வங்கி மற்றும் கடன் ::இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்சிம் வங்கி)
இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்சிம் வங்கி)

எக்சிம் வங்கி ஜனவரி மாதம் 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வங்கி நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவித்து, அதிகமான இறக்குமதிக்கு பணம் வழங்க ஐ.டி.பி.ஐ வங்கியின் சர்வதேச நிதித் துறையின் வேலைகளை எடுத்துக் கொண்டுள்ளது.

இது இதர நிறுவனங்களுக்கு தலைமை முகவராகவும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி இறக்குமதி நிதியமைப்புகளை ஒருங்கிணைக்கும் வேலைகளையும் செய்து வருகிறது.

வணிக வங்கிகள் மற்றும் இதர ஏற்றுமதி இறக்குமதிப் பகுதிகளில் செயல்திட்டம் நடைமுறைப்படுத்துதல் மற்றும் நிதியளிப்பு வசதிகள் ஆகியவற்றை இவ்வங்கி செயல்படுத்தி வருகிறது.

இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி விதி 1981- ன் படி, வங்கிக் கடன் மற்றும் முன்பணம் ஆகியவற்றை உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ மற்றும் வங்கி தன்னிச்சையாகவும் அல்லது வேறொரு வங்கியின் பங்கீட்டு நிதி நிறுவனத்துடனோ வழங்கும். இவ்வங்கி ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றிற்கு நிதியளிப்பதில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது.

குறிக்கோள்
வங்கியின் முக்கிய அடிப்படை நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, அதன் குறிக்கோளை கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

  1. ஏற்றுமதி இறக்குமதி துறைகளில் நிதி, தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் துறைகளில் உதவி செய்தல்.
  2. ஏற்றுமதி சம்பந்தமான ஏற்பாடுகளில் திட்டமிடல், ஊக்குவிப்பு, மேம்பாடு மற்றும் நிதியளிப்பு.
  3. நிதி ஆராய்ச்சி, கருத்தாய்வு தொழில்நுட்ப - பொருளாதார ஆய்வுகள் ஆகியவை வெளிநாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடுகளில் செய்யப்படுபவை.
  4. சர்வதேச வர்த்தகம் தொடர்பான சந்தை மற்றும் கடன் தகவல்களைச் சேகரித்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் வெளியிடுதல்

செயற்கூறுகள்

  1. ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான பொருட்கள் சேவைகளை நிதியளிப்பிற்கு இந்திய நாட்டிற்கு மட்டுமன்றி மூன்றாம் தர உலக நாடுகளுக்கும் வழங்கப்படுகிறது.
  2. இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை வாடகைக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு நிதி உதவி அளித்தல்.
  3. வெளிநாடுகளில் நிறுவனங்களுடன், கூட்டு சேர்ந்து செய்வதற்கு நிதி உதவி அளித்தல்.
  4. வணிகர் வங்கி செயல்களான கையிருப்புக்களை எழுதி வைத்தல், பங்குகள், கடன் பத்திரங்கள் போன்றவற்றின் ஏற்றுமதி இறக்குமதி துறைகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள்.
  5. ஏற்றுமதி இறக்குமதித் துறைகளில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு நிதி, தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக உதவிகள் வழங்குவது.

வங்கிகள் இருவகையான உதவிகளை வழங்குகிறது.

    1. நிதி உதவிகள்
    2. நிதியில்லாத உதவிகள்

சர்வதேச சந்தையில் ஈடுபட இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்படுகிறது.

இந்திய நிறுவனங்களுக்கு கடன்கள்

  1. ஏற்றுமதியாளர்களுக்கு நேரடிக்கடன் உதவிகள் நடுத்தர தவணைக் கடன் மூலம் வெளிநாட்டு சந்தையில் வாங்குவோர்க்கு கடன் வழங்க உதவி செய்யப்படுகிறது.
  2. சர்வதேச முதலீட்டு நிதியை இந்திய ஊக்குவிப்பாளர்களுக்கு கூட்டு முறையில் நிதி சமமான பங்கீடுகள், இயந்திரம் மற்றும் தளம் ஆகியவற்றை ஏற்றுமதி அல்லது பணம் செலுத்துதல் மூலம்  பெறலாம்.
  3. தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனைகள் சேவைகள்.
  4. முதலீட்டுப் பொருட்களுக்கு ஏற்றுமதி ஒப்பந்தங்களை கப்பலில் ஏற்றுவதற்கு முன்பாகவே கடன் அளிப்பதற்கு நிதி உதவி அளித்தல்.

வெளிநாட்டு அரசுகள், நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு கடனுதவி அளித்தல்.

    1. வெளிநாட்டில் வாங்குவோர், வெளிநாட்டு இறக்குமதியாளர்களுக்கு இந்திய முதலீட்டுப் பொருட்கள் மற்றும் அதன் சார்ந்த சேவைகளை வாங்க கடன்கள் நேரடியாக வழங்கப்படும்.
    2. இந்திய முதலீட்டுப் பொருட்கள் மற்றும் அதன் சார்ந்த சேவைகள் இறக்குமதி செய்ய வெளிநாட்டு அரசுகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு கடன்கள் வழங்கப்படுகிறது.
    3. இந்திய முதலீட்டுப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு தவணை நிதியை வங்கிகளுக்கு மீண்டும் வழங்கும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

இந்திய வணிக வங்கிகளுக்கு கடனுதவி

  1. ஏற்றுமதி கட்டண திரும்பக் குறைக்கும் வசதி
  2. ஏற்றுமதி கடனுக்கு மறுநிதியளிப்பு

நிதியில்லா உதவிகள் உத்திரவாதம் மூலம் இந்திய வணிக வங்கிகளின் முன்னிலையில் கூட்டோடு ஏற்றுமதியாளர்கள் / ஒப்பந்தக்காரர்கள் வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் பணிபுரிவோர் மற்றும் வங்கிகள் மூலம் செய்யப்படுகின்றன. இம்மாதிரியான உத்திரவாதங்கள் அனைத்தும் ஏலம் வைத்து எடுக்கப்பட்ட பத்திரம், முன்பணம் செலுத்திய படிவங்கள், செயல்திறனுக்கான உத்திரவாதம், பண உத்திரவாதம் மற்றும் வெளிநாட்டிற்கு நிதித் தேவைக்கு உயர்த்துவதற்கு உத்திரவாதம் ஆகியவை.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிதி (SME)
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முக்கியத்துவம் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றமை அதன் பங்களிப்பு, சமூகப் பொருளாதார குறிக்கோள்களான வேலை வாய்ப்பு உருவாக்குதல், தேசிய அளவில் அதன் பங்களிப்பு, ஏற்றுமதி, புதிய சுய தொழில் முனைவதற்கு உந்துதல் அளித்தல் மற்றும் பொருளாதாரத்திற்கு தொழிற்சாலைகள் அடித்தளம் ஏற்படுத்துதல் போன்றவை.

இந்தியாவில் திறன் மிக்க சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறைகள் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, வளர்ச்சியடையும் வர்த்தகம், வேலை வாய்ப்பு உருவாக்குதல் மற்றும் புதிய சுயதொழில் முனைவோர் ஆகியவை மூலம் செயல்படுகின்றது.

இந்திய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வர்த்தக ஆலோசனை சேவைகள், சர்வதேச போட்டிகள் மற்றும் அதிகப் போட்டிகள் நிறைந்த உலகத்தில் ஊக்குவிப்பு தேவைப்படுகின்றது.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பெயர் பெற்ற தேசிய மற்றும் சர்வதேச ஆலோசர்களின் சேவைகளுக்கான செலவுகள் பயனற்றதாகவும் அவர்களின் தேவையான நோக்கம் நிறைவேறாமலும் செல்கிறது.

இந்த அறிவு வெற்றிடத்தை அறிந்து கொண்டு, இந்திய எக்சிம் வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு அனைத்துத் தேவைகளையும் வழங்கி வருகிறது.

இதில் வர்த்தக வழிகாட்டுதல், ஏற்றுமதி ஒப்பந்தம் வெற்றியடையும் தருவாயில் வைத்திருத்தல் மற்றும் வெற்றியடையும் ஏற்றுமதி வர்த்தகத்திற்குக் கட்டணம் பெறுதல், நாடுகள் / துறைகளின் தகவல் வெளியீடுகள், முக்கியப் பகுதிகள் கொண்ட தகுதி அமைப்புக்களான தரம், பாதுகாப்பு, ஏற்றுமதி சந்தைப்படுத்துதல் மற்றும் நிதி ஆலோசனை சேவைகளான கூட்டுக் கடன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

விவசாய நிதி
தாராளமயமாக்கல் மற்றும் உலக வர்த்தக அமைப்பு பிந்தைய விவரங்கள் ஆகியவை இந்திய வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்புக்களை ஏற்படுத்தியது. எக்சிம் வங்கி விவசாய வர்த்தக குழுவை வேளாண் சார்ந்த நிறுவனங்களுக்கு நிதி உதவிகளை வழங்கியது.நிதி உதவிகள் தவனைக் கடன், ஏற்றுமதிக்கு முந்தைய / பிந்தைய கடன், வெளிநாட்டில் வாங்குவோர்க்குக் கடன், மொத்த இறக்குமதி நிதி, உத்திரவாதம் ஆகியவற்றிற்கு வழங்கப்படும். தவனை கடன்கள் பல்வேறு செயல்களான செயலக வசதிகள், விரிவாக்கம் செய்தல், நவீனமயமாக்கல், இயந்திரம் வாங்குதல், உபகரணம் / தொழில்நுட்ப இறக்குமதி, வெளிநாட்டு கூட்டு நிறுவனங்களுக்கு நிதியளித்தல் மற்றும் அதை விலைக்கு வாங்குதல் போன்றவை.

இவ்வங்கி (மற்ற பங்குதாரர்களுடன்) வேளாண் துறையில் இணைப்பு வைத்திருக்கிறது. வேளாண் துறைகளான உணவு மற்றும் பதப்படுத்துதல்  அமைச்சகம், இந்திய அரசு, நபார்டு, அபீடா, சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தக குழுமம் (எஸ்.எப்.ஏ.சி), தேசிய தோட்டக்கலை வாரியம் ஆகியவை. நிதி உதவி இல்லாமல் வங்கி விவசாய ஏற்றுமதியாளர்களுக்கு ஆலோசனை சேவைகளையும் செய்து வருகிறது.வங்கியும் அவ்வப்போது நிறைய கட்டுரைகள், ஏற்றுமதி வளம் பற்றிய பல்வேறு விவசாய சிறு துறைகள் அடங்கிய கட்டுரைகள், இரு மாதத்திற்கு ஒரு முறை வெளியீடுகளை பல்வேறு மொழிகளில் உலக அளவில் வாய்ப்புக்களை (வேளாண் வர்த்தகத்தைப் பற்றி) தெரிவிக்கிறது.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

ஆதாரம்
http://www.eximbankindia.com
www.eximbankagro.com

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015