகிறது மட்டுமல்லாது 3-5 சதவிகிதம் உயர் விளைச்சலும் கிடைக்கிறது.

தெளிப்பு நீர்ப் பாசனத்தினால் பயிர்ச் சாகுபடியில் நீர் சேமிப்பும் உயர் விளைச்சலும்

பயிர் நீர் சேமிப்பு (சதவிகிதம்) விளைச்சல் அதிகரிப்பு (சதவிகிதம்)
கம்பு 56 19
பார்லி 56 16
வெண்டை 28 23
முட்டைக்கோஸ் 40 3
காளிஃபிளவர் 35 12
மிளகாய் 33 24
பருத்தி 36 50
தட்டைப்பயிறு 19 3
வெந்தயம் 29 35
பூண்டு 28 6
கொண்டைக்கடலை 69 57
நிலக்கடலை 20 40
சோளம் 55 34
குதிரை மசால் 16 27
மக்காச்சோளம் 41 36
வெங்காயம் 33 23
உருளைக் கிழங்கு 46 4
சூரியகாந்தி 35 24

செயல்பாடு :  துளை மூலம் நீரை மழைத்துளி  போன்று நிலத்திற்கு மேலே பயிர்களின் மேல் தெளிக்கும் பாசன முறை
    ஒரு தெளிப்பு நீர் அமைப்பை செயல்படுத்த குறைந்தது 1 கி.செ.மீ என்ற அழுத்தம் 12 மீ பரப்பைப் பாசனம் செய்யத் தேவை. அதிகப்படியான  செலவைக்குறைக்க ஒரே சமயத்தில் 4 தெளிப்பு நீர் அமைப்புகளை இயக்க 4 -5 கி.செ.மீ அழுத்தம் பயன்படுத்தப்படவேண்டும். காற்றினால் ஏற்படும் நீர் இழப்பதைத் தவிர்க்க காற்றின் வேகம் மணிக்கு 15 கி.மீக்கு குறைவாக உள்ள இடங்களில் தெளிப்பு நீர்ப்பாசனத்தை உபயோகப்படுத்தவேண்டும். நீராவிப் போக்கினால் ஏற்படும் நீர் இழப்பைத் தவிர்க்க காலை, மாவை வேலைகளில் மட்டும் தெளிப்பு நீர்ப் பாசனத்தை இயக்கவேண்டும்.
செலவு : சராசரியாக ரூ. 30000 - 40000 எக்டர் ஆகும்.
பயன்கள் : மலைப்பகுதி மற்றும் மேடுபள்ளங்கள் நிறைந்த பகுதிகளுக்கம் ஏற்றது. மலைப்பயிர்களான தேயிலை, காப்பி போன்றவற்றிற்கு உகந்தது. பூக்கள் எளிதில் கொட்டாத பயிர்களுக்கும் ஏற்றது. சாதாரண பாசன முறையை விட 30-40 சதவீதம் நீர் குறைவு.

தெளிப்பு நீர்ப்பாசனத்தில் பயிர்களுக்கான நீர்த் தேவை

பயிர் நீர் உபயோகம் நீர் சேமிப்பு (சதவீதம்) நீர்ப் பயன்பாடு கி.எக்.மி.மீ
நிலக்கடலை 390 24.7 5.13
பருத்தி 308 50.5 9.8
சோயா 380 50.5 4.77
உளுந்து 140 50.0 8.82

தெளிப்பு நீர்ப் பாசனத்தில் பயிர்களுக்கான நீர்த்தேவை

குறைபாடுகள் : இதனை அமைக்க ஆகும் செலவு அதிகம் விவசாயிகளிடம் நிலப்பரப்பு குறைவு.
நெல்லின் நீர்ப்பாசனத் தொழில்நுட்பம்
விவசாயிகள் பின்பற்றும் முறை : வயல்களில் அதிகப்படியான நீரை தேக்கி வைப்பது பூமி மேற்பரப்பில் தொடர்ச்சியாக 7.5 - 10 செ.மீ உணரம் வரை நீர் பாய்ச்சுவது.
தொழில்நுட்பங்கள் வகைபாடு : நாற்றாங்கால் 2 செ.மீ உயரத்திற்கு  நீர் இருந்தால் போதுமானது. வயல்களில் 5 செ.மீ உயரத்திற்கு  நீர்த் தேங்கியிருந்தால் போதுமானது. நீர் மறு நாள் நீர் பாய்ச்சவேண்டும். இதனால் 80 சத நீர் சேமிக்கப்படுகிறது.