2.) நீண்ட கால தவணை கடன் அமைப்பு
நீண்ட கால தவணை கடன் அமைப்புகள் தலைமை வங்கி அதாவது தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி - சென்னை, 180 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் தாலுக்கா / வட்டார அளவிலும் கொண்டுள்ளது. இந்த நிதி நிறுவனங்கள் உறுப்பினர்களுக்கு முதலீட்டுக் கடன்களை சிறு பாசனம், தோட்டக்கலை, மலைப்பயிர்கள் மற்றும் இதர வேளாண்மை மற்றும் அதன் சார்ந்த துறைகளுக்கு வழங்குகிறது.
i) தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (TNCSARDB)
தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி கடன் வழங்குவதற்கு சாதாரண மற்றும் சிறப்பு மேம்பாட்டுக் கடன் பத்திரங்கள் மூலம் நிதியை ஏற்படுத்தி வழங்குகிறது.
தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி அனைத்து தொடக்க வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகளுக்கும் முதன்மை வங்கியாகவும் விளங்குகிறது. இவை நீண்டகால கடன் தவணைகளை வேளாண்மை மற்றம் அதன் சார்ந்த தொழில்களுக்கு வழங்குகிறது. இவ்வங்கி 1929 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 20 மண்டல அலுவலகங்கள், ஒன்று அல்லது இரண்டு மாவட்டங்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் வரும்படி உள்ளது. தொடக்க வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் தாலுக்கா மற்றும் வட்டார அளவில் மாநிலம் முழுவதும் உள்ளவற்றை அனைத்தும் மாநில வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிக்கு இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கியின் முக்கிய நோக்கம் தொடக்க வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகளுக்கு நிதியளித்தல். வங்கி கீழ்க்கண்ட செயற்கூறுகளை எடுத்து மேற்கண்ட குறிக்கோள்களை அடைய முனைந்துள்ளது.
- கடன் பத்திரங்கள் வெளியீடுகள்
- வைப்பு நிதிகளை வாங்குதல்
- தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கித் தேவைகளுக்கு நபார்டு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அங்கீகாரத்தின்படி கடன் வழங்கப்படும்.
- பதிவாளர் குறிப்பிட்டள்ளதின் படி எந்த கூட்டுறவு வங்கிகளின் முகவராகவும் சில நிபந்தனைகளுடன் செயல்படலாம்.
- இணைக்கப்பட்டுள்ள தொடக்க கூட்டுறவு வேளாண்மை,கிராம மேம்பாட்டு வங்கிகளின் வேலைகளை மேம்படுத்துதல், உதவி செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்.
வங்கி நீண்டகாலத் தவணை மற்றும் நடுத்தரத் தவணை கடன்கள் வேளாண்மை மற்றும் அதன் சார்ந்த செயல்களான கோடோன் கட்டமைப்பு, கால்நடை கொட்டகை அமைத்தல், பண்ணை வீடு, நிலம் வாங்குதல் மற்றும் சிறு பாசன திட்டங்களான புது கிணறுகள் அமைத்தல், இருக்கின்ற கிணறுகளை ஆழப்படுத்துதல் ஆகியவற்றிற்கு வழங்குகிறது. அதுபோல நீண்ட தவணை கடன்கள் கால்நடைகள், மீன் வளர்ப்பு, மலைப்பயிர்கள், பண்ணை இயந்திரமயமாக்கல், பண்ணை சாராத் துறைகள் மற்றும் இதர பெரும் பாசனத் திட்டங்கள் ஆகியவற்றிற்கு வழங்குகிறது.
மாநில வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி இரண்டு வகையான கடன் பத்திரங்களை நிதி திரட்டுவமற்காகவும் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வழங்கவும ஏற்பாடு செய்திருக்கிறது.
1. நபார்டு வங்கி மற்றும் மாநில மத்திய அரசுகள் பரிந்துரைத்த சிறப்பு வளர்ச்சி கடன் பத்திரங்கள்.
2. சாதாரண கடன் பத்திரங்கள் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் இதர நிறுவன முதலீட்டாளர்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்டது.
ii) தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் (PCARDB)
தாலுக்கா / வட்டார அளவில் மொத்தம் 180 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் உள்ளது. இவை விவசாயிகளுக்கு நீண்ட தவணை கடன்கள் திருப்பிச் செலுத்தும் காலம் 5 முதல் 15 வருடங்கள் வரை நீடிக்கும் வகையில் வழங்குகின்றனர். இவ்வங்கி வளர்ச்சித் திட்டங்களான சிறுபாசனம், மலைப்பயிர்கள் சாகுபடி, பலதரப்பட்ட தேவைகளான கோழிப்பண்ணை, பால் பண்ணை, பட்டுப்புழு வளர்ப்பு ஆகியவை திட்ட வடிவில் செயல்படுத்த கடன் வழங்கப்படுகிறது. இவை தேவையான நிதி உதவிகளை தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கியிடம் பெற்றுக் கொள்கின்றன. தற்போது மாநிலத்தில் 181 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் செயல்படுகின்றன.
இதர நிதி முகவர்களுடன் போட்டியிட்டு இதன் வாய்ப்புகளை விரிவுபடுத்திக் கொள்வதற்கு, தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் கைவினைஞர்கள், சிறு தொழில் முனைவோர் ஆகியோருக்கு கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கி சிறு சாலை போக்குவரத்து இயக்குநர்கள் கிராமப்புறங்களில் பயணிகள் வாகனங்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனம் வாங்கவும் கடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, 2007-08 ஆம் ஆண்டு, தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் மீண்டும் பண்ணை சாரா துறைகளுக்கும் மற்றும் நகைக் கடன்களும் வழங்குகின்றது.
அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து நபார்டு வங்கியிடம் இருந்து மறுநிதியளிப்பு வசதியை 2008-09 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்துள்ளது. தோட்டக்கலை, இயற்கை விவசாயம், நவீன தொழில்நுட்ப பண்ணையம், துல்லிய பண்ணையம், சிறு பாசனத் திட்டங்கள் நிறைந்த செயல்களான மலர் சாகுபடி, மருத்துவப் பயிர்கள் சாகுபடி, தரிசு நிலத்தில் சாகுபடி மற்றும் பண்ணை இயந்திரமயமாக்கல் ஆகியவற்றிற்கு விவசாய முதலீட்டுக் கடன் 2008-09 ஆண்டு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால கூட்டுறவு கடன் அமைப்புகள் சீரமைப்பு திட்டத்தின் படி பேராசிரியர். அ. வைத்தியநாதன் குழுவின் பரிந்துரைகள் இந்திய அரசு அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கோட்பாட்டின்படி, அரசு ஏற்கெனவே மறு சீரமைப்புத் திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதை நடைமுறைப்படுத்தினால் நீண்ட தவணைக் கடன் வழங்கும் அமைப்புகள் எதிர் நோக்கும் நஷ்டங்களைக் களைந்து, திரும்பவும் விவசாய முதலீட்டுக் கடன் மூலம் முக்கிய இடத்தைப் பிடிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. |