ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ்
- விவசாய மருந்தகம் மற்றும் விவசாய தொழில் நிலையம்
- கிசான் பச்சை அட்டை - ஒரியண்டல் பச்சை அட்டை
- விவசாயத்திற்குக் கொடுக்க ஒட்டு மொத்த கடன் திட்டம்
- உழவு உந்து வண்டி வாங்குவதற்கு திட்டம்
- சேமிப்புக் கிடங்கு இரசீது வைத்து முன்தொகையை விவசாயிகளுக்கு அளித்தல்
- விவசாய தேவைகளுக்காக நிலம் வாங்குதல்
- கிசான் வண்டி திட்டம் மூலம் இரண்டு அல்லது மூன்று சக்கர வாகனங்கள் வாங்க விவசாயிகளுக்கு நிதியுதவி அளித்தல்
- கமிஷன் ஏஜென்ட்களுக்கு நிதி அளிக்கும் திட்டம்
- டிரக்குகள் மற்றும் இதர போக்குவரத்து வாகனங்கள் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்
- இரண்டாம் தர / பயன்படுத்திய உழவு உந்து வண்டி வாங்குவதற்கான திட்டம்
- மரம் மற்றும் அறுப்பு மில் வியாபாரிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்
- குளிர்பதன சேமிப்புகளுக்குத் தேவையான முதலீட்டுப் பணத் தேவைகளுக்கு நிதி அளிக்கும் திட்டம்
1. விவசாய மருந்தகம் மற்றும் விவசாய தொழில் நிலையம்
தேவை
விவசாய மருந்தகம் மற்றும் விவசாய தொழில் நிலையம் ஏற்படுத்துவதற்கு நிதியளித்தல்
தகுதி
- வேளாண் பட்டதாரிகள் அல்லது அதன் சார்ந்த துறையின் பட்டதாரிகள் ஒரு குழுவிற்கு 5 நபர் இதில் ஒருவர் மேலாண்மை படித்திருக்க வேண்டும்.
- பட்டதாரிகள்/ மேலாண்மையில் அனுபவம்/ மதிவள மேம்பாடு
கடன் தொகை
திட்ட மதிப்பைப் பொருத்து அதிகபட்சமாக ரூ.10 லட்சம் தனி நபருக்கு மற்றும் ரூ.50 லட்சம் 5 பேர் கொண்ட குழுக்களுக்கு
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
2. கிசான் கடன் அட்டை - ஓரியண்டல் பச்சை அட்டை
தேவை
பயிர் உற்பத்தி தேவைகள், முதலீட்டுப் பணத் தேவைகள் மற்றும் இதர பண்ணை மற்றும் பண்ணை சாரா வேலைகள் மற்றும் இயந்திரங்கள் பழுது பார்த்தல் உற்கொள்ளும் தேவைகள் ஆகியவை.
தகுதி
விவசாயிகள்/தொழில்நுட்ப நிபுணர்கள் பண்ணை மற்றும் பண்ணை சாரா வேலைகளில் ஈடுபட்டிருப்போர்.
கடன் தொகை
தேவையைப் பொருத்து எந்த ஒரு அளவுகளும் கிடையாது
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
3. விவசாயத்திற்குக் கொடுக்க ஒட்டு மொத்த கடன் திட்டம்
தேவை
பண்ணை வேலைகள், வேளாண்மை வளர்ச்சி மற்றும் வீட்டுத் தேவைகளுக்கு விவசாயிகளுக்கு கடன் உதவி அளித்தல்
தகுதி
அனைத்து விவசாயிகளும்
கடன் தொகை
நிலத்தின் மதிப்பில் அதிகபட்சமாக 50 சதவீதம் பாதுகாப்பிற்கு வைத்தல் அல்லது ரூ 7.5 இலட்சம் இதில் எது குறைவோ அதைப் பொருத்து
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
4. உழவு உந்து வண்டி வாங்குவதற்கு திட்டம்
தகுதி
தனிநபர், கூட்டாக சேர்ந்து கடன் வாங்குவோர், HUF உரிமையாளர் கூட்டுத் தொழில் (பி) லிமிடெட், லிமிடெட் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கம், அறக்கட்டளை ஆகியோர் இத்திட்டதின் கீழ் பெற தகுதியுடையவர்கள் மற்றும் 2.5 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் குறைந்தபட்சம் இரண்டு பயிர்கள் ஒரு வருடத்திற்கு பாசனத்தின் மூலம் பெறுவது மற்றும் கடன் பெறுபவர் எந்த நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கியிருத்தல் கூடாது.
1000 மணி நேரம் சொந்தமாக மற்றும் வாடகைக்குச் சென்று வேலை செய்யும் அளவிற்கு வேலை இருப்பதாக அதன் சொத்து மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.
கடன் தொகை
உழவு உந்து மற்றும் அதன் கருவிகள் வாங்கிய பற்றுச் சீட்டில் 90 சதவீதம் மதிப்பு இதற்கு வழங்கப்படும்.
பாதுகாப்பு
உழவு உந்து மற்றும் அதன் கருவிகள் அல்லது விவசாய நிலம் அடகு வைத்தல் அல்லது மூன்றாம் தர உத்திரவாதம் வங்கி ஏற்றுக் கொள்ளும் வகையில் இருத்தல்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
5. சேமிப்புக் கிடங்கு இரசீது வைத்து முன்தொகையை விவசாயிகளுக்கு அளித்தல்
தேவை
விவசாயிகளுக்கு சேமிப்பு கிடங்கில் வைத்திருக்கும் விளைபொருள்களுக்கு ஏற்ப கடன் அளித்தல்
தகுதி
விவசாய பொருள்களை கோடோன், சேமிப்பு கிடங்கில் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும்.
கடன் தொகை
அதிகபட்சமாக ரூ. 10 இலட்சம்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
6. விவசாய தேவைகளுக்காக நிலம் வாங்குதல்
தேவை
விவசாய தேவைகளுக்கு நிலம் வாங்க நிதியளித்தல்
தகுதி
சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள் மற்றும் பயிர் உற்பத்தியை நில உரிமையாளரிடம் பகிர்ந்து கொள்ளும் விவசாயிகள் 5 ஏக்கர் வரை வைத்திருப்போர் மற்றும் அவர்கள் அந்த நிலத்தை வாங்க முற்படுபவர்களும் அடங்குவர்.
கடன் தொகை
அதிகபட்சமாக ரூ. 10 லட்சம்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
7. கிசான் வண்டி திட்டம் மூலம் இரண்டு அல்லது மூன்று சக்கர வாகனங்கள் வாங்க விவாசயிகளுக்கு நிதியுதவி அளித்தல்
தேவை
விவசாய இடுபொருட்கள் மற்றும் விலை பொருட்களை விற்பனை செய்வதற்கு எடுத்துச் செல்ல வழிவகை செய்தல்
தகுதி
விவசாயம், அதன் சார்ந்த வேலைகள், சில்லரை வர்த்தகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் , வியாபாரிகள் ஆகியோருக்கு வழங்கப்படும்.
கடன் தொகை
அதிகபட்சமாக ரூ. 1 லட்சம்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
8. கமிஷன் ஏஜெண்ட்களுக்கு நிதி அளிக்கும் திட்டம்
தேவை
விவசாயிகளுக்காக கமிஷன் ஏஜென்ட்டுகளுக்கு குறுகிய கால தவணை திட்டங்கள் மூலம் நிதியளித்தல்
தகுதி
கமிஷன் ஏஜெண்டுகள் நல்ல பெயருடனும் மற்றும் வங்கியுடன் நல்ல உறவு வைத்திருத்தலும்
கடன் தொகை
அதிகபட்சமாக 60 சதவீதம் கடன் சேவைகள், கமிஷன் ஏஜெண்ட் 75 சதவீதம் மூல நிதியை எடுத்தல்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
9. டிரக்குகள் மற்றும் இதர போக்குவரத்து வாகனங்கள் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்.
தேவை
புதிய டிரக்குகள், பிக் அப் வண்டி, ஜீப் மற்றும் இதர போக்குவரத்து வாகனம் வாங்குதல்
தகுதி
விவசாயம் அதன் சார்ந்த துறைகளில் இருக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள், டிரக்கு கடன்களுக்கு குறைந்தபட்சம் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். ஜீப்புகள், பிக் அப் வேன், மினி டிரக்குகள் விவசாயிகள் வாங்க அவர்கள் குறைந்தபட்சம் 3 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும்.
கடன் தொகை
- பற்றுச்சீட்டின் மதிப்பில் 85 சதவீதம் மதிப்பு
- 75 சதவீதம் அமைப்பின் கீழ் வழங்கப்படும்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
10. இரண்டாம் தர, பயன்படுத்திய உழவு உந்து வண்டி வாங்குவதற்கான திட்டம்
தகுதி
குறைந்த பட்சம் 4 ஏக்கர் விவசாய பாசன நிலம் வைத்திருப்போர் மற்றும் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்காதவர்.
குறைபட்சம் 1000 மணி நேரம் வேலை நேரங்கள் சொந்த நிலம் அல்லது வாடகைக்கு ஒரு வருடத்திற்கு இருக்கும்படி அதன் சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.
உந்து வண்டியின் வயது
6 வருடத்திற்கு மேல் இருக்கக் கூடாது
கடன் தொகை
ரூ. 75,000
பாதுகாப்பு
விவசாய நிலம் அடகு வைத்தல் அல்லது உழவு வண்டியை வைத்தல் அல்லது மூன்றாம் தர உத்திரவாதம் வங்கி ஏற்றுக் கொள்ளும் நபராக இருப்பின் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
11. மரம் மற்றும் அறுப்பு மில் வியாபாரிகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம்
தகுதி
சிறு தொழில் முனைவோர் அதன் கீழ் வந்தால் மற்றும் அவர்கள் மரங்களை இறக்குமதி செய்யாமல் இருப்பின் அவர்கள் இத்திட்டத்தின் (கடன்/தவணை கடன்) மூலம் தினசரி வியாபார வேலைகள் செய்து கொள்ள வழங்கப்படுகிறது.
தொகை
ரூ.25 லட்சம் இதில், தவணை கடன் 25 சதவீதம் அதிகமாக இருத்தல் வேண்டும்.
அளவு
20 சதவீதம்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
12. குளிர்பதன சேமிப்புகளுக்குத் தேவையான முதலீட்டுப் பணத் தேவைகளுக்கு நிதி அளிக்கும் திட்டம்
தகுதி
- முதலீட்டு நிதி தவணை கடன் எங்கள் வங்கியில் பெற்றிருந்தாலோ அல்லது வேறு எந்த நிதி நிறுவனத்திலும் கடன் வசதி பெறாமல் இருப்பின் அவர்களுக்கு வழங்கப்படும்.
- இந்த தவணை கடன் கணக்கு உள்ளவர்கள் நிலையாய் இருத்தல் வேண்டும்.
- நிறைய வங்கி ஏற்பாடுகள் உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் பெற அனுமதி இல்லை.
கடன் தொகை
- சேமிப்பு இடத்தின் கொள்ளளவில் 70 சதவீதம் அல்லது கடந்த மூன்று வருட சேமிப்பு மற்றும் சந்தை மதிப்பு அல்லது குறைந்த பட்ச ஆதரவு விலை.
- கடன் வழங்கும் அளவு ஒரு விவசாயிக்கு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் இருத்தல் கூடாது அல்லது அந்த சேமிப்பு விளைபொருளில் 70 சதவீதம் மதிப்பு
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
ஆதாரம் : https://www.obcindia.co.in
|