மரக்கொல்லி
உழவர்களின் நீண்டகாலத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மரக்கொல்லியை உருவாக்கியுள்ளது.
பயன்கள்
கோயில் சுவர், மதில் சுவர், பழைய கட்டிடங்கள், கிணற்றின் பக்கச் சுவர்கள், வாய்க்கால் வரப்புகளில் வளரும் மரங்கள் மற்றும் செடிகளை அப்புறப்படுத்த பெரிதும் பயன்படுகின்றது.
எவ்வாறு உபயோகிப்பது ?
- தரைமட்டத்திற்கு சற்று உயரே மரத்தின் பட்டையை 4” என்ற அளவில் நீக்க வேண்டும்.
- மரக்கொல்லியை தகுந்த ஒட்டுப்பசையுடன் கலந்து பட்டை நீக்கப்பட்ட இடத்தில் காய்ந்து போகும் முன் தடவ வேண்டும்.
- பட்டை நீக்கப்பட்ட மரத்தின் பகுதியை துணியை வைத்து கட்டி, பின் மறுபடியும் மரக்கொல்லியை அதன் மேல் தடவ வேண்டும்.
|
|