பஞ்சாப் சிந்த் வங்கி
-
பஞ்சாப் சிந்த் வங்கி சிமிதாரா கடன் அட்டை (கிசான் கடன் அட்டை) திட்டம்
-
பஞ்சாப் சிந்த் வங்கி கொள்கையின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியளிக்கும் திட்டம்
-
பஞ்சாப் சிந்த் வங்கி உழவு உந்து நிதி மற்றும் உழவு உந்து நல திட்டம்
-
பஞ்சாப் சிந்த் வங்கி பழைய உழவு உந்து வண்டி வாங்க நிதியளித்தல்
-
பஞ்சாப் சிந்த் வங்கி சொட்டு நீர் பாசன திட்டம்
-
பஞ்சாப் சிந்த் வங்கி விவசாய நிலம் வாங்குவதற்கு நிதியளித்தல்
-
பஞ்சாப் சிந்த் வங்கி இரு சக்கர வாகனம் வாங்க விவசாயிகளுக்கு நிதியளித்தல்
-
பஞ்சாப் சிந்த் வங்கி கமிஷன் ஏஜென்ட்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்
-
பஞ்சாப் சிந்த் வங்கி அறுவடை இயந்திரம் வாங்க நிதியளிக்கும் திட்டம்
-
பஞ்சாப் சிந்த் வங்கி சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்
-
பஞ்சாப் சிந்த் வங்கி கேத்தி உத்யோக் கசானா – யோஜனா (KVKY)
-
பஞ்சாப் சிந்த் வங்கி விவசாய வேலைகளுக்கு ஊனமுற்றோருக்கான கடன் உதவி திட்டம்
-
பஞ்சாப் சிந்த் வங்கி மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கும் திட்டம்
-
பஞ்சாப் சிந்த் வங்கி சுற்றுச்சுழல் பொறிப்பகம் விதை உற்பத்தி மற்றும் விரிவாக்கச் சேவைகள்.
-
பஞ்சாப் சிந்த் வங்கி மண், நீர் தரம் மற்றும் இடுபொருள் சோதனை ஆய்வுக்கூடம் மற்றும் சேவை நிலையம்
-
பஞ்சாப் சிந்த் வங்கி பயிர் பாதுகாப்பு சேவை நிலையத் திட்டம்
-
பஞ்சாப் சிந்த் வங்கி தோட்டக்கலை மருந்தகம் மற்றும் தொழில் நிலையம்
-
பஞ்சாப் சிந்த் வங்கி விவசாய சேவை நிலையம் - பண்ணை இயந்திரம் மற்றும் முதல் நிலை செயலகம்
-
பஞ்சாப் சிந்த் வங்கி விவசாய சேவை நிலையம் - பண்ணை இயந்திரம்
-
பஞ்சாப் சிந்த வங்கி தனியார் கால்நடை மருந்தகம் மற்றும் சிறிய பால் பண்ணைச் செயலகம்
-
பஞ்சாப் சிந்த் வங்கி தனியார் செயற்கை கருவூட்டல் நிலையம்
-
பஞ்சாப் தீவனம் மற்றும் மருந்துகளுக்கு தனியார் கால்நடை மற்றும் சில்லரை கிளைகள்
-
பஞ்சாப் சிந்த் வங்கி வைரம் கிரிஷி அட்டை
1. பஞ்சாப் சிந்த் வங்கி சிமிதாரா கடன் அட்டை (கிசான் கடன் அட்டை) திட்டம்
நோக்கம்
உரம், விதை, பூச்சிக் கொல்லி ஆகியவை வாங்குவதற்கு விவசாயிகளுக்கு கடன் அளித்தல்
தகுதி
பயிர் செய்யும் விவசாயி மற்றும் சொந்த விவசாய நிலம் வைத்திருப்போர்
அளவு
எதுவும் கிடையாது
திருப்பிச் செலுத்துதல்
அதிகபட்சமாக 3 வருடங்கள் மற்றும் கடன் நிலுவையில் உள்ளவற்றை வருடத்திற்கு ஒரு முறை கணக்கில் வரவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
2. பஞ்சாப் சிந்த் வங்கி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியளிக்கும் திட்டம்
இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மொத்த பொருளாதார சதவிகிதத்தில் ஒரு நல்ல பங்களிப்பை அளித்துள்ளது. அதோடு வேலைவாய்ப்பு, மண்டல வாரியான வேறுபாடுகள், ஏற்றுமதி வருவாய் போன்றவற்றிலும் உறுதுணையாக இருந்துள்ளது. இந்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி இத்துறையை மேம்படுத்த நிறைய திட்டங்கள் மற்றும் கொள்கைகளும் வழங்கி மற்றும் இதற்கு திட்ட வழிமுறைகளும் வழங்கி உள்ளது.
மத்திய நிதி மந்திரி பாராளுமன்றத்தில் ஆகஸ்ட் 10, 2005 அன்று சிறு மற்றும் மிதமான நிறுவனங்களுக்கு சில சலுகைகளை பொதுத்துறை வங்கிகள் மூலம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதை மேற்கோள் காட்டி வங்கி இத்துறைக்கு கடன் வசதிகளை அளிக்க சில வழிவகைகளை அளித்துள்ளது.
தகுதி
சிறு அளவிலான தொழில் நிறுவனங்கள் என்பது இயந்திரங்கள் முதலீடுகளுக்கு ரூ.1 கோடிக்கு மேல் செல்லக் கூடாது. அதாவது ஒரு சில துறைகளான கை இயந்திரங்கள், மருந்து மற்றும் அதன் உற்பத்தி, அங்காடி பொருள்கள், விளையாட்டுப் பொருட்கள் இவைகளுக்கு ரூ.5 கோடிகள் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. இயந்திரங்கள் வாங்குவதற்கு ரூ.10 கோடிகள் வரை முதலீடு செய்யும் நிறுவனங்களை நடுத்தர நிறுவனங்கள் என்று எடுத்துக் கொள்வர். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு இதன் விளக்கம் தரப்பட்டுள்ளது. சிறு துறை நிறுவனங்களுக்கு மட்டுமே முதன்மையாக நிதியை வழங்கப்படுகிறது.
கடன் வளர்ச்சி இலக்கு மற்றும் நிதிகள் வழங்கும் வழிகள்
- இலக்குகளை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு குறி வைத்தல்
- இதன் கிளைகளின் பொறுப்புகளை திருப்பி மாற்றி அமைத்தல்
- கூட்டுக்குழு அணுகுமுறை
- இத்துறைக்கு நிதியளிக்க மற்ற வாய்ப்புகள்
அபாய / இடர் அளவு மற்றும் அதன் வீச்சு
இதன் இடர் அளவு தற்போதைய நிலையில் 100 சதவிகிதம் மொத்த முன்பண தொகையில் 10 சதவீதம் மற்றும் எஸ்.எல்.ஆர் இல்லாத துறையை இத்துறைக்கு வங்கி பராமரித்து வரும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
3. பஞ்சாப் சிந்த் வங்கி உழவு உந்து நிதி மற்றும் உழவு உந்து நல திட்டம்
பண்ணை இயந்திரமயமாக்கல் துறையில் பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி உழவு உந்து வாங்குவதற்கு தாராள நிதிக் கொள்கையை கடைபிடித்து வருகிறது.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்
தகுதி
விவசாயி குறைந்த பட்சம் 8 ஏக்கர் பாசன நிலம் மற்றும் 1000 மணி நேரங்கள் உழவு உந்து வண்டி ஒரு வருடத்திற்கு உபயோகப்படுத்தும் படி இருத்தல் வேண்டும்.
அளவு
15 முதல் 25 சதவீதம்
திருப்பிச் செலுத்துதல்
9 வருடங்களில் அரையாண்டிற்கு ஒரு முறை தவணை முறையில் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
4. பஞ்சாப் சிந்த் வங்கி பழைய உழவு உந்து வண்டி வாங்க நிதியளித்தல்
இரண்டாம் தர உழவு உந்து வண்டி வாங்க தாராள கொள்கைகளை கடைபிடித்து வருகிறது.
தகுதி
விவசாயி 4 ஏக்கர் பாசன நிலம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 6 ஏக்கர் பாசன நிலம் வைத்திருத்தல் வேண்டும்.
அளவு
வங்கியின் மூலம் 25 சதவீதம்
திருப்பிச் செலுத்துதல்
5 வருடங்களில் அரை வருடங்களுக்கு ஒரு முறை தவணைகளாக செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
5. பஞ்சாப் சிந்த் வங்கி சொட்டு நீர் பாசன திட்டம்
நீர் மேலாண்மைக்கு சொட்டு நீர் பாசன திட்டத்தின் மூலம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த முறை பாசன திட்டம் தோட்டக்கலை மற்றும் காய்கறிப் பாசனத் திட்டங்களுக்கு மிகவும் சிறந்தது.
தகுதி
தோட்டக்கலை மற்றும் காய்கறிப் பயிர்கள் பெரிய அளவில் செய்யும் விவசாயிகள் இதற்கு தகுதியுடையவர்கள்
அளவு
15 சதவிகிதம்
திருப்பிச் செலுத்துல்
9-12 வருடங்களில் அரையாண்டுக்கு ஒரு முறை தவணை முறைகளாக திருப்பிச் செலுத்த வேண்டும். அதோடு அதன் இறுதி கால அளவு 11 மாதங்கள்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
6. பஞ்சாப் சிந்த் வங்கி விவசாய நிலம் வாங்குவதற்கு நிதியளித்தல்
மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களுக்கு தவணை கடன்களாகவும் மற்றும் சிறிய கால தவணை திட்டங்களாக உற்பத்தித் தேவைகளுக்கும் வங்கி கடனுதவி வழங்குகிறது.
தகுதி
சிறு மற்றும் குறு விவசாயிகள், அதாவது அதிகபட்சமாக 5 ஏக்கர் வறண்ட நிலம் அல்லது 2.5 ஏக்கர் பாசன நிலம் மற்றும் அந்த நிலம் வாங்குவதற்கும் சேர்ந்தது.
அளவு
குறைந்த பட்சம் 20 சதவீதம்
திருப்பிச் செலுத்துதல்
கடனை 7-10 வருடங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
7. பஞ்சாப் சிந்த் வங்கி இருசக்கர வாகனம் வாங்க விவசாயிகளுக்கு நிதியளித்தல்
விவசாயிகளுக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு நிதியளிப்பதை விவசாயத்திற்கு நேரடியாக நிதியளிப்பதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
தகுதி
கடன் பெறுவர் விவசாயியாகவும் மற்றும் விவசாய நிலம் வைத்திருத்தல் வேண்டும் மற்றும் அது அவர்களின் பெயரிலோ அல்லது குடும்ப நபர்களின் பெயரிலோ இருத்தல் வேண்டும்.
அளவு
25 சதவீதம்
திருப்பிச் செலுத்துதல்
5 வருடங்களுக்கு அதிகமாகச் செலுத்துதல் கூடாது. கடன் வாங்கியவரின் திருப்பிச் செலுத்தும் தகுதியை பயிர் விளைவித்தல் மற்றும் மற்ற ஆதாரங்கள் மூலம் வரும் வருவாய் மற்றும் அவர்களின் குடும்பத்தின் மூலம் பெறும் வருவாய்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
8. பஞ்சாப் சிந்த் வங்கி ஏஜென்ட்களுக்கு நிதியுதவி அளித்தல் திட்டம்
கமிஷன் ஏஜென்ட்கள் விவசாயிகளுக்கு நிதியளித்தால் அது ‘புத்தக வரவு’ உருவாக்கி கணக்கு புத்தகக் கணக்கில் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் கமிஷன் ஏஜெண்ட்கள் புத்தக வரவு மூலம் நிறுவனக் கடன் கோரினர். பின் வங்கிகள் முதலீட்டுப் பணம் மூலம் வழங்க ஆரம்பித்தனர். அதிலிருந்து வங்கியும் மார்ச் 1995 ஆம் ஆண்டு முதல் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை நேரங்களுக்குத் தகுந்தாற்போல் மாற்றி அமைத்துக் கொண்டு வருகிறது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதிக பட்ச கடன் எல்லை
ரூ.10 இலட்சம் ஒருவருக்கு
பாதுகாப்பு
முதல் நிலை
விவசாயிகளிடம் நிலுவையில் உள்ள கடன் தொகை, இருப்புச்சீட்டு வைத்தும் மற்றும் சார்ட்டட் கணக்காளரிடம் சான்றிதழ் 6 மாதத்திற்குள் பெற்றிருக்க வேண்டும்.
சார்ந்தவை/ இணைந்தவை
அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பில் வங்கி அனுமதிக்கும் தொகையில் இருந்து இரண்டு மடங்கு அதிகமாக இருத்தல் வேண்டும்.
அளவு
50 சதவிகிதம் வங்கிக்காக
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
9. பஞ்சாப் சிந்த் வங்கி அறுவடை இயந்திரம் வாங்க நிதியளிக்கும் திட்டம்
அறுவடை இயந்திரம் மூலம் விவசாயி பயிரை விரைவாக அறுவடை செய்வதோடு மற்றும் குறித்த நேரத்தில் பயிரை அறுவடை செய்து கொள்ளலாம். இதன் மூலம் அறுவடை செய்வதை எளிதாகவும் செய்து பணம் ஈட்டுவதை அதிகப்படுத்த முடியும். இயந்திரத்தின் மதிப்பு ரூ.5.5 இலட்சம் முதல் 9 இலட்சம் வரை வேறுபடும். இயற்கைச் சீற்றங்களில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்றி இயந்திரம் மூலம் அறுவடை செய்வதை வணிக ரீதியில் மேற்கொண்டு பயன்பெறுவார்கள்.இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் கீழேகொடுக்கப் பட்டுள்ளது.
தகுதி
விவசாயி இந்த இயந்திரம் மூலம் தேவையான வேலைகளும் மற்றும் பாதுகாப்பு வழங்க முடியும் என்று உறுதி கொள்ள வேண்டும்.
அளவு
25 சதவிகிதம்
திருப்பிச் செலுத்துதல்
ஏழு வருடங்களில் அரையாண்டுக்கு ஒரு முறை தவணை முறையில் செலுத்தவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
10. பஞ்சாப் சிந்த் வங்கி சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்
சுய உதவிக்குழுக்கள் என்பது ஒரே வகையிலான சமூக பொருளாதார அமைப்புகளிலிருந்து ஒற்றுமையாக வாழும் மக்கள் குழுவாக சேர்ந்து அதிலுள்ள குழு உறுப்பினர்கள் தங்களது சேமிப்புகளை தேவைக்கு ஏற்ப சுழல் நிதியாக மற்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் படி செய்தல். இதில் 10 முதல் 20 உறுப்பினர்கள் வரை கொண்டதாக இருத்தல் வேண்டும் மற்றும் இது ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் ஆரம்பிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இது பதிவு அல்லது பதிவு செய்யப்படாமலும் இருக்கலாம்.
தகுதி
குழுவில் தேவையானவை
- குழு இருப்பதற்கான அடையாளமாக குறைந்தது 6 மாதமாவது இருத்தல் வேண்டும்.
- சேமிப்பு கணக்கு வங்கியில் திறக்க வேண்டும்.
- கடன் மற்றும் சேமிப்புகளை வெற்றிகரமாக கையாண்டு இருத்தல் வேண்டும்.
- சமஉரிமையுடன் வேலை செய்தல், சரியான கணக்குகள் மற்றும் பதிவுகள் வைத்திருத்தல்
- ஒருவருக்கொருவர் ஆர்வத்துடன் உதவி செய்து கொள்ளுதல்.
அளவு
சேமிப்புத் தொகையின் ஒரு பகுதியை அளவாக எடுத்துக் கொள்ளப்படும்
கடன் தேவை
குழுவிற்கு ஏற்றாற்போல் கடன் வழங்குவது உபயோகமானதாகவும் உட்கொள்ளும் வகையில் இருத்தல் வேண்டும். சுய உதவிக்குக்களுக்கு முன்பணம் கொடுப்பது சமூகத்தின் ஏழைகளுக்கும் சென்றடையும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
11. பஞ்சாப் சிந்த் வங்கி கேத்தி உத்யோக் கசானா யோஜனா (KVKY)
விவசாயி உழவு உந்து வண்டி, இழுவை இயந்திரம், வேளாண் இயந்திரங்கள், சிறு பாசன இயந்திரம், பயிர் உற்பத்தி, மண் மேம்பாடு, கோழிப் பண்ணை, மீன் பண்ணை மற்றும் இதர பல வேளாண் துறை வேலைகள் அனைத்திற்கும் கடன் பெறலாம்.
தகுதி
விவசாயி குறைந்தது ஒரு ஏக்கர் பாசன நிலம் வைத்திருத்தல் வேண்டும்.
அளவு
கடன் தேவையைப் பொருத்து 10 முதல் 25 சதவிகிதம் வரை
பாசன நிலத்திற்கு ரூ.50,000 ஒரு ஏக்கர் மற்றும் வறண்ட நிலங்களுக்கு ரூ.15000. ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ. 7.5 லட்சம். இந்த கடன் தொகை 10 வருடங்களுக்கு வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
12. பஞ்சாப் சிந்த் வங்கி விவசாய வேலைகளுக்கு ஊனமுற்றோருக்கான கடன் உதவி திட்டம்
இத்திட்டத்தின் கீழ் ஊனமுற்றோருக்கு உதவிகள் வழங்கப்படுகின்றது
- வேளாண் உற்பத்தி, பாசனம், வேளாண் இயந்திரங்கள் வாங்குதல், தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு
- வேளாண் சேவைகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல்
- விவசாய பொருட்களை சந்தை படுத்துதல்
- வேளாண் தேவைகளுக்கான நிலம் வாங்குதல்
- மண்டிகளில் கமிஷன் ஏஜெண்ட்கள்
- சிறு தொழில்களான சில்லரை வர்த்தகம் மூலம் இயற்கை உர விற்பனை, பூச்சிக் கொல்லி, மேம்பட்ட விதைகள், பண்ணை இயந்திரம்
கடன் தொகை
அதிகபட்சமாக இத்திட்டத்தின் மூலம் ரூ. 5 இலட்சம் வழங்கப்படும்
தகுதி
இந்திய குடிமகன் 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் முடியாமல் இருத்தல். 18 முதல் 55 வரை வயது வரம்பு. வருட வருவாய் ரூ.10000 நகர் புறங்களில் மற்றும் ரூ.80,000 கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு. அதற்குத் தேவையான படிப்பு, தொழில்நுட்ப தகுதி, முன் அனுபவம் மற்றும் திட்டத்தை பெறுபவர் கடனாளியாக இருத்தல் கூடாது.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
13. பஞ்சாப் சிந்த் வங்கி மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கும் திட்டம்
குறிக்கோள்
விவசாய சுயதொழில் முனைவோருக்கு பயிற்சி மற்றும் தகுதியான இரகங்களை அளித்தல் மற்றும் செய்முறை விளக்கம் மூலம் செயலாக்க முறையை விவரித்தல்
திட்ட அமைப்புகள்
- கொட்டகை
- மண்புழு படுக்கை
- நிலம்
- நாற்காலிகள் மற்றும் கட்டமைப்பு
- விதை
- சேமிப்பு
- வேலி, பாதை, நீர் செல்லும் முறை
- இயந்திரம்
- போக்குவரத்து
திட்ட செலவு
- முதலீட்டுச் செலவு - ரூ. 2770000
- செலவு - ரூ. 1440000
- மொத்த திட்ட செலவு - ரூ. 4210000
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
14. பஞ்சாப் சிந்த் வங்கி சுற்றுச்சசூழல் பொறிப்பகம் விதை உற்பத்தி மற்றும் விரிவாக்க சேவைகள்
குறிக்கோள்
பொதுவாக உபயோகப்படுத்தும் 6 மீன் இனங்களான கமலா, ரோகு, மிரீகல், சில்வர் கார்ப், கிராஸ் கார்ப் ஆகியவற்றை இனவிருத்தி செய்தல். மீன் விதைகளை தரமான வகையில் உற்பத்தி செய்ய வழிவகை செய்தல்
இடம் மற்றும் அதற்காக பகுதி
மீனவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இத்திட்டத்தை அமைப்பது நல்லது.
திட்ட அமைப்புகள்
இனவிருத்தி, பொறிப்பகம், மேல் பண்ணை, பம்பு செட், ஜெனரேட்டர், பாதுகாப்பு அறை
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
15. பஞ்சாப் சிந்த் வங்கி மண், நீர் தரம் மற்றும் இடுபொருள் சோதனை ஆய்வுக்கூடம் மற்றும் சேவை நிலையம்
குறிக்கோள்
மண், நீர் மற்றும் இயற்கை உரங்கள் ஆகியவற்றை சோதனை செய்தல்
இடம் மற்றும் அதற்கான பகுதி
விவசாயிகள் அவர்களுடன் நெருங்கிய உறவு மற்றும் அடிக்கடி சென்று தோட்டத்தைப் பார்ப்பது போன்றவற்றிற்காக இந்த கூடம் தாலுகாவின் தலைமை இடத்தில் அல்லது வளர்ந்து வரும் பஞ்சாயத்து தலைமை இடங்களிலும் இருத்தல் வேண்டும். ஒரு கூடம் 10000 மாதிரிகளைக் கையாளும் திறன் கொண்டவையாக இருப்பின் அது ஒரு தாலுகாவிற்குப் போதுமானது. உப்புத்தன்மை மற்றும் காரத்தன்மை அதிகம் கொண்ட நிலங்கள், பாசன நிலம் மற்றும் பயிர் வகைகள், காய்கறிகள் ஆகியவை விளையும் நிலம் இருப்பின் அதற்குத் தேவையான நிறைய சேவைகள் இதன் மூலம் புரியலாம்.
திட்ட அமைப்புகள்
சோதனைக் கூட கருவிகள் (PH மீட்டர், E.C. மீட்டர், போட்டோ மீட்டர்) அலுவலக கருவிகள், நாற்காலிகள்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
16. பஞ்சாப் சிந்த் வங்கி பயிர் பாதுகாப்பு சேவை நிலையத் திட்டம்
குறிக்கோள்
விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு நோய், பூச்சி, நுண்புழு, களைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த குறைந்த விலையில் நிவர்த்தி செய்ய அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளையும் மற்றம் சேவைகளையும் செய்தல்.
இடம் மற்றும் அதற்கான பகுதி
சேவை நிலையத்திற்கு 30000 முதல் 40000 ¦†க்டர் வரை நிலங்கள் பலவிதமான பயிர்கள் உள்ளடக்கியிருக்கும். ஒரு நிலையம் ஒரு பஞ்சாயத்திற்கும் ஆரம்பிக்கத் தேவையான தேவைகள் இருந்தும் முதல் கட்டமாக ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒன்ற என்ற விகிதத்தில் ஆரம்பிக்கலாம். தானிய வகைகள் பயிர் செய்யும் பகுதிகளைக் காட்டிலும் பழம், காய்கறி, பயிறு வகை, எண்ணெய் வித்துக்கள், பருத்தி ஆகியவை விளையும் பகுதிகளில் அதிகப் பயன்பாடு தேவைப்படுகிறது.
திட்ட அமைப்புகள்
கைத் தெளிப்பான், இயந்திர தெளிப்பான்கள், குளிர்சாதனப் பெட்டிகள், நுண்கருவி, மின்சமமாக்கி, வர்ணமயமாக காட்சிகள் மற்றும் பொருட்கள்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
17. பஞ்சாப் சிந்த் வங்கி தோட்டக்கலை மருந்தகம் மற்றும் தொழில் நிலையம்
குறிக்கோள்
பழ சாகுபடியாளர்களுக்கு தரம் பிரித்தல் மற்றும் பெட்டியில் அடைத்து விற்பனைக்கு ஏற்றாற்போல் அடைத்தல் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் ஆகியவற்றை ஒரு குடையின் கீழ் ஏற்படுத்தித் தருதல்.
தோட்டக்கலை இடுபொருட்கள் மற்றும் தொழில்நுட்ப விரிவாக்க சேவைகள் கிடைக்கச் செய்வது பழதோட்ட சாகுபடியாளர்களுக்கு உற்பத்தித் திறன் அதிகரிக்கச் செய்வது.
இடம் மற்றும் அதற்கான பகுதி
கிராமப்புற பகுதிகளில் 200 ¦†க்டருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட இதே போரான சேவைகள் மற்றும் குறைந்த பட்சம் 15000 மரங்கள் ஒரு வருடத்திற்கு வரும்படி செய்தல்
திட்ட அமைப்புகள்
இயந்திரம் மற்றும் கால்மிதி தெளிப்பான்கள், தோட்டக்கலை உபகரணங்கள்
18. பஞ்சாப் சிந்த் வங்கி விவசாய சேவை நிலையம் பண்ணை இயந்திரம் மற்றும் முதல்நிலை செயலகம்
குறிக்கோள்
- விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப வாடகைக்குச் சென்று சேவை செய்தல்
- வேளாண் செயல்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலையை மேம்படுத்துதல்
- விவசாய பட்டதாரிகளுக்கு நிரந்தரமான வருவாய் வரும்படி செய்தல்
இடம் மற்றும் அதற்கான பகுதி
தானியங்கள், பயிறுவகைகள், நறுமண மற்றும் வாசனை பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவை பயிரிடும் பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட அளவிலான விவசாயிகள் இருப்பர். இது அந்த தாலுக்காவில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் கிராமங்களை ஒட்டியுள்ள பெரிய பஞ்சாயத்து தலைமையிடத்தில் இருக்கும்.
திட்ட அமைப்புகள்
உழவு உந்து, இழுவை இயந்திரங்கள், பவர் டில்லர், பம்புசெட், மின் கதிரடிக்கும் இயந்திரம், தெளிப்பான்கள், இயந்திரங்கள் பழுதுபார்க்கும் உபகரணம், முதல் நிலை செயலகம் மற்றும் பருப்பு மில், வேலை செய்யும் கொட்டகை.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
19. பஞ்சாப் சிந்த் வங்கி விவசாய சேவை நிலையம் - பண்ணை இயந்திரம்
குறிக்கோள்
- சிறு விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரம் மற்றும் மாடுகள் ஆகியவற்றை வாடகைக்கு கிடைக்கச் செய்ய வழிவகை செய்தல்
- வேளாண் சேவை நிலையம் மூலம் பண்ணை இயந்திரங்களை பழுதுபாாத்தல் மற்றும் நிர்வகித்தல்
இடம் மற்றும் அதற்கான பகுதி
கிராமப்புற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலான விவசாயிகள் அல்லது தாலுகா, கிராமம் அதை ஒட்டியுள்ள பெரிய பஞ்சாயத்து தலைமையிடம்.
திட்ட அமைப்புகள்
உழவு உந்து வண்டி (35 குதிரை திறன்)
- பவர் டில்லர் (13 B.P)
- பம்பு செட் மற்றும் அதன் பாகங்கள்
- மின் இயந்திரம் மூலம் அறுவடை செய்தல், கதிரடித்தல், தெளிப்பான்
- காப்பீடு, வேலைசெய்யும் கொட்டகை உபகரணம்
- திட்ட முதலீட்டுச் செலவு - ரூ.656000 செலவு - 204000 (75 சதவிகிதம் முதல் வருடம் பயன்படுத்துதல்) முதல் ரூ.253000 (100 சதவிகிதம் பயன்பாடு)
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
20. பஞ்சாப் சிந்த் வங்கி தனியார் கால்நடை மருந்தகம் மற்றும் சிறிய பால் பண்ணைச் செயலகம்
குறிக்கோள்
- கால்நடை குறித்த சந்தேகங்களுக்கு விவசாயிகளின் கதவடியில் தேவையான அனைத்து சேவைகளையும் மற்றும் எவ்வாறு நல்ல கால்நடைகளை தேர்ந்தெடுப்பது மற்றும் இறக்கும் சதவிகிதத்தை குறைப்பது குறித்து ஆலோசனை.
- இனவிருத்தி மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்காக பெரிய தொகையை உள்ளடக்குவது.
இடம் மற்றும் அதற்கான பகுதி
இந்த மருந்தகம் கால்நடை அதிகம் வைத்திருப்போர் இருக்கும் பகுதிகள், பால் கறக்கும் கொட்டகை இருக்கும் பகுதிகள், கோழிப் பண்ணை பகுதிகள் ஆகிய இடங்களில் தரமான சேவையை பணம் பெற்றுக் கொண்டு செய்யும் இடங்களில் அமைத்தல் வேண்டும். இதன் சேவை 8 முதல் 10 கிராங்களில் 5000 முதல் 6000 கால்நடைகளை உள்ளடக்கியது் கால்நடை துறை இந்த வளம் உள்ள பகுதிகளை தேர்ந்தெடுப்பதில் உதவி செய்வர்.
திட்ட அமைப்புகள்
அ. கட்டமைப்பு -கட்டிடம் (சொந்தமானது, வாடகை), குளிர்சாதனப் பெட்டி, தொலைபேசி, மோட்டார் வாகனம், நாற்காலிகள்
ஆ. உபகரணங்கள் - ஆய்வுக்கூட உபகரணம் அடங்கிய கிட், சிகிச்சை செய்யும் உபகரணம், கிரையோகேன்
இ. மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள்
ஈ. ஆய்வுக்கூட மருந்துகள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
21. பஞ்சாப் சிந்த் வங்கி தனியார் செயற்கை கருவூட்டல் நிலையம்
குறிக்கோள்
பத்து வருடங்களில் அனைத்து இனவிருத்தி பெண் கால்நடைகளையும் செயற்கை கருவூட்டல் மூலம் விவசாயியின் கதவுகளுக்கே சென்றடையச் செய்கிறது.
இடம் மற்றும் அதற்கான பகுதி:
இந்த மருந்தகம் கால்நடை அதிகம் வைத்திருப்போர் இருக்கும் பகுதிகள், பால் கறக்கும் கொட்டகை இருக்கும் பகுதிகள், கோழிப் பண்ணை பகுதிகள் ஆகிய இடங்களில் தரமான சேவையை பணம் பெற்றுக் கொண்டு செய்யும் இடங்களில் அமைத்தல் வேண்டும். இதன் சேவை 8 முதல் 10 கிராங்களில் 5000 முதல் 6000 கால்நடைகளை உள்ளடக்கியது் கால்நடை துறை இந்த வளம் உள்ள பகுதிகளை தேர்ந்தெடுப்பதில் உதவி செய்வர்.
திட்ட அமைப்புகள்
- கட்டமைப்பு - கட்டிடம்(சொந்தமானது / வாடகை), (குளிர்சாதன பெட்டி, தொலைபேசி, மோட்டார் வாகனம், நாற்காலிகள்)
- உபகரணம் - கிரையோகேன் (சிறிய மற்றும் பெரியது), செயற்கை கருவூட்டல் சாதனப்பெட்டி
- இடுபொருள் - காயடிக்கும் இயந்திரம், அறுவை சிகிச்சை உபகரணம் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள்
- இதர - வாகனங்கள்
22. பஞ்சாப் சிந்த் வங்கி தீவனம் மற்றும் மருந்துகளுக்கு தனியார் கால்நடை மருந்தக சில்லரை கிளைகள்
குறிக்கோள்:
- கால்நடை குறித்த சந்தேகங்களுக்கு விவசாயிகளின் கதவடிகள் தேவையான அனைத்து சேவைகளையும் மற்றும் எவ்வாறு நல்ல கால்நடைகளை தேர்ந்தெடுப்பது குறித்தும் இறக்கும் சதவிகிதத்தை குறைப்பது குறித்து ஆலோசனை
- இனவிருத்தி மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்காக பெரிய தொகை உள்ளடக்குவது. கால்நடை மருந்துகள் உணவுகள் வீட்டிலேயே கிடைக்கும்படி ஏற்படுத்துவது.
இடம் மற்றும் அதற்கான பகுதி:
இந்த மருந்தகம் கால்நடை அதிகம் வைத்திருப்போர் இருக்கும் பகுதிகள், பால் கறக்கும் கொட்டகை இருக்கும் பகுதிகள், கோழிப் பண்ணை பகுதிகள் ஆகிய இடங்களில் தரமான சேவையை பணம் பெற்றுக் கொண்டு செய்யும் இடங்களில் அமைத்தல் வேண்டும். இதன் சேவை 8 முதல் 10 கிராங்களில் 5000 முதல் 6000 கால்நடைகளை உள்ளடக்கியது் கால்நடை துறை இந்த வளம் உள்ள பகுதிகளை தேர்ந்தெடுப்பதில் உதவி செய்வர்.
திட்ட அமைப்புகள்
- கட்டமைப்பு – கட்டிடம் (சொந்தமானது / வாடகை), குளிர்சாதன பெட்டி, தொலைபேசி, மோட்டார் சைக்கிள், நாற்காலிகள்
- உபகரணம் - அறுவைசிகிச்சை உபகரணம், ஆய்வுக்கூட உபகரணம், கிரையோகேன், செயற்கை கருவூட்டல் கிட்
- இடுபொருள் – கோழிப் பண்ணை உணவு, மருந்து, தடுப்பூசி
- இதர - ஆய்வுக்கூட மருந்துகள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள்
மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.
23. பஞ்சாப் சிந்த் வங்கி வைரம் கிரிஷி அட்டை:
கிசான் கடன் அட்டை உடைய விவசாயிகளுக்கு அதிக கடன் மற்றும் சிறந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
தகுதி
கிசான் கடன் அட்டை உடையவர் மற்றும் கடந்த 2 வருடங்கள் திருப்தியான ஆவணங்கள் உடையவர் மற்றும் குறைந்த பட்சம் 5 ஏக்கர் பாசன வசதி கொண்ட விவசாய நிலம் உடையவர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்.
கடன் அளவு
பாசன வசதி உள்ள நிலத்திற்கு ரூ. 1,00,000 ஒரு ஏக்கருக்கு மற்றும் 50% விவசாய நிலத்தின் சந்தை மதிப்பு மற்றும் அதிகபட்சம் ரூ.10 லட்சம்.
கடன் தேவை
கடன் அளவு சிறு தவணை விவசாய வேலைகளுக்கு உபயோகப்படுத்தப்படும் மற்றும் விவசாய முதலீடு மற்றும் உட்கொள்ளும் தேவைகள். சிறுதவணை கடன் தேவைகளுக்கு வேண்டியவை
- ST-1 - ரூ.20,000 வரை ஒரு ஏக்கர் பாசன நிலத்திற்கு
- ST-2 – கூட்டுப் பண்ணையத் திட்டத்திற்கு ரூ.40,000 ஒரு ஏக்கர் பாசன நிலம், இரகத்தைப் பொருத்து / பயிரைப் பொருத்து
- ST-3 - கோடோன் இரசீது கொடுத்து பொருட்களின் மீது ரூ.20,000 ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.
ஆதாரம்: http://www.psbindia.com
|