வீட்டு மேற்கூரைகளில் தேங்கும் நீரைச் சேமித்தல்
வீட்டு மாடி மற்றும் கூரைகிளல் மழை நீர் அறுவடை
பயன்பாடு |
: |
கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் வீட்டு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல். தொட்டிகளில் சேமித்த நீரை நேரடியாக உபயோகிக்கலாம் (பாசனத்திற்கும், மற்ற உபயோகங்களுக்கும்) |
சிறப்பு அம்சங்கள் |
: |
பிவிசி பிளாஸ்டிக் குழாய்களை (வெவ்வேறு விட்டமுயைவை) பயன்படுத்தி ஒரு பகுதியில் உள்ள கட்டிடங்களிலிருந்து நீர் அறுவடை செய்தல். கற்கள் மற்றும் கூழாங்கற்களை 3 மீ – 2 மீ அளவுள்ள வடிப்பான்களில் நிரப்புவதன் மூலம் குப்பைகள் மற்றும் இதர தூசிகளிலிருந்தும் வடிகட்டி தூய்மையான நீரைப் பெற இயலும். சரிவான பகுதிகளில் பிவிசி பைப்புகளைவிட, திறந்தவெளி வாய்க்கால்கள் ஏற்படுத்தி செலவைக் குறைக்கலாம். |
செலவு |
: |
வடிப்பான் அமைப்பதற்கான செலவு சுமார் ரூ. 3000 ஆகும். |
நீர் பரவுதல் |
: |
நீர் விரைந்து செல்லும் ஓடைகளில், ஆறுகளில ஆங்காங்கே தடுப்புகளை அமைப்பதால் அருகேயுள்ள நிலங்களுக்கும் பாய்ந்து ஈரப்படுத்தி மிதமுள்ள நீரானது திரும்பவும் ஓடைகளில் தொடர்ந்து செல்கிறது. இதனால் ஆறுகளின் மேற்பகுதி முதல் கடைநிலைப்பகுதி வரைக்கும் நீர் கிடைக்கப் பெறுகிறது. |
தனிப்பட்ட கிணறுகளின் நீர் ஊறும் திறன் |
: |
பயன்பாட்டில் உள்ள கிணற்றிற்கு அடித்து வரும் நீரை வடிகட்டிய பிறகு அனுப்ப வேண்டும். திறந்தவெளிக் கிணறுகளில் மணல் மற்றும் சிறு கற்களை துளையிட்ட குழாய்களைச் சுற்றி நிரப்பவேண்டும். ஆழ்துளைக் கிணறுகளின் சுற்றுக் குழாய்களை தரைமட்ட அளவிற்கு நீட்டிக்க வேண்டும். குழாய்களின் அளவு சரியாக நிர்ணயம் செய்து உடையாமலும், அடைக்காமலும் பார்த்துக் கொள்ளவேண்டும். |
நீரூற்றம் செய்ய ஆழ்துறைக் கிணறுகள்
செயல்திறன்
- அதிக ஆவியாகாமல் நீரூற்றம் செய்ய சுத்தமான நீரை நிலப்பரப்பிலிருந்து உபயோகித்தல்
- குறிப்பிட்ட ஆழம் வரை துளைப்பான்களைக் கொண்டு 10 செ.மீ விட்டமுடைய துளையிடுதல்
- குழாய் கிணறுகளில் மண் இடிந்து விழாமல் இருக்க துளையிடப்பட்ட குழாய்கள் நிலத்தடி நீர் உள்ள பகுதிகள் வரைக்கும் சரியாக அமைக்கவேண்டும்.
- நீரூற்றம் செய்ய ஆழ்துளை கிணறுகளின் ஆழப்பகுதியானது அப்பகுதியில் நிலவும் நீர்மட்டத்திற்கு கீழ் 30 மீ வரை இருக்கவேண்டும்.
- நீரூற்றம் செய்ய ஆழ்துளைக் கிணறுகளின் ஆழமானது தற்போதுள்ள ஆழ்துளைக் கிணறுகளின் ஆழத்தைப் பொறுத்தது.
- தூய நிர் கிடைக்கும்வரை ஆழிதுளைக்கும் குழாய்க்கும் இடைப்பட்ட இடைவெளியை சிறு கற்கள் கொண்டு நிர்ப்பிவிடவேண்டும்.
- வெள்ள நீரானது 3 மீ - 3 மீ - 3 மீ அளவுள்ள மணர் வடிப்பான்களினால் வடிகட்டப்பட்டு தூய நீர் கிடைக்கிறது.
- கிணற்றின் மேற்பகுதியில் உள்ள இரண்டாவது மணல் வடிகட்டி மீதமுள்ள குப்பைகளை வடிகட்டித் தூய நீர் கிணற்றுக்குள் செல்ல வகை செய்கிறது.
- தென்னை நாரினால் சுற்றப்பட்ட குழாய்களில் குப்பைகள், படிவங்கள் வடிக்கப்பட்டு கடைசியாகக் கிணற்றுக்குள் நீர் சென்றடைகிறது.
|