Agriculture Engineering
| | | | | | | | | |
நெல் அல்லாத பயிர்களுக்கு பாசன தொழில்நுட்பங்கள்

ஏரிப்பாசனம்

சோளம்
விவசாயிகள் நடைமுறைப் பாசனம் : தரைவழிப்பாசனம் தட்பவெப்பத்தைப் பொறுத்து பாசனம் செய்தல்
புதிய தொழில்நுட்பம் : சால்ப்பாசன முறையில் விதைத்த 20 நாட்களுக்குள் 15-16 நாட்களுக்கு ஒரு முறையும், மீதிப் பயிர்க்காலங்களில் 6 நாட்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்யப்படுகிறது. கட்டைச் சோளப் பயிர்களில் 6 பாசனங்களில் முறையே, நடுதல், 4-5 இலை விடுதல் பருவம், பால் பிடிக்கும்  பருவம், சோளக்கதிரின் மிருதுவான பருவம் ஆகிய காலங்களில் பாசனம் செய்தல் அவசியம். சமன் செய்த நிலத்தில் நீளச்சால்களில் (100 மீ) அலைப்பாசன முறையில் பாசனம் செய்யலாம்.
சிறுதானியங்கள்    
விவசாயிகளின் முறை : படுகை மற்றும் சாலப் பாசனம்
தொழில்நுட்பம் நீர்ப்பாசன அளவு (40 மிமீ) : பாசன நீரின் அளவு, ஒட்ட மொத்த நீராவியாதல் 0.75 இருக்கும போது நீர்ப்பாசனம் செய்தல்வேண்டும்.
கேழ்வரகு    
விவசாயிகளின் முறை : தரைவழிப்பாசன முறை தட்பவெப்பத்தைப் பொறுத்துப் பாசனம் செய்யப்படுகிறது.
தொழில்நுட்பம் : 10 நாட்களுக்கு ஒரு முறைப்பாசனம் செய்யப்படுகிறது.
பருப்பு வகைகள்    
உழவர்களின் முறை : சால் மற்றும் பாத்தி முறையில் பாசனம் செய்தல்
தொழில்நுட்பம் : உளுந்து மற்றும் பச்சைப் பயிர்களுக்கு மூன்று முறை பாசனம் செய்யப்படுகிறது. முறையே பூ விடுதல் மற்றும் காய் உருவாதல் போன்ற பருவங்களில் நீர் பாய்ச்சப்படுகிறது. 18 நாட்களுக்கு ஒரு முறைப் பாசனம் செய்தால் போதுமானது. சோயாபீன்ஸ்க்கு 80 மிமீ பாசனம் போதுமானதாகும். பொதுவாக 10-12 நாட்களுக்கு ஒரு முறைப் பாசனம் செய்யப்படுகிறது.
நிலக்கடலை    
உழவர்களின் முறை : பாத்தி மற்றும் சால்ப் பாசன முறை - தட்பவெப்பநிலையைப் பொறுத்து பாசனம் செய்யப்படுகிறது.
தொழில்நுட்பம் : விதைத்து 25 நாட்கள் கழித்துப் பாசனம் செய்தல் அவசியமாகும்.
    7-9 நாட்களுக்கு ஒரு முறைப் பாசனம் செய்தல் போதுமானதாகும்.
எள்    
உழவர்களின் முறை : பாத்தி முறை
தொழில்நுட்பம்   பூ மற்றும் காய்த்தலின் போது பாசனம் செய்தல்
சூரியகாந்தி    
உழவர்கள் கடைப்பிடிக்கும் முறை : தரைப்பாசன முறை (சால்ப்பாசனம், பாத்திப்பாசனம்)
தொழில்நுட்பம் : ஆவியாதலின் அளவு 0.75 விகிதத்தில் பாசன நீர் பாய்ச்சப்படுகிறது. 20-30-20 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து ஒரு எக்டருக்கு சமமான நிலங்களில் நீளச் சாலில் அலைப்பாசனம்.
தென்னை    
விவசாயிகள் கடைப்பிடிக்கும் முறை : வடடப்பாத்தி மற்றும் நீர்த் தேங்கும் வரைப் பாசனம் செய்தல்
தொழில்நுட்பம் : சொட்டு நீர்ப்பாசன முறையில் 100 லிட்டர் மரம், நாள் போதுமானது. 1.8 மீட்டாட் ஆரமுள்ள குழல் எடுத்து அதில் பனை ஓலைகளை மட்கச் செய்தல், உமியை மட்கச் செய்தல் அல்லது தென்னை நார்க்கழிவை மட்கச்செய்துமண்ணில் கலந்து அதில் மழை நீரைச் சேகரித்தல். தொழு உரம் மற்றும் பசுந்தாள் உரம் போடுதல். வறண்ட காலத்தில் இலைகளை நீக்குதல். தண்ணீர்ப் பற்றாக்குறை காலத்தில் பானைப் பாசனத்தையும் பயன்படுத்தலாம்.
பருத்தி    
விவசாயிகள் கடைப்பிடிக்கும் முறை : சாலப்பாசனம்
தொழில்நுட்பம் : சால் மற்றும் முகடுகளில் விதைத்தல் தொடர் குழி முறை (வாய்க்கால் இணைக்கபட்டிருக்கும்) கரும்புத் தோகைகளை ஒரு எக்டருக்கு 5 டன் என்ற வீததம் நிலப் போர்வையாக்குதல். சொட்டு நீர்ப்பாசனம் உகந்தது. தெளிப்புப் பாசனமும் சிறந்தது.
எலுமிச்சை    
விவசாயிகள் கடைப்பிடிக்கும் முறை : வட்டப்பாத்திப்பாசனம்
தொழில்நுட்பம் : சொட்டு நீர்ப்பாசன முறையில் வட்டப்பாத்திப் பாசன முறைவிட 75 சதம் நீர் போதுமானது, சொட்டு நீர்பாசனம் விளைச்சலுக்கு உகந்தது.
தக்காளி    
விவசாயிகள் கடைப்பிடிக்கும் முறை   சால்ப் பாசனம்
தொழில்நுட்பம் : சொட்டு நீர்ப்பாசனம் நல்லகலப்பின இரகங்களுக்கு உகந்தது. காய்விடுதல் மற்றும் முதிர்ச்சிப் பருவத்தில் நீர் பாய்ச்சவேண்டும். நீரின் அளவுக்கும் ஆவியாதலுக்கும் உள்ள விகிதம் 1 ஆக இருக்கும் போது நீர்பாய்ச்சவேண்டும். தக்காளிக்கு தெளிப்பு நீர் முறையில் மற்றப் பாசன முறையைக் காட்டிலும் 1760 மீ3 தண்ணீர் போதுமானது.  
கரும்பு    
விவசாயிகள் கடைப்பிடிக்கும் முறை : முகடு மற்றும் சால்ப் பாசனமுறை

தொழில்நுட்பம்

பாசன நீருக்கும் ஆவியாதலுக்குமுள்ள விகிதம் 0.9 இருக்கும் போது நீர்ப்பாய்ச்சவேண்டும். கரும்புத் தோகைகளை மக்கச் செய்வதினால் நீர் ஆவியாகும் விகிதம் குறைக்கப்படுகிறது. கயோலின் (2.5 கிலோவை 750 லிட்டர்) தண்ணீரில் கலந்து அளிப்பதால் ஆவியாதல் விகிதம் குறைக்கப்படுகிறது. மாதமான பிறகு பழைய இலைகளை அகற்றுதல் மாற்றுச்சால் பாசனம் (ஒரு சால் விட்டு ஒரு சால் பாசனம்) செய்யலாம். வயலின் ஈரத்தன்மையைப் பொறுத்து பாசனம் செய்தல். சொட்டு நீர்ப்பாசனமுறையும் தண்ணீர் பற்றாக்குறைப் பகுதிகளில் மிகவும் பொருந்தும். எளிய வடிவமைப்புக் கொண்ட மண்ணில் அலைப்பாசன முறை உகந்தது.

வாழை

விவசாயிகள் கடைப்பிடிக்கும் முறை கிடங்கு முறை நீர்ப்பாசனம் பாத்திப்பாசனம் தொழில்நுட்பம் நீருக்கும் ஒட்டு ஒத்த ஆவியாலுக்குமுள்ள விகிதம் 0.75-0.9 ஆக இருக்கும் போது நீர் பாய்ச்சவேண்டும். தொடர் குழிப்பாசனம் உகந்தது. மரத்தைச் சுற்றி பாத்திகள் எடுத்து எல்லாக் குழிகளையும் இணைத்து பாசனம் செய்யலாம். சொட்டு நீர்ப்பாசன முறை மிகவும் உகந்த முறையாகும். படிப்படியாக அகலச்சால் முறையையும் பயன்படுத்தலாம்.

முக்கிய இடர்பாடுகள்

ஆக்கிரமிப்ப மண்படிவு, நீர் வரத்து வாய்க்கால்கள் பராமரிப்பின்மை மற்றும் ஆக்கிரமிப்பு, மாசு படுதல் (தோல் மற்றம் சாயத் தொழிற்சாலை).

ஏரிப்பிணைப்பு (சங்கிலித் தொடர் மறைந்து விட்டபோதிலும் அதனுடைய நீர்வளத் தொடர்பை மேம்படுத்துவதில் ஏரிப்பாசனத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும். 

நிவர்த்திகள்

பருவகால சீரற்ற மழையினால் ஏரிப்பாசனப்பகுதியின் கொள்ளளவில் 50-60 நீர் தான் பெரும்பான்மையும் பயிர்களுக்குக் கிடைக்கிறது. இப்பகுதியில் நெல்லிற்குப் பதிலாக மாற்றுப்பயிர்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

ஏரிபாசனத்தைச் சீரமைக்க மண் படிமானத்தை அகள்ளி, ஏரி முகத்துவாரத்தை சுத்தம் செய்தல், மண் படிமானத்தைத் தடுக்க தாவரங்களை நடுதல், சின்ன ஏரிகளை ஒன்றுடன் இணைத்தல் அல்லது கசிவு நீர் குட்டையாக மாற்றியும் நிலத்தடி நீர்வள ஆதாரத்தை பெருக்குதல், ஏரிகளை புணரமைத்தல், ஆதார வாய்க்கால்கள் சீரமைத்தல் போன்றவற்றைக் கடைபிடிக்கலாம்.

பண்ணை மேம்பாடு அமைப்புகளை விரிவுப்படுத்தி ஏரிப்பாசனம் பகுதியில் சரியான அளவில்நீர் பகிர்வுக்கு வழிவகுக்கிறது. (தலைமடை முதல் கடைமடை ஈறாக)

Soil and Water Conservation

தரம் குறைந்த நீருக்கான மற்றைய தொழில்நுட்பங்கள்

  • தூய நீருடன் மாசுபட்ட நீரையும் பயிர்களுக்குத் ஏற்புடைய சரியான விகிதத்தில் கலந்து உபயோகித்தல்.
  • உவர்நீரைத் தாங்கி வளரும் பயிர்களை தகுந்த வடிகால் வசதியுடன் பயிர் செய்தல்.
  • சமுதாய ஆழ்குழாய்கிணறுகளை, வாய்க்கால் பாசனப் பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்படும்பொழுது பயன்படுததுவதால் மகசூலும், வருமானமும் அதிகரிக்கும்.
  • தகுந்த வடிகட்டிகளுடன் மற்றும் பராமரிப்புடன் சொட்டு நீர்ப்பாசனமும் பரிந்துரைக்கப்படுகிறது.

Micro Irrigation