வங்கி மற்றும் கடன் :: கிரிஷாக் பாரதி கூட்டுறவு லிமிடெட்
கிரிஷாக் பாரதி கூட்டுறவு லிமிடெட் (KRIBHCO)

கிரிஷாக் பாரதி கூட்டுறவு லிமிடெட் (KRIBHCO) உரத் தயாரிப்பிற்கு ஒரு முன்னோடி கூட்டுறவு சங்கம். இது பல மாநில கூட்டுறவு சங்கங்களின் விதி 1985 - ன் கீழ் பதிவு செய்யப்பட்டது. இந்திய அரசு, இஃப்கோ, என்.சி.டி.சி மற்றும் நாட்டில் உள்ள இதர வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஊக்குவிக்கப்பட்டது. கிரிஷாக் பாரதி கூட்டுறவு லிமிடெட் (KRIBHCO) உரத் தொழிற்சாலை யூரியா, அமோனியா மற்றும் உயிர் உரங்கள் தயாரிப்பு வளாகம் குஜராத் மாநிலம் ஹசிரா என்ற இடத்தில் தப்தி ஆற்றின் கரை ஓரத்தில், சூரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில், சூரத் - ஹசிரா நெடுஞ்சாலையில் உள்ளது.

  • திட்டப்பணி மற்றும் நோக்கம்
  • குறிக்கோள்
  • விவசாயிகளுக்கு சேவைகள்
  • சந்தைபடுத்துதல்

திட்டப்பணி
விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு ஊக்குவிக்கும் காரணியாக செயல்பட்டு சமூக ரீதியிலும் வர்த்தக ரீதியிலும் லாபகரமாக இருக்கும் திட்டங்களை தேர்வு செய்து நிதியளித்து அதை நிர்வாகம் செய்தல்.

நோக்கம்
நாங்கள் உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக விவசாய சமுதாயத்தை முன்னிறுத்தி செயல்படவும், விவசாய இடுபொருள் மற்றும் பொருட்களில் குறிப்பாக செயல்பட்டு அதில் அதிக வருவாய் ஏற்படுத்தியும், மற்றும் பங்கீட்டாளரின் மதிப்பை உயர்த்தும் வகையில் இதர பல தொழில் துறையிலும் முன்னோடியாக திகழ விழைகிறது.

குறிக்கோள்

  • யூரியா தயாரிக்கச் செய்யும் கொள்ளளவை உயர்த்தி, அதன் சந்தை மதிப்பை பராமரித்தல்.
  • இருக்கின்ற செயல்களன் மற்றும் இயந்திரங்களை முழுவதும் பயன்படுத்த உறுதிபடுத்திக் கொள்ளுதல்.
  • இதர முக்கியத் துறைகளான மின்சாரம், எல்.என்.ஜி துறைமுகம், இராசயனம் ஆகியவற்றில் விரிவுப்படுத்துதல்.

விவசாயிகளுக்கு சேவைகள்

  • கிசான் உதவிக்கரம்
  • ஊக்குவிப்பு நிகழ்ச்சி
  • கிரிஷாக் பாரதி சேவா கேந்திரா
  • சன்கட் ஹரன் பீமா யோஜ்னா

1. KRIBHCO கிசான் உதவிக்கரம் (இரு வழிகளிலும்)

  • நடைமுறையில் உள்ள கிசான் உதவிக்கரம் விவசாயிகளுக்கு வல்லுநர்களின் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. கேள்விகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.

அல்லது
கேள்விகளை 0120-2535628 என்ற எண்ணில் கேட்கலாம். இந்த உதவிக்கரம் முற்றிலும் இலவசம்.

2. KRIBHCO கிரிஷி பரமர்ஷ் கேந்திரா
கீழ்கண்ட அனைத்து வசதிகளும் விவசாயிகளுக்கும் கூட்டுறவுகளுக்கும் முற்றிலும் இலவசம்.

  • பேரூட்டச் சத்துக்கள் சோதனை (தழை, மணி, சாம்பல், சல்பர், கால்சியம், மக்னீசியம்)
  • நுண்ணூட்டச் சத்துக்கள் சோதனை (சின்க், காப்பர், இருப்பு, மாங்கனீஷ், போரான், மாலிபிடினியம்)
  • பாசன நீர் சோதனை
  • மண் பரிசோதனை அறிக்கையை இணையதளத்தில் வெளியிடுதல்.
  • மண் மேம்பாட்டுத் தகவல்கள்
  • விவசாய வானிலைத் தரவுகள்
  • விவசாய இடுபொருள் தகவல்கள்
  • விவசாய கண்காட்சி
  • தொழில்நுட்ப ஆய்வுகளை வெளியிடுதல்
  • விவசாயிகள் மற்றும் கூட்டுறவுகள் கல்வி பயணம்
  • விவசாய இலக்கியம்
  • மாத வாரியாக பண்ணை வேலைகள்

3. கிரிஷாக் பாரதி சேவா கேந்திரா (KBSK)
இந்த கேந்திரா தேவையான முக்கிய விவசாய இடுபொருட்களை உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லி, பண்ணை உபகரணம் மற்றும் தொழில்நுட்பம் அனைத்தும் ஒரு குடையின் கீழ் வழங்குகிறது. விவசாயிகள் இதன் மூலம் தரமான இடுபொருட்களை பெறுகின்றனர் மற்றும் அவர்கள் தங்களது பொன்னான நேரத்தை பல இடங்களில் இடுபொருட்கள் சேகரிப்பில் ஈடுபடுவதில் இருந்து சேமிக்கலாம். நமது கிரிஷாக் பாரதி கேந்திராவில் (KBSK) நன்றாக அமர்ந்து படிக்கும் இடம் இருக்கிறது.

4. சன்கட் ஹரன் பீமா யோஜ்னா
விவசாயிகளின் நலன் கருதி, M/s. பஜாஜ் அலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனம் லிமிடெட், ஜனவரி 1, 2006 முதல் தொடங்கிய சன்கட் ஹரன் பீமா யோஜ்னாவில் கலந்து கொண்டது.

இத்திட்டத்தின் கீழ் கூட்டுறவு சங்கங்கள் / கிரிஷாக் பாரதி சேவா, கேந்திரா ஆகியவற்றிடம் இருந்து KRIBHCO யூரியா வாங்கும் பொழுது, விபத்து மூலம் ஊனம் அல்லது இறக்க நேரிட்டால் விவசாயிகளுக்கு காப்பீடு வசதி செய்யப்படுகிறது. KRIBHCO யூரியா ரூ. 4000 மதிப்புள்ள ஒவ்வொரு மூட்டை வாங்கும் பொழுதும், இத்திட்டத்தின் கீழ் “சன்கத் ஹரன்” பீமா திட்டம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச வசதிகள் ஏதேனும் ஒரு விவசாயிக்கு அவர்களின் மூட்டை எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், அதன் விலையில் ரூ. 1,00,000 / வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சந்தைபடுத்துதல்
கூட்டுறவு / நிறுவனங்களின் முகவர்கள் மூலம் / உரங்களை விற்பனை செய்கிறது.

கூட்டுறவுகள்

  1. தலைமை கூட்டமைப்பு
  2. மாவட்டம் / தாலுக்கா விற்பனைச் சங்கங்கள்
  3. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் (PACS) இதர கிராம அளவிலான சங்கங்கள்.

நிறுவன முகவர்கள்

  1. விவசாய தொழில் கழகம்
  2. இதர கழகங்களான நில சீரமைப்பு கழகம்

சொந்த விற்பனை
கிரிஷாக் பாரதி சேவா கேந்திரா (KBSK)

மாநில விற்பனை அலுவலகத்தின் முகவரி
மாநில விற்பனை மேலாளர்,
KRIBHCO,
மாடியூல் எண் 1,2 மற்றும் 3,
சிட்கோ கார்மண்ட் வளாகம்,
திரு.வி.க தொழில்பேட்டை,
கிண்டி,
சென்னை - 600 032.
தொலைபேசி : 044-22324063 (அலுவலகம்)

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

ஆதாரம்  : http://kribhco.net/

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015