செயல்பாடு |
: |
தரைப்பாசனத்தில் ஏற்படும் கசிவு நீர் சேதத்தை தவிர்க்கிறது. |
அளவு |
: |
10-15 சதம் கசிவு நீர்ச் சேதம், 150 மீ நீள வாய்க்காலில் ஏற்படுகிறது.
30-40 டிகிரி இலேசான மண் கண்டம் மற்றம் பெரிய வாய்க்கால்களில் ஏற்படுகிறது. |
தேவையான பொருட்கள் |
: |
மிமீ தடினமனான கறுப்புப் பாலித்தீன் உறை ஏற்றது.
பாலித்தீன் உரை விரித்த பிறகு 15 செ.மீ தடிமனுக்கு மண்ணைப் பரப்பவேண்டும்.
செலவு ஒரு மீட்டருக்கு ரூ. 15 ஆகும்.
20-30 டிகிரி செலவு குறைவு (மற்றைய நடைமுறையும் பூச்சுப் பொருட்களைக் காட்டிலும்) |
பாசன வாய்க்காலில் சரியான பூச்சு நீளம் |
: |
(பெரியார் - வைகை ஆயக்கட்டுப் பகுதி)
ஆயக்கட்டுப் பகுதியில் 4.5 எக்டர் பரப்பை சென்றடையும் அனைத்து வாய்க்கால்களும் பூசப்படுதல் நல்லது.
3.5 எக்டர் ஆயக்கட்டுப் பகுதி வாய்க்கால்களுக்கு ஆகும் வரவு செலவு விகிததம் 1 ஆக இருக்கும் போதே பூசுவதால் கிடைக்கும் இலாபம் அதிகமாகும். |
அமைப்பு |
: |
ஏற்கெனவே உ்ளள பாசன வாய்க்காலில் 15 செ.மீ ஆழ மண்ணைத் தோண்டி எடுத்துவிட்டு பாலித்தீன் உரையை விரிக்கவேண்டும். விரிப்பதற்கு முன்னர் வாய்காலில் உள்ள சிற கற்களை அகற்றிவிடவேண்டும். பின்னர் பாலித்தீன் உறையை வாய்க்காலின் அகலம் மற்றும் பக்கங்களை மூடவேண்டும். பக்க நீளங்களுக்கு மேல் 15 செ.மீ அதிகம் மற்றும் பக்கங்களை மூடவேண்டும். பக்க நீளங்களுக்கு மேல் 15 செ.மீ அதிகம் நீட்டிவிட்டு வெட்டவேண்டும். பின்னர் வாய்க்காலின் முழு நீளத்திற்கு பாலித்தீன் உறையை விரிக்கவேண்டும். அதன் மேல் ஏற்கெனவே தோண்டிய மண்ணைக் கொண்டு மூடவேண்டும். இதனால் பாலித்தீன் உறையானது நேரடி சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் விலங்குகள், மனிதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது. |