நிதி திரட்டுதல்
மத்திய அல்லது மாநில நில மேம்பாட்டு வங்கி நிதி திரட்டுவதை முக்கிய செயற்கூறாக கொண்டிருப்பின், இது நாட்டின் சந்தையை சரியாகப் பயன்படுத்தி, தொடக்க நில மேம்பாட்டு வங்கிக்கு முன் கடனை வழங்கும். மாநில நில மேம்பாட்டு வங்கியின் நிதி ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- பங்கு முதலீடு
- கடன் பத்திரங்கள் வழங்குதல்
- நபார்டு வங்கியிடம் கடன் பெறுதல்
- அரசிடம் இருந்து மானியங்களை திரும்பப் பெறுதல்
- இதர நிதிகள்
கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் வரும் நிதியே நில மேம்பாட்டு வங்கிக்கு (எல்.டி.பி) முக்கிய ஆதார நிதியாகும். கடன் பத்திரங்கள் என்பது உடன்படிக்கை போன்றது. இதில் கடன் பெறுவதை அங்கீகரித்தும் சரியான நேரத்தில் வட்டி விகிதம் மற்றும் அசல் தொகை ஆகியவற்றை திருப்பிச் செலுத்த உறுதியளித்தும் வழங்கப்பட்டிருக்கும்.
3 வகையான கடன் பத்திரங்கள் உள்ளது.
- சாதாரண கடன் பத்திரங்கள்
- கிராமப்புற கடன் பத்திரங்கள்
- சிறப்பு மேம்பாட்டு கடன் பத்திரங்கள்
இந்தக் கடன் பத்திரங்கள் அனைத்தும் பொதுவாக, நிதி நிறுவனங்களான எல்.ஐ.சி, வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நபார்டு, மாநில அரசுகள் ஆகியவை வாங்கும். இதற்கு குறைந்தபட்ச ஆதரவு மட்டுமே பொது மக்களிடம் இருக்கும். மாநில அரசு தனிப்பட்ட விவசாயிகளுக்கு நிறைய மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களுக்கு மானியங்கள் வழங்குகின்றது. இதில் உழவு உந்து வண்டி வாங்குவதும் அடங்கும். இதன் மானியத் தொகை அனைத்தும் நில மேம்பாட்டு வங்கிக்கு வழங்கப்படும்.
வட்டி விகிதம்
நீண்ட தவணை கடன்களுக்கு வட்டி விகிதம் பொதுவாக குறைவாகவே இருக்கும். அது விவசாயிகள் செலுத்தும் அளவிற்கே இருக்கும். இது பொதுவாக 11 முதல் 12 சதவிகிதம் ஆகும்.
கடன் வாங்கும் முறை
விண்ணப்பங்களை வங்கி கிளை அலுவலகம் கடன் பெறுபவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும். பின் விவசாய நிதி அலுவலர் அல்லது ஆய்வாளர் விண்ணப்பங்களை சரிபார்த்து, அந்த விண்ணப்பத்தில் உள்ள இடத்தை சென்று பார்த்து, கடன் பெறுவதற்கான தேவையை ஆராய்ந்து, அந்தத் திட்ட வரைவின் உண்மையை சரிபார்த்து, அதன் பொருளாதார நிலை, விவசாயி திருப்பிச் செலுத்தும் தகுதி, தேவையான பாதுகாப்பு என்று அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அந்த நடைமுறைகள் முடிந்த பிறகு, கடன்கள், தகுதியான அதிகாரி சரியான அளவில் வங்கி வழங்கியுள்ள அதிகார எல்லைக்குள் அனைத்தையும் பார்த்து கடன் வழங்கப்படும்.
|