தவேப வேளாண் இணைய தளம் :: விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகாம் :: முன்னுரை

முன்னுரை :

அரசு வேளாண் துறையை சார்ந்த சேவைகள் போதுமான அளவு இல்லாததால், தேசிய வேளாண் தொழில்நுட்ப திட்டமானது மார்ச் 29, 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சில புதுமையான தொழில்நுட்பங்களை ஆந்திரா, பீகார், ஹிமாச்சல பிரதேசம், ஜார்கண்ட் ஒரிசா, மஹராஷ்டிரா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தியது. இவ்வங்கத்தின் முக்கிய குறிக்கோள் யாதெனில் தொழில்நுட்பங்களை மாவட்ட அளவில் பரப்புவதற்கு தேவையான நிலை ஏற்பாடுகளை முதன்மை சோதனை மேற்கொள்வதன் மூலம் ஒருங்கிணைந்த விரிவாக்க விநியோகத்திற்கு வழிவகுப்பதாகும். இத்திட்டத்தில் விவசாயிகளின் பங்கு முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மாவட்ட அளவில் உள்ள விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகாம் அனைத்து தொழில்நுட்ப செயல்பாடுகளை பரப்புவதில் முக்கிய பொறுப்பு வகிக்கிறது. இவை வேளாண் சார்ந்த துறைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அரசு அல்லா நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. மேலும் இவை அனைத்தும் விவசாய தொழில்நுட்ப மேலாண்மைமுகாமின் பங்குதாரர்கள் ஆவர். பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில், மாநிலங்கள் மற்றும் மாகானத்தில் உள்ள சுமார் 252 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

ATMA  ATMA Introdcution

நோக்கங்கள் :

  1. ஆராய்ச்சி - விரிவாக்கம் - விவசாயி இவர்களின் இணைப்பை வலுப்படுத்துகிறது.
  2. மாவட்ட அளவிலோ அல்லது அதற்கு கீழோ தொழில்நுட்பத்தை செயல்படுத்துதல்/மதிப்பிடுதல் மற்றும் பரப்புதல் செயல்களில் ஈடுபட்டுள்ள பல்வேறு முகாம்களின்/நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் மேலாண்மை செய்யவும், நல்ல திறம்பட்ட முறைகளை வழங்குதல்.
  3. பரப்பப்படும் தொழில்நுட்பத்தின் தரத்தையும் வகையையும் உயர்த்துதல்
  4. இதில் பங்கேற்கக்கூடிய அனைத்து துறையினருக்கும் வேளாண் தொழில்நுட்ப முறையினை பகிர்ந்து சொந்தம் கொண்டாட செய்தல்
  5. தனியார் துறையைச் சார்ந்த அரசு சாராத பிற நிறுவனங்களையும், புதிய பங்குதாரர்களாக உருவாக்குதல்.

ஆத்மாவின் சிறப்பு அம்சங்கள் :

  1. விவசாயி ஆலோசனை குழுவை அமைத்து, அதன் பின்பாடுகளை மேம்படுத்துதல்
  2. விவசாயிகளை, அரசு சாராத நிறுவனங்களின் உதவியுடன் ஒருங்கிணைத்தல்.
  3. தொழில்நுட்ப பரிமாற்றுவதில், தனியார் துறைகளின் ஈடுபாட்டை ஊக்கப்படுத்துதல்.
  4. மாவட்டத்திலுள்ள ஆராய்ச்சி பிரிவுகளின் மூலம் தொழில்நுட்பங்களை மதிப்பிடவும் திரும்ப மேம்படுத்தவும் செய்தல்.
  5. கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு திட்டமிட வழிமுறைகளை காணுதல்
  6. தகவல் தொழில்நுட்பத்தின் உபயோகத்தை அதிகப்படுத்துதல்
  7. ஆத்மாவில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, பயிற்சி அளித்தல்.
  8. புதிய பொது - தனியார் துறையினர் பங்குதாரர்களை அதிகப்படுத்துதல்.
  9. ஆர்வமுள்ள விவசாயி குழுக்களை உருவாக்கி வலுப்படுத்துதல்.

            மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதளத்தை பார்க்கலாம்.

நிதி : 

விவசாய தொழில்நுட்ப மேலாண்மை தேவையான நிதி ஒதுக்கீடை மத்திய அரசு வழங்குகிறது. இவற்றுள் 90 சதவிகித் நிதியை மத்திய அரசும், 10 சதவிகிதத்தை மாநில அரசம் வழங்குகிறது. இவற்றுள், 10 சதவிகித நிதியை மாநிலம் அல்லது பயனாளி விவசாயிகள் அல்லது அரசு அல்லா நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.

நிதி ஒதுக்கீடு : 

பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில், மாநிலம் மாவட்டத்தில் விவசாய தொழில்நுட்ப மேலாண்மை. திட்டத்தின் செயல்பாடுகளுக்கு சுமார் ரூ.226.07 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு பயன்பாட்டின் முடிவுகளை மத்திய மாநிலம் மற்றும் மாவட்டங்களினால் எடுக்கப்படுகிறது. சுமார் 167.56  கோடி (77.53 சதவிதம்) ரூபாயை மாவட்டத்திற்கும், 22.15 கோடி (10.25 சதவிகிதம்) ரூபாய் மாநிலத்திற்கும், 26.41 கோடி (12.22 சதவிகிதம்) ரூபாய் மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வனைத்து ஒதுக்கீடையும் புதுமையான செயல்பாடுகளுக்கு இந்திய அரசின் அங்கீகாரத்துடன் மாநிலம் 1 மாவட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது.

வட்டம் மற்றும் கிராம பஞ்சாயத்து அளவில் வயல்வெளி பள்ளி அமைப்பு :

வ.எண். விலை விதிகள் ரூபாய்
1. வயல்வெளி பள்ளியில் முதன்நிலை செயல் விளக்கம் திட்டத்தை அதிகபட்சமாக 2.5 ஏக்கரில் (சுமார் ரூ.4,000 ஏக்கர்) அமைப்பதற்கு                                  10,000
2. வயல்வெளி பள்ளிக்கு ஒரு கால நிதி அளிப்பு 5,000
3. (Contigency) 2,500
4. சுமார் 25 வயல்வெளி பயிற்சியாளருக்கு வழங்கிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை சாதனங்கள் ரூ.200 சாதனம்                                     5,000
5. உரையாடல் மற்றும் பயிற்சி பற்றிய விளக்கங்கள்
அ.இரண்டு வெளி பயிற்றுனர்களுக்க அதிகபட்சமாக ஆறு முறை பயிற்சி கொடுப்பதற்கு வெகுமானமாக ரூ.150 பயிற்றுனர் பயிற்சி தரப்படுகிறது
ஆ.போக்குவரத்து செலவுகள்
இ.உணவுக்கான செலவுகள்
நாள் ஒன்றிற்கு, சுமார் 28 பயிற்சியாளர்களுக்கு @ ரூ.80/ பயிற்சியாளர் நாள் தேவைப்படுகிறது
ஈ. பிரசுரிக்கப்பட்ட தகவல் கையேடு ரூ.50/ பயிற்சியாளர்

3,000

1,800

5,040

1,400

  மொத்தம் 33,740
6. மைய/ நிலை சேவைக் கடடணம் 3,374
7. சாதனை விவசாயிகளுக்கு 8,500
8. Exposure Visit of achiever farmer  4,800
  மொத்தம் 50,414

பயனாளிகள் (தனிநபர், சமுதாயம், பெண்கள், விவசாயி மற்றும் பெண்கள்(குழு)

பயன்கள் :

பொருட்காட்சி, விவசாயின் மற்றும் பெண் விவசாய குழுக்களின் சுய மேம்பாடு, வெகுமதி மற்றும் சலுகைகள் அளித்தல்.

விளக்கங்கள் : 

விவசாயிகள் மற்றும் பண்ணை பெண் விவாசய குழுக்களுக்கு தேவைக்கு ஏற்ப உற்பத்தி மற்றும் விளைப்பொருட்கள் விற்பனை பற்றிய பயிற்சி கொடுக்கப்படுகிறது. நன்றாக செயல்படும் குழுவிற்கு வெகுமதி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது.

http://www.manage.gov.in/natp/atma.htm

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015