தவேப வேளாண் இணைய தளம் :: விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகாம் :: யுக்தியான ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க திட்டம்

யுக்தியான ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க திட்டம் :

  1. SREP என்றால் என்ன?
  2. SREPநோக்கம் யாது?
  3. SREP எவ்வாறு செயல்படுத்துவது?
  4. SREP உள்ளடக்கங்கள்
  5. திட்டத்தின் முக்கியத்துவங்கள்
  6. SREP - செயலாக்க முறைகள்
  7. மாநில விரிவாக்க செயல் திட்ம்(SEWP)
  8. மாவட்டங்களில்(SREP)
  1. SREP என்றால் என்ன?

பங்கேற்பு மதிப்பீடு மற்றும் விவசாயிகள் கருத்துகளைக் கொண்டு ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க தடைகள் ஏற்படும் காரணங்களை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் யுக்தியான ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க திட்டத்தை உருவாக்குவது. ஆத்மா, தேசிய வேளாண் மற்றும் விரிவாக்க மேலாண்மை நிலையம் தேசிய வேளாண் மற்றும் ஊரக மேலாண்மை கழகம் மற்றும் மாநில வேளாண் மேலாண்மை விரிவாக்க பயிற்சி நிலையமுடன் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.

யுக்தியான ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க திட்டம் :

பண்ணை முறை பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் விாிவாக்க தடைகளை உள்ளடக்கியதாகும். இவை மாவட்ட மற்றும் வட்டார அளவிலான செயல் திட்டத்திற்கு அடிப்படை ஆகும்.

  1. SREP நோக்கம் யாது?

    • விவசாயிகளின் பங்கேங்புகளை அதிகரித்தல் மற்றும் வட்டார அளவில்நிதி ஒதுக்கீடு செய்தல் மற்றும் பங்குதாரர்களின் பொறுப்புகளை அதிகரித்தல்
  2. SREP எவ்வாறு செயல்படுத்துவது?

முதற்படியாக, வேளாண் சூழ்நிலைகள் மற்றும் பிரச்சனைகளை விவசாய ஆலோசனைக் குழு அறிவது இவையே கண்டறிதல் பிரிவுகள் என்பதாகும். பல்வேறு பயிர்களின் தீவிர சாகுபடி பற்றிய புதுமையான தொழில் நுட்பங்களை செயல்படுத்தும் திட்டங்கள் யாவையும் யுக்தி பிரிவுகளை சார்ந்ததாகும்.

உள்ளடக்கங்கள் :

இவை இரண்டு பிரிவுகளாகும்.

 1.கண்டறிதல் பிரிவு
 2.யுக்தி பிரிவு

1.கண்டறிதல் பிரிவு : 

இப்பிரிவுகளில் மூன்று வகையான தடைகளை கண்டறிந்துள்ளனர்.

ஆராய்ச்சி தடைகள் :

பயிர் உற்பத்தியின் உள்ளூர் பிரச்சனைகளை தீர்வு காண்பதற்கு தொழில்நுட்பங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. இவையே ஆராய்ச்சி கிடைப்பதாகும்

விரிவாக்க தடைகள் :

பரிந்துரைத்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் விவசாயிகளிடம் வந்து சேரவில்லை எனில் அவையே விரிவாக்க தடையாகும்.

அபிவிருத்தி தடைகள் : 

விவசாயிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் இல்லையெனின் அவையே அபிவிருத்தி  தடைகளாகும். இவ்வனைத்தையும் பங்கேற்பு முறையில் கண்டறிவதே கண்டறிதல் பிரிவாகும். தற்பொழுது செயல்பட்டு வரும் பண்ணை முறை இயற்கை வளங்கள் தொழில்நுட்பங்கள், மற்றும் சந்தைப்படுத்தலின் பலம் பலவீனம் வாய்ப்புகள் இடர்பாடுகளை பகுப்பாய்வு செய்து அவற்றின் வெற்றிக் கதைகளை ஆவணம் செய்ய வேண்டும்.

2. யுக்தி பிரிவுகள் : 

மேற்கூறிய அனைத்து தடைகளையும் நிவர்த்தி செய்ய, யுக்திகள் மற்றும் கிரியைகளை உருவாக்க வேண்டும் விவசாயபிரச்சனைகளின் தீவிரம் மற்றும் வளங்கள் இருக்கும் தன்மையை அடிப்படையாக கொண்டு யுக்திகள் மாவட்ட அளவில் செயல்படுகிறது.

மாநில ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க திட்டத்தின் முக்கியத்துவங்கள் : 

  • பண்ணை முறை புதுமையான தொழில்நுட்பங்கள் : பதப்படுத்துதல் மற்றும் மதிப்பூட்ட பொருட்களை சந்தைப்படுத்துதல்
  • விவசாய நிர்வாக அமைப்பு : சிறு மற்றும் குற விவசாயிகள் மற்றும் அதிக மதிப்பு வாய்ந்த விளைப்பொருட்கள்
  • தொழில்நுட்ப தடைகள் :  குறிப்பாக பயிர் மற்றும்கால்நடை உற்பத்தி
  • இயற்கை வளங்கள் : மேலாண்மை குறிப்பாக மண் மற்றும் நீர் பாதுகாப்பு, மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை பின்பற்றுவதன் மூலம் பூச்சி கொல்லிகள் மருந்துகளின் உபயோகங்களை குறைப்பது

மாநில விரிவாக்க செயல் திட்டம் : 

யுக்தி திட்டத்தை விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகாம் வட்டார மற்றும் மாவட்ட அளவில், செயல்திட்டத்தை உருவாக்கின்றனர். மாநில விரிவாக்க செயல் திட்டமானது அனைத்து வட்டாரம் மற்றும் மாவட்டம் திட்டத்தை ஒன்று திரட்டி, பின்பு திட்ட செயல்பாட்டிற்கு தேவையான அளவில் நிதிகளை ஒதுக்குவதே ஆகும்.

பல்வேறு மாவட்டங்களில் மாநில ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க திட்டத்தின் செயல்பாடுகள்.

மாநிலம்  மாவட்டம் இணையதளம்
பீகார்   முஞ்சர்  http://www.atmamunger.com/SREP.htm
ஜார்க்கண்ட ஹஷாரிபாக் டூம்கா   http://www.atmaagribagh.org
கர்நாடகா    கோலார்  

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015