வடிகால் மேம்பாடு
நீர்ப்பிடிப்புப் பகுதி மேம்பாடு
- மேடு முதல் பள்ளத்தாக்குகள் உள்ள நீர்வடிப்பகுதியில் மண் மற்றும் நீர்ப்பாதுகாப்பு முறைகள், நீர்பிடிப்பு திட்டங்கள் மூலமே வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.
- இயற்கை சமநிலையைப் பேணி, நீர் வளம் பாதுகாத்து வேளாண் விளைச்சலுக்கும் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் உதவும்.
நீர்ப்பிடிப்பு வழிமுறைகள்
- கட்டப்பட்ட சம உயர வரப்புகள்
- சம உயரப் பள்ளங்கள்
- சம உயரக் கற்சுவர்
- சம உயர மேடைகள்
- வரப்புகள் கட்டப்பட்ட பாத்திகள்
- நிலச் சமன்பாடு
- கோடை உழவு
- பயிர் விளக்கத் தொழில்நுட்பங்கள்
- தாவரத் தடுப்பான்கள்
- கட்டப்பட்ட சால்கள்
- தடுப்பணைகள்
- தாங்கு சுவர்கள்
- பண்ணைக் குட்டைகள்
- தீவனப் பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பு
- மானாவாரி தோட்டக்கலை பயிர் மேம்பாடு
- பதன் செய் மற்றும் சந்தை நிலையங்கள் அமைத்தல்
- வேளாண் காடுகள் வளர்ப்பு
ஆய்வு முடிவு
நிலத்தடி நீர் மட்டும் கிணறுகளில், நீர் இருப்பை அதிகப்படுத்தி பாசனப் பரப்பை அதிகரிக்கச் செய்தும், மண் அரிமானம் தடுக்கப்படுவதையும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது.
கசிவு நீர்க்குட்டைகள்
சிறப்பம்சங்கள்
- இது நீரின் வேகத்தை மட்டுப்படுத்தி அரிமானத்தைக் குறைக்கிறது.
- இவ்வாறு சேமிக்கப்படும் அருகிலுள்ள பகுதிகளின் மண் ஈரத்தை அதிகப்படுத்துவதுடன் நிர் நிலைகளில் நீர் பிடிப்பை அதிகப்படுத்துகிறது.
- தடுப்பணையிலிருந்து நீர் மற்ற முறைகளைக் காட்டிலும் அதிகமாக எல்லோருக்கும் பயன்படுகிறது.
- தடுப்பணைக்கட்டின் உயரம் கரைகளின் உயரத்தைப் பொறுத்து 1 மீலிருந்து 3 மீ வரையும், நீளம் 8 மீ லிருந்து 10 மீ வரையும் இருக்கும்.
- ஒன்று அமைப்பதற்கான செலவு ரூ. 40000 - 100000 வரை ஆகும்.
|