வங்கி மற்றும் கடன் :: கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன்
vi) நலிந்த பிரிவு மக்களுக்கு கடன் அளித்தல்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் நலிந்த பிரிவு மக்களுக்கு கடன் வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. நபார்டு வங்கி 30 % குறையாமல் சிறு தவணை கடன்களை, கூட்டுறவுகள் மூலம் 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள சிறு விவசாயிகளுக்கு வழங்க உத்திரவிட்டுள்ளது. மேலும், 14 சதவிகிதம் கடன் அளவு சிறு தவணை கடன் வழங்கவும் மற்றும் 30 சதவிகிதம் நடுத்தர தவணை கடன்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

vii) சிறு கடன் திட்டம்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் திட்டத்தை சிறு மற்றும் குறு வர்த்தகர்கள், தெரு வியாபாரிகள், மலர்கள், காய்கறிகள், பழங்கள், பெட்டிக் கடைகள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருபோர்களுக்கு நடைமுறை படுத்தப்படுகிறது. இவர்கள் கந்து வட்டி கொடுப்போரிடம் பணம் பெற்று சிக்கித் தவிக்கும் சூழலில் ஏற்படுத்தபவர்களில் முக்கியமானவர்கள். இவர்களின் கடன் தேவைகள் மிகவும் குறைவு, ஆனால் அது மிக முக்கியமானவை. அரசின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் பல வருடங்களாக ஒழுங்குபடுத்தப்பட்டவை. இத்திட்டத்தின் கீழ் எந்த பாதுகாப்பும் இன்றி ரூ. 5,000 வரை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை மேலும் கடன் அட்டை வழங்கி (அதன் பயனீட்டாளர்களுக்கு) அதை சுய உதவிக்குழுவாக ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

viii) சுய உதவிக் குழுக்களுக்கு உதவி அளித்தல்
நிதி உள்ளீடுகளில் உறுதிப்படுத்துவதற்கு சுய உதவிக் குழுக்கள் மூலம் அளிப்பது மிகவும் சிறந்ததாக அமையும். வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்துதல் இதன் மூலம் நல்ல நன்மையே கிட்டும் மற்றும் இதில் குறைவான பரிவர்த்தனைச் செலவுகளே அமையும். பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு உதவியளித்த திட்டங்களுக்கு, நிதியை சுய உதவிக் குழுக்கள் மூலம் வழங்கப்படுகின்றது.

ix)பெண் சுய தொழில் முனைவோர் கடன் திட்டம்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் கடன்களை ரூ. 10 லட்சம் வரை வழங்குகிறது. இதை 60 மாதத்  தவணைகளில் 12 சதவிகிதம் வட்டியில் பெண் சுய தொழில் முனைவோர்க்கு சிறு அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த சேவை செயல்களை எடுத்துச் செய்தல் போன்றவை.

x) வேலை செய்யும் பெண்களுக்கான கடன் திட்டம்
இத்திட்டத்தின் கீழ், மாவட்ட மத்திய வங்கிகள் மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் கடன் உதவிகளை ரூ. 1.00 லட்சம் வரையிலும் 12 சதவிகிதம் ஒரு வருடத்திற்கு வட்டி விகிதத்திலும் வேலை செய்யும் பெண்களுக்கு மாத வருமானமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த கடனை 36 தவணைகளில் திருப்பிச் செலுத்தவேண்டும்.

xi) தாய்மை காலக் கடன் திட்டம்
கூட்டுறவு கடன் நிறுவனங்கள் தாய்மை கடன்களை கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 2000 வரை 11 சதவிகிதம் வட்டி விகிதத்தில் வழங்குகிறது.

xii) தொழில்நெறிஞர் கடன் திட்டம்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தொழில்நெறிஞர் கடன்களை மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை 12 சதவிகிதம் வட்டி விகிதத்தில் ஒரு ஆண்டுக்கு வழங்குகிறது. இந்த கடனை 15 வருட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தவேண்டும்.

xiii) தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் உறுப்பினர்களுக்கு வட்டியில்லா முதலீட்டுக் கடன்
தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினருக்கு கடன் வாங்கும் சக்தியை அதிகரிக்க, வட்டியில்லா கடன்களை ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. இதையே திரும்பவும் 2008-09 ஆம் ஆண்டு தொடரச் செய்து, ரூ. 20 லட்சம், 8,000 தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் உறுப்பினர்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் ரூ. 250 ஒரு நபர் வீதம் மற்றும் ரூ. 5 லட்சம், 1000 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் உள்ள உறுப்பினர்களுக்கு ரூ. 500, ஒரு நபர் வீதம் என்று வட்டி இல்லா பகிர்வு முதலீட்டுக்கடன் வழங்கப்படும்.

xiv) பெண் உறுப்பினர்களுக்கு வட்டியில்லா முதலீட்டுக் கடன்
கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்கள் கடன் பெறும் சக்தியை அதிகரித்தல் வேண்டும். இதற்கு பங்கு முதலீட்டுத் தொகையில் அதிகரித்தல் வேண்டும். கிராமப்புற பெண்களின் ஏழ்மையான நிதி நிலைமையைப் பார்த்து, பொதுவாக நலிவடைந்த வர்த்தகத்தை சேர்ந்தவர்களுக்கு, அரசு வட்டியில்லா பங்கு முதலீட்டுக் கடனை, சாதாரண கடன் வாங்கும் அளவு 20 முதல் 40 மடங்கு பங்கு முதலீட்டுத் தொகையைப் போல வழங்கப்படுகிறது. இந்தத் தொகை 5 தவணைகளில் கடன் வழங்கிய அடுத்த ஆண்டில் இருந்து திருப்பிச் செலுத்தவேண்டும்.

வட்டியில்லா பங்கு முதலீட்டுக் கடன்களை பெண் உறுப்பினர்களாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலம் உடல் ஊனமுற்றோர், ஆகியோருக்கும் 2008-09 ஆம் ஆண்டும் வழங்க விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதே போல தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உள்ள 2000 பெண் உறுப்பினர்களுக்கு வட்டியில்லா பங்கு முதலீடுகள், ரூ. 500 விகிதத்தில் வழங்கவும், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகளில் 500 பெண் உறுப்பினர்களுக்கு ரூ. 1000 என்ற விகிதத்தில் மற்றும் கூட்டுறவு நகர்ப்புற வங்கிகளில் 1000 பெண் உறுப்பினர்களுக்கு ரூ. 500 என்ற விகிதத்திலும் மற்றும் 1000 உடல் ஊனமுற்றோர்களுக்கு ரூ. 500 என்ற விகிதத்தில் மேற்கண்ட வங்கிகளில் வழங்கப்படுகிறது.

ஆதாரம்
http://www.tngov.in/policynotes/cooperation_2html.
http://www.lbsnaa.ernet.in/lbsnaa/research/ccrd/saconf(98).html
http://www.tn.gov.in/policynotes/archives/policy2004-05/pdf2004/cfcp2004-05.pdf

 

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013