தவேப வேளாண் இணைய தளம் :: வேளாண் தொழில் நுட்பதகவல் மையம்
|
உழவர் உறுதுணை மையம்
நோக்கம்
உழவர் உறுதுணை மையம், விரிவாக்க கல்வி இயக்ககத்தின் ஒரு அங்கமாக துவங்கப்பட்டுள்ளது. இந்த மையம் ஒற்றை சாளர முறையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பங்களை உழவர்கள் எளிதில் பெற வழி வகை செய்கிறது.
குறிக்கோள்
- காய்கறி விதைகள், கீரை விதைகள், தீவன பயிர் விதைகள், பயிர் ஊக்கிவிப்பான்கள், தென்னை டானிக், மரம் கொல்லி, பூஞ்சாணக் கொல்லி மற்றும் வேளாண் தொழில்நுட்ப குருந்தகடுகள் ஆகியவைகளை நேரடியாக உழவர்களுக்கு விற்பனை.
- வயல்வெளி பிரச்சனைகளுக்கு ஆய்வு மற்றும் தீர்வு.
- உழவர்களின் பட்டறிவு வருகைக்கு பல்வேறு துறைகளுக்கு வழிகாட்டுதல்.
- தொழிநுட்ப செய்திகளை கருத்துக்காட்சிகள், செயல்விளக்கங்கள் மற்றும் ஒலி, ஒளி காட்சி மூலமாக வேளாண்மை தொழில்நுட்பங்களை வழங்குதல்.
- வேளாண்மையில் சாதனை உழவர்களுடன் இதர உழவர்கள் கலந்துரையாடி ஆலோசனை பெற வழிவகுத்தல்.
- தொலைபேசி மூலமாக உழவர்களின் சநதேகங்களுக்கு உடனுக்குடன் பதில் வழங்குதல்
|
ஆய்வக கூடங்கள்
- மண் பரிசோதனை ஆய்வகம்
கார அமிலத் தன்மை அறிய கட்டண முறையிலும், பயிரில் தோன்றும் நுண்ணூட்ட சத்து குறைபாடுகளை கண்டறிந்து அதற்கு பரிந்துரைகள் இலவசமாக வழங்கப்படும்.
சோதனை கட்டணம்
- அமிலகாரத் தன்மை, மின் கடத்தித்திறன், மண் அமைப்புத் தரம் மற்றும் மண்ணில் உள்ள தழை, மணி மற்றும் சாம்பல் சத்து - ரூ. 100/ மாதிரி
- அங்கக கார்பன் - ரூ. 75/ மாதிரி
- மண்ணில் உள்ள நுண்ணூட்ட ச்சத்துகள் (இரும்பு, துத்தநாகம், ஜிங்க் மற்றும் மாங்கனீசு - ரூ. 200/ மாதிரி
நீர் சோதனை
-
பூச்சி மற்றும் நோய் பரிசோதனை ஆய்வகம்
பூச்சி, நோய் மற்றும் நூற்புழு தாக்குதலை பயிர் பாதுகாப்பு ஆய்வகத்தில் ஆராய்ந்து அதற்கேற்ப பரிந்துரைகள் இலவசமாக வழங்கப்படும்.
|
|
|
சேவைகள்
- உழவர்கள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
வருகை தரும் உழவர்கள் நேரடியாக விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி வேளாண் சார்ந்த தொழில் நுட்பங்களைப் பெறலாம்.
- வேளாண்மைத் தொழில் நுட்ப கருத்துக்காட்சி
வேளாண் தொழில்நுட்ப செய்திகளை கருத்துக்காட்சிகள், செயல்விளக்கங்கள் மற்றும் ஒலி, ஒளி காட்சி மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
|
|
- வேளாண் இடுபொருட்கள் விற்பனை பிரிவு
காய்கறி விதைகள், கீரை விதைகள், தீவன பயிர் விதைகள், பயிர் ஊக்குவிப்பான்கள், தென்னை டானிக், மரம் கொல்லி, பூஞ்சாணக் கொல்லி மற்றும் வேளாண் தொழில்நுட்ப குருந்தகடுகள் ஆகியவைகள் நேரடியாக உழர்வர்களுக்கு விற்பனை செய்யப்படும். மேலும், வயல்வெளி பிரச்சனைகளுக்கு ஆய்வு மற்றும் தீர்வுகள் வழங்கப்படுகிறது.
-
பட்டறிவு பயணம்
உழவர்களின் பட்டறிவு வருகை மூலம் வேளாண் பல்கலைகழகத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு நேரடியாக அழைத்துச் சென்றுதொழில் நுட்பங்களை அறிந்து கொள்ள ஆவன செய்யப்படுகிறது.
-
சாதனை படைத்த உழவர்கள்
வேளாண்மையில் சாதனை படைத்த உழவர்களுடன் இதர உழவர்கள் கலந்துரையாடி ஆலோசனை பெற வழிவகுக்கப்படுகிறது.
-
தொலைபேசி மூலம் தகவல்
தொலைபேசி மூலமாக உழவர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதில்களைப் பெறலாம்.
|
தொடர்புக் கொள்ள வேண்டிய முகவரி
உழவர் உறுதுணை மையம்
விரிவாக்கக் கல்வி இயக்ககம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர் - 3
தொலைபேசி : 0422-6611315 / 6611219
|
|