மலைச் சரிவுகளில் மண் மற்றும் நீரை சேமிக்கும்
முறைகள்
சிறப்பம்சங்கள்
- மலைச்சரிவுகளில் மண் அரிப்பைத் தடுத்தல்
- 20 சதவீதத்திற்கு மேல் உள்ள சரிவுகளில் அமைக்கப்படுகிறது.
- சாதாரணமாக 1000 சதுர செ.மீ முதல் 2500 சதுர செ.மீ குறுக்குப் பரப்புடையவையாகும்.
- கற்சுவர்கள் தொடர்ந்தோ, இடைவெளிவிட்டோ அமைக்கலாம்.
சம உயர மேடைகள்
பயன் |
: |
சரிவான நிலப்பரப்பை ஆங்காங்கே தடுத்து சமதளங்கள் மூலம் சாகுபடி செய்யலாம். |
பொது அம்சங்கள் |
: |
மலைச் சரிவைப் பொறுத்துத் தடுப்புப் படிகளை அமைப்பதன் மூலம் சாகுபடிக்கு ஏற்றவாறு நிலப்பரப்பைத் தயார்படுத்துதல். |
செலவு |
: |
ஒரு எக்டருக்கு சம உயர மேடைகள் அமைப்பதற்கு ஆகும் செலவு ரூ. 8000 ஆகும். |
சிறப்பு அம்சங்கள் |
: |
மேடைகளில் சரிவு உள் நோக்கி இருப்பதனால் நீர் வடிதல் சாத்தியமாகிறது. வெளி நோக்கிய சரிவான மேடைகள் ஏற்கெனவேயுள்ள அதிகப்படியான சரிவானப் பகுதிகளை முடிந்த அளவிற்கு ஏற்புடைய பகதியாகக் பயன்படுகிறது. 6 சதவீத்ததிற்கும் அதிகமான சரிவான பகுதிகளை இவ்வாறு மாற்றி அமைக்கலாம். |
|