தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட் 1905 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் பதிவு செய்யப்பட்டு 26, நவம்பர் 1905 முதல் செயல்பட்டு வருகிறது. வங்கி 102 ஆண்டுகளை நிறைவு செய்து, அதன் 103 வது ஆண்டு எடுத்து வைக்கும் §வலையில் பயனுள்ள சேவைகளை தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்குத் தேவையான கடன்களை பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களான மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றிற்கு வழங்கியுள்ளது. இவ்வங்கி பாரத ரிசர்வ் வங்கியின் இரண்டாவது பட்டியலில் ஜீலை 1966 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டு, ஆகஸ்ட் 1972 - ல் உரிமம் பெறப்பட்டது.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பேரவை. இவ்வங்கி நபார்டு வங்கி வழங்கும் மறுநிதியளிப்புகளை சிறு தவணை மற்றும் நடுத்தர தவணைகளை வேளாண்மை மற்றும் இதர துறை கடன்களை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கியுள்ளது. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட் தொடக்க கூட்டுறவு மேம்பாட்டு நிதியத்தை நிர்வகித்து வருகிறது. இவை மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் லாபத்தின் மீது வழங்கப்பட்ட நிதியாகும். தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட், கடன் திட்டங்கள் மற்றும் கடன் கொள்கைகளை தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு முன் வரைவு ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.தலைமை வங்கி மாநிலத்தில் வெற்றிகரமாக பொது விநியோக முறையின் கீழ் மறுநிதியளிப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட் - ன் செயற்கூறுகள்
- மாநில கூட்டுறவு வங்கிகள் சிறு தவணை கடன், நடுத்தர தவணை கடன்கள் மற்றும் முன்பணம் ஆகியவற்றை விவசாயம் மற்றும் அதன் சார்ந்த வேலைகளுக்கு வழங்கி வருகிறது. அதே போல், இவ்வங்கி கடன்களை பல்வேறு கிராம மேம்பாட்டு திட்டங்களை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தலைமை கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டு அமைப்புகள் மற்றும் நேரடியாக அதன் தலைமை அலுவலகம் மற்றும் கிளைகள் மூலமாக வழங்குகிறது.
- கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல் ஆகியவற்றுடன், இவ்வங்கி மற்ற இதர வங்கியியல் வசதிகளான பாதுகாப்பு வைப்பு நிதி பெட்டகம் வாடகைக்கு எடுத்தல், முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பு வளையத்தில் வைத்தல், நிதி மாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கு உதவுகிறது.
- இவ்வங்கி கீழ்க்கண்ட செயல்களை மேம்பாட்டு வசதிகளுக்கு ஏற்படுத்துகின்றது. மாநிலத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு நிதி வழங்குவதற்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் கூட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் முதலீடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டப்படியான மற்றும் அல்லாத தேவைகளுக்கு - இவ்வங்கி உதவுகிறது. இது சொத்துக்களை வர்த்தகம் செய்வது, விற்பனை மற்றும் வாங்குதல் ஆகியவற்றிற்கு உதவுகிறது.
- வங்கி தொடக்க கூட்டுறவு மேம்பாட்டு நிதியத்தை ஏற்படுத்தி மாநிலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு அறைகள் கட்டமைப்பு, நகை பாதுகாப்புக்கு பெட்டக வசதிகளை வாங்குதல், நவீனமய வங்கி சேவை முகப்புகளை ஏற்படுத்துதல், பாதுகாப்பு கதவுகள் நிறுவுதல் ஆகியவற்றை ¦சய்து வருகிறது.
- தலைமை வங்கி, மாநிலத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டை கண்காணித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வங்கிகள் நல்ல முறையில் இயங்குவதற்கு உதவுகிறது.
- வங்கிகள் வைப்பு நிதி உத்திரவாதத் திட்டத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு இந்திய அரசு / தமிழ்நாடு அரசின் உதவியுடன் ஏற்படுத்தி வைப்பு நிதிகளுக்கு காப்பீடு வழங்குதல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஏற்றுக் கொண்டதுடன் வழங்கப்படுகிறது.
- மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டைக் கண்காணிக்க, வங்கி தனிப்பட்டத் துறையை ஏற்படுத்தி மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- வங்கி, திட்ட மதிப்பீடுகளை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு தொழில்நுட்பப் பிரிவை ஏற்படுத்தி, அதற்கான அறிவுரைகளை வழங்கி வருகிறது. இது நபார்டு வங்கியின் பண்ணை சாரா திட்டங்களை முடிக்க உதவுகிறது.
- வங்கி மாநில அளவிலான தொழில்நுட்பக் குழுவை ஒவ்வொரு வருடமும் கூட்டி, அனைத்து பயிர்களுக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரே மாதிரியான நிதிகளை பருவகால விவசாய வேலைகளுக்கு வழங்குகிறது.
- விவசாய முன்பணம்
- சுய உதவிக் குழுக்கள்
விவசாய முன்பணம்
சிறு தவணை மற்றும் விவசாய முன்பணம்
கடன் அளவுகள் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு பருவகால விவசாய வேலைகளுக்கு நிதி வழங்குதல்.
தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம்
விரிவான பயிர் காப்பீட்டுத் திட்டம் 1985 ஆம் ஆண்டு கரீஃப் பருவகாலம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் மூலம் மாற்றி அமைக்கப்பட்டு, 2003-04 ஆம் ஆண்டு பயிர்களுக்கு DCCB மூலம் மற்றும் பகுதிகள் தமிழ்நாடு மாநில அளவிலான கூட்டுக் குழுவின் பயிர் காப்பீடுகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
கிசான் கடன் அட்டைத் திட்டம்
கிசான் கடன் அட்டைத் திட்டம், இந்திய அரசின் மாண்புமிகு நிதி அமைச்சர் 1998 - 99 ஆம் ஆண்டின் வரவு செலவு தாக்கல் செய்யும் போது அறிவித்தார். இதை நபார்டு வங்கி மற்றும் பாரத ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) - யிடம் கலந்து ஆலோசித்த பின் வரைவு செய்யப்பட்டது. இத்திட்டம் அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் ஆர்.சி.எஸ் மூலமாக தமிழ்நாடு அரசின் முழு அங்கீகாரத்துடன் அனுமதிக்கப்பட்டது. மேலும் நபார்டு வங்கி பாரத ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடன் இணைந்து, சுய விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை (பி.ஏ.ஐ.எஸ்) இறுதி செய்து கே.சி.சி உள்ளவர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. பி.ஏ.ஐ.எஸ் திட்டம் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் பி.ஏ.சி.பி மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
சுய உதவிக் குழுக்கள்
- தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மாநகராட்சி பெண்கள் மேம்பாட்டிற்கு மகளிர் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி உள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவிகளை சுய உதவிக்குழு வங்கி இணைப்பு திட்டத்தில் நபார்டு வங்கி அறிமுகப்படுத்தியதன் மூலம் வழங்கி வருகிறது.
- கூட்டுறவு வங்கிகள் சுய உதவிக் குழுக்களுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் நிதி உதவிகளை வழங்குகிறது.
தகுதி அடிப்படைகள் (பகுதி 1)
- 6 மாதங்களுக்கு மேல் குழு இயங்கி வருதல் வேண்டும்.
- குழுவின் அளவு 12 முதல் 20 நபர்களுக்குள் இருத்தல் வேண்டும்.
- ஒரு மாதத்திற்கு குறைந்தது இரண்டு கூட்டம் நடைபெற வேண்டும்.
- குழுவினர் வங்கி கடன்களை ஏமாற்றியவராக இருத்தல் கூடாது.
- உள் மற்றும் வெளிக்கடன்களுக்கு 85 சதவிகிதம் குறையாமல் திரும்பப் பெறுதல் வேண்டும்.
- உள்புறக்கடன்களுக்கு 50 சதவிகிதம் உறுப்பினர்கள் குறையாமல் தகுதியுடைவர்கள்.
- அனைத்து உறுப்பினர்களும் சீராகப் பணம் சேமித்து வருதல்.
- சரியான முறையில் கணக்குப் புத்தகங்களை பராமரித்து வருதல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட அனைத்து 8 முக்கியத் தகுதி அடிப்படைகளைப் பெற்றிருப்பின், அவர்கள் மட்டுமே கடன் வழங்குவதற்கு தகுதியுடைவராக எடுத்துக் கொள்ளப்படுவர். மேற்குறிப்பிட்ட 8 தகுதிகளை பூர்த்தி செய்யாமல் இருந்தால், முதல் கட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்படுவர் மற்றும் அவர்கள் வரிசை குழுவில் எடுத்துக் கொள்ளப்படமாட்டார்கள். அக்குழுவினர் குறைந்தபட்ச தகுதிகளை நிறைவு செய்தால் மீண்டும் மனு செய்ய தகுதியுடையவர்களாவர்.
கடன் அளவுகள்
கூட்டு மதிப்பீட்டுக் குழுவின் மதிப்பீடுகளைப் பொருத்து, கீழ்க்கண்ட கடன் அளவுகள் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் பரிந்துரைக்க தகுதியுடையவராவர்.
- சுய உதவிக்குழுக்களுக்கு தவணைக் கடன் அல்லது சுழல் நிதி கடன், அவர்களின் சேமிப்பு : கடன் அளவு விகிதாச்சாரத்தில், 1:4 என்ற விகிதத்திற்குக் குறையாமல் வழங்கப்படும்.
- முதன் முறை கடன் வழங்கும் பொழுது, அவர்களின் சேமிப்பில் 4 மடங்கு அளவிற்கு அதிகமாக வழங்கப்படும். பின் குழுவின் செயல்பாடுகளை நீண்ட நாட்கள் பார்த்து விட்டு, கடன் அளவுகள் 1:4 என்ற விகிதாச்சாரத்தில் நிர்ணயிக்கப்படும். இது 1:15 அல்லது அதற்கும் மேல் உள்ள அளவுகளில் பின் உயர்த்தப்படும்.
- அதிகபட்ச அளவு நிர்ணயிப்பது அதாவது சேமிப்பில் 4 மடங்கு அளவிற்கு மேல் வழங்குவதை கூட்டு மதிப்பீடு குழுவினரிடம் வழங்கி அதை வங்கி அரசு சாரா நிறுவனம் மற்றும் பி.ஐ.யூ மூலம் பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.
கடன் தேவை
கடன்கள் உற்பத்தித் தேவைகள் அல்லது நுகர்வுத் தேவைகள் அல்லது இரண்டுக்கும் உபயோகப்படுத்தப்படும். இருப்பினும், குழுக்களிடம் உற்பத்தித் தேவைகளுக்காக மட்டுமே கடன்களை உபயோகப்படுத்த ஊக்குவிப்பு வழங்க வேண்டும். நுகர்வு கடன்கள் வருவாய் கிடைக்க உதவி செய்யாது மற்றும் இதன் மூலம் கடன் தவணை திருப்பிச் செலுத்த இயலாது.
கடன் வகை
6 மாதங்கள் முதல் 2 வருட வயதுடைய சுய உதவிக் குழுக்கள் வங்கி கடன் பெற தேர்வு செய்ய வேண்டிய வழிமுறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
தவணை கடன்
அதிகப்படியான உறுப்பினர்கள் சுய உதவிக் கடன் கிராம பண்ணை மற்றும் பண்ணை சாரா செயல்களுக்குப் பயன்படுத்துதல், மற்றும் இவை குறிப்பிட்ட இடைவெளிக்குள் வருவாய் ஏற்படுத்துவதால், மகளிர் திட்டம் குழுக்களுக்கு கடன்கள் தவணை முறையில் வழங்கப்படுகின்றது. வங்கிகள், அரசு சாரா நிறுவனம் மற்றும் பி.ஐ.யூ மூலம் கலந்து ஆலோசித்து, இரண்டாவது அல்லது அதற்குப் பிறகு கடன்களை அவர்களின் நடைமுறைப்படி வழங்குகிறது.
சுழல் கடன் நிதி
சுய உதவிக் குழுக்கள் சுழல் கடன், வங்கிகளிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். சுழல் நிதி கடன் போன்று கணக்கை நடத்தி வருதல் ஆகும். சுழல் நிதி கடன் பல கடன் கணக்குகளை ஒரே குழுவின் பெயரில் அதிக நாட்களுக்கு இருப்பதை அனுமதிப்பது இல்லை. மேலும் அதன் கணக்கில் வரவு செலவு அதிகமாக இருப்பின் (அதாவது தொடர்ந்து கடன் பெறுதல் மற்றும் அதிக அளவில் பெறுதல் மூலம்) அதன் மூலம் சுய உதவிக் குழுக்கள் அதிக அளவு கடன் பெறலாம், மற்றும் உறுப்பினர் கடன் தேவைகளை கடன் அளவு அனுமதிக்கப்பட்ட அளவு வரை பெற்றுக்கொள்ளலாம்.
அதன் அளவுகளை ஆண்டுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்து கொள்ளப்படும். சுழல் நிதி கடன் கணக்குகளின் செயல்பாடுகள் மற்றும் சுயஉதவி குழுக்களின் செயற்கூறுகளைப் பொறுத்து, அதன் அளவுகள் புதுப்பித்தல் அல்லது ஊக்குவிப்பு வங்கிகள், அரசு சாரா நிறுவனம் மற்றும் பி.ஐ.யூ நிறுவனம் ஆகியவற்றின் மூலம் கலந்து ஆலோசித்து ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் முடிவு செய்யப்படும். இரண்டாம் ஆண்டு ஆரம்பத்திலேயே அதிகப்படியான அளவுகளை முடிவு செய்ய, குழுவின் சேமிப்புகள் முதலாம் ஆண்டின் இறுதி நாளை அடிப்படை ஆண்டாக எடுத்துக் கொள்ளப்படும். தவணை கடன் அனுமதித்தல் அல்லது சுழல் நிதி கடனின் அளவுகளை அனுமதிப்பதை சுய உதவிக்குழுக்கள் மற்றும் வங்கிகளிடமே விடப்பட்டுள்ளது. எனவே, நன்றாக செயல்படும் குறிப்பிட்ட சுய உதவிக் குழுக்களுக்கு மட்டும் சுழல் நிதி கடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அளவு
கடன் தொகை பொருட்படுத்தாமல், எந்த அளவும் தேவை இல்லை. கடன் அளவுகளின் இலக்கை அடைவதற்காக சேமிப்புகளை தடை செய்தல் கூடாது. மானியத் தொகை எதையும் இத்திட்டத்தின் கீழ் TNCDW மூலம் குறிப்பாக பார்ப்பதில்லை. இருப்பினும், இதரத் திட்டங்களான TAHDCO, NBCFDC சிறு கடன் திட்டங்கள் ஆகியவை M.T - யுடன் இணைப்பது மற்றும் இவற்றை சில குறைந்தபட்ச தகுதி அடிப்படைகள் மற்றும் கடன் அளவு முறை மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு கிடைக்கும் படி செய்யப்படுகிறது. மானியம் மற்றும் அதன் அளவுகள், அந்தக் குறிப்பிட்ட திட்டங்களின் வழிமுறைகள் பொருத்து வழங்கப்படுகிறது.
வட்டி விகிதம்
தற்போதைய வட்டி விகித அமைப்பு, பாரத ரிசர்வ் வங்கி நபார்டு ஆகியவற்றின் மூலம் நிர்ணயிக்கப்பட்டவை. சுய உதவிக்குழுக்களின் வங்கி இணைப்புத் திட்டம் மூலம் வழங்கப்படுகின்றது.
நபார்டு மூலம் எஸ்.சி.பி (மறுநிதியளிப்பு) : 6.00 % *
வங்கிகள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்குபவை : 9.00 % * ரூ. 50,000 வரை
சுய உதவிக் குழுக்கள் உறுப்பினர்களுக்கு : சுய உதவிக் குழுக்களின் முடிவைப் பொருத்து.
(* பாரத ரிசர்வ் வங்கி / நபார்டு வங்கியின் வழிமுறைப்படி, நேரத்திற்குத் தகுந்தது போல் மாறுபடுபவை)
பாதுகாப்பு
கடனை சரியாகத் திருப்பிச் செலுத்துவதற்கு குழு உறுப்பினர்கள் இணைந்து பொறுப்புள்ளவர்களாவர். எந்த கூட்டு பாதுகாப்பு முறையும் நிர்ப்பந்திக்கப் படுவதில்லை. எந்தச் சூழ்நிலையிலும், குழு சேமிப்புகள் பாதுகாப்புகளாக தடை செய்யப்பட மாட்டாது.
கடன் வழங்கும் முறை
கடன்கள் மொத்த தொகையாக ஒரு முறை அல்லது பகுதிகளாக, அந்த குழுவினரின் கடன் தேவை கேட்டுக்கொண்டதன் படி வழங்கப்படும். குழுவினரின் முடிவின்படி, தொகையை அவர்கள் எடுத்து தேவையான உறுப்பினர்களுக்கு வழங்குவர்.
திருப்பிச் செலுத்தும் காலம்
தவணை கடன்
திருப்பிச் செலுத்துவதற்கு எந்த விதிமுறையும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவும் இல்லை. திருப்பிச் செலுத்தும் காலம் வங்கி மற்றும் சுய உதவிக் குழு ஆகியவற்றின் மூலம் இணைந்து முடிவு செய்யப்படும்.
சுழல் நிதி கடன்
இதை நடப்பு கணக்காக நீடிக்க அனுமதிக்கப்படும். இருப்பினும், கணக்கில் அதன் வரவு செலவு (கடன் அளவுகள் அதன் வருடத்தில்) அளவுகள் அந்த குறிப்பிட்ட அளவிற்கு கீழ் செல்லுதல் கூடாது. ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும், கணக்கை மறு ஆய்வு செய்து பின் வங்கி மூலம் அந்த குழுவின் செயல்பாடு மற்றும் பொருத்தமான அளவு வழங்கப்பட்டவை ஆகியவற்றை புதுப்பித்து வழங்கப்படும்.
இருப்பினும், வங்கி விதிக்கும் வட்டி விகிதம் கடன் தவணை மற்றும் சுழல் நிதி கடன் ஆகியவற்றை அந்த குழு சரியானபடி செலுத்தவேண்டும்.
தொடர்பு முகவரி
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட்,
233, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை,
சென்னை - 600 001
தொலைபேசி : 25340301, 25340304, 25340321
25340351, 25340391, 25340421
தொலை நகல் : 044 25340508
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
ஆதாரம்
http://www.tnscbank.com/agriculture3.html
http://www.tnscbank.com/shg2.html
http://www.tnscbank.com/sf2008.pdf
http://www.tn.gov.in/policynotes/archives/policy2004-05/pdf2004/cfcp2004_05.pdf |