யூனியன் வங்கி
- விவசாய முன்னேற்றத்திற்கு சிறு தவணை கடன் - பயிர் கடன்
- யூனியன் பச்சை அட்டை (கிசான் கடன் அட்டை)
- யூனியன் தங்க திட்டம்
- குளிர்ப்பதன சேமிப்பு / கிராமப்புற கோடோன் அமைத்தல்
- விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டம்
- விவசாய தேவைகளுக்கு நிலம் வாங்க விவசாயிகளுக்கு நிதியளித்தல்
- வேளாண் பட்டதாரிகள் விவசாய மருந்தகம் / விவசாய தொழில் அமைக்க நிதியளிக்கும் திட்டம்.
- விவசாயிகளுக்கு யூனியன் அடமானத் திட்டம்
- வேலையில்லா விவசாய பட்டதாரிகளுக்கு மாதிரிப் பண்ணை அமைக்க நிதியளிக்கும் திட்டம்
- 2/3/4 சக்கர வாகனங்கள் வாங்க நிதியளித்தல்
- இதர திட்டங்கள்
1. விவசாய முண்பணத்திற்கு சிறு தவணை கடன் : பயிர் கடன்
குறிக்கோள்
- ஒரு குறிப்பிட்டப் பயிர் உற்பத்திக்கு அனைத்து விவசாய பயிற்சிகளும் மேற்கொள்ள தேவையான செலவுகளுக்கு நிதியளித்தல்.
தகுதி
- விவசாயிகள் சொந்தமாக / பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலம் / வருவாயை பங்கீடு செய்வோர்.
கடன் தொகை
- கடன் அளவு பொருத்து
- கடன் அளவு குறிப்பிடப்படாமல் இருப்பின் வங்கியின் கிளை விவசாயிகளின் கடன் தேவைகளைக் கண்டறிந்து வழங்கும்
2. யூனியன் பச்சை அட்டை
தகுதி
- மரபு வழி பயிர் கடன் பெற தகுதியுள்ள விவசாயிகள் அனைவரும் தகுதியுடையவர்.
- கடன் செலுத்தாதவர் என்று எந்த கடன் நிறுவனத்திடமும் பெயர் இருத்தல் கூடாது.
- நில சொந்தக்காரர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ள விவசாயிகள் மற்றும் நிலத்தின் மீது பரம்பரை உரிமை கொண்ட விவசாயிகள்.
கடன் தொகை
கடன் அளவைப் பொருத்து
அளவு
ரூ. 25,000/- வரை
ரூ. 25,000/- மேல் - 5 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் (பயிர் நிதியளிக்கும் முறைப்படி அளித்தால் எந்த அளவு இல்லை).
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
3. யூனியன் தங்க திட்டம்
தகுதி
தங்க ஆபரணங்கள் / நகை தனியாக / கூட்டாக வைத்திருப்பின் மற்றும் அவர் அந்த வங்கியின் கணக்கு வைத்திருப்பவராக இருக்க வேண்டியது இல்லை. அவர் முறையாக வங்கிக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
தேவை
- சலுகை முறையில் விவசாய தேவைகளுக்கு தகுதியானவை.
- சலுகை இல்லாத துறைகளில், உண்மையான காரணங்களான மருத்துவத் தேவைகள் மற்றும் எதிர்பாராத தேவைகள் / செலவுகள்
- மருத்துவம், படிப்பு, திருமணம் மற்றும் இதர விழாக்களுக்கான செலவுகளுக்கு கடனளித்தல்.
கடன் தொகை
- சலுகை துறை - தேவைக்கு ஏற்ப / திட்டத்திற்கு ஏற்ப
- சலுகை இல்லாத துறை - அதிகபட்சமாக ரூ. 50,000 / வரை
- நுகர்வுக் கடன் - ரூ. 2,000 / வரை
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
4. குளிர்ப்பதனச் சேமிப்ப / கிராமப்பு கோடோன் அமைத்தல்
குறிக்கோள்
பழம், காய்கறி ஆகிய அழுகும் பொருட்களுக்கு முறையான சேமிக்கும் வழி மற்றும் அறுவடை பின் சந்தைப்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகள் ஏற்படுத்துவது.
தகுதி
அனைத்து கூட்டுறவுகள், நிறுவனங்கள், கழகங்கள், கூட்டு வியாபாரம், தனிநபர் நிறுவனம், வேளாண் பொருட்கள் வணிகக் கழகம் / வாரியம், வேளாண் தொழில் நிறுவன கழகங்கள் மற்றும் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தனிநபர்.
திட்ட மதிப்பு
திட்டத்தின் செலவு தோட்டக்கலைப் பொருட்கள் குளிர்ப்பதன சேமிப்பில் வைப்பதற்கு அதன் ¦காள்ளளவு மற்றம் ¦தாழில்நுட்பத்தைப் பொருத்தும் அதன் அசல் விலை நிர்ணயம் / இயந்திரங்களின் பற்றுச் சீட்டு விலையைப் பொருத்தும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
5. விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டம்
பவர் டில்லர், உழவு உந்து / இயந்திரங்கள்
தகுதி
- உழவு உந்து வண்டி வாங்குவதற்கு 5 ஏக்கர் பாசன வசதி கொண்ட விவசாய நிலம் மற்றும் டில்லர் வாங்குவதற்கு குறைந்தபட்சம் 3 ஏக்கர் பாசன வசதி கொண்ட நிலம் விவசாயி பெற்றிருக்க வேண்டும்.
- உழவு உந்து வண்டிக்கு குறைந்தபட்சம் 1000 மணி நேரம் மற்றும் பவர் டில்லர்களுக்கு 600 மணி நேரம் வேலை இருத்தல் வேண்டும்.
கடன்தொகை
மதிப்பீடு அளவு செலவில் 75 முதல் 90 சதவிகிதம் தொகை செலுத்த வேண்டும்.
அளவு
10 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
6. விவசாய தேவைகளுக்கு நிலம் வாங்க விவசாயிகளுக்கு நிதியளித்தல்
- விவசாய தேவைகளுக்கு நிலம் வாங்கும் விவசாயிகள்
தகுதி
- நபார்டு வங்கியின் சிறு மற்றும் குறு விவசாயிகள், விளக்கப்படி இத்திட்டத்திற்கு ஏற்ப பிரித்துள்ள அளவு.
- விவசாய நிலம் வாடகைக்கு எடுத்து செய்யும் விவசாயிகள் / பகிர்ந்து கொள்ளும் விவசாயிகள்
கடன் அளவு
- நிலப் பகுதி அளவு வாங்குவதைப் பொருத்து
- அதன் சந்தை மதிப்பு
- திருப்பிச் செலுத்தும் தகுதி
- விவசாயிக்கு பயிர் உற்பத்தி மற்றும் பிற வகையிலிருந்து வருவாய் வரும்படி இருந்தால் மட்டுமே அவரால் வங்கி கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த முடியும்.
- நிலம் வாங்கிய செலவு, மேம்பாட்டுச் செலவு மற்றும் உற்பத்திச் செலவு ஆகியவை மொத்த கடன் அளவில் சேர்த்துக் கணக்கிடப்படும்.
அளவு
ரூ. 50,000 வரை - இல்லை
ரூ. 50,000 மேல் - 10 சதவிகிதம்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
7. வேளாண் பட்டதாரிகள் விவசாய மருந்தகம் / விவசாய தொழில் அமைக்க நிதியளிக்கும் திட்டம்
- வேளாண் பட்டதாரிகள் பயிர் உற்பத்தி, விளைபொருள் சந்தைப்படுத்துதல் மற்றும் பண்ணை கால்நடைகளுக்கு மருந்தக சேவைகள்
தகுதி
- வேளாண் பட்டதாரிகள் / அதன் துணை பட்டதாரிகளான தோட்டக்கலை, கால்நடை, வனவியல், கால்நடை, கோழிப் பண்ணை, மீன் வளர்ப்பு மற்றும் இதரச் வேலைகள்.
திட்டச் செலவு மற்றும் அதன் பயன்பெறுவோர்
- தனிநபருக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சம்
- குழுவிற்கு அதிகபட்சமாக ரூ. 50 லட்சம்
அளவு
- ரூ. 25,000 வரை - இல்லை
- ரூ. 25,000 மேல் 50,000 வரை - 5 முதல் 10 சதவிகிதம்
- ரூ. 50,000 மேல் - 10 முதல் 15 சதவிகிதம் வரை
வட்டி மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை வட்டி இல்லை.
ரூ. 5 லட்சத்திற்கு மேல் - 10 சதவிகிதம் - 15 சதவிகிதம்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
8. விவசாயிகளுக்கு யூனியன் அடமானத் திட்டம்
குறிக்கோள்
- விவசாயிகளுக்கு உற்பத்தி முதலீடு, நுகர்வுத் தேவைகளை பூர்த்தி செய்தல்.
நிதி அளவு
- பயிர் சாகுபடிக்கு நிதியளிக்கும் அளவு
- மற்ற வேலைகளுக்கு தேவைக்கு ஏற்ப 5 முதல் 15 சதவிகிதம் அளவு கடன் வாங்குபவர் கொடுக்க வேண்டியது.
திட்டச் செலவு
தோட்டக்கலை பொருட்கள் சேமித்து வைப்பதற்கு தேவையான அளவு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டு திட்ட மதிப்பு / செலவு வேறுபடும் மற்றும் உண்மையான வரைவு / இயந்திரங்கள் பற்றுச் சீட்டு செலவினங்களைப் பொருத்து வரையறுக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
9. வேலையில்லா விவசாய பட்டதாரிகளுக்கு மாதிரி பண்ணை அமைக்க நிதியளிக்கும் திட்டம்
குறிக்கோள்
- வேலையில்லா விவசாய பட்டதாரிகளுக்கு வேலையளித்தல்
தேவை
- கிராமங்களில் மாதிரி பண்ணைகள் மற்றும் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி, அதன் மூலம் வருவாய் பெற்று, சுயவேலை வாய்ப்பை வேளாண் பட்டதாரிகள் வேலைக்குச் செல்வதற்கு பதில் உருவாக்கப்படுகின்றது. சுயதொழில் முனைவோரின் விருப்பப்படி தொழிலை தேர்வு ¦சய்து கொள்ளலாம்.
தகுதியான திட்டங்கள்
- ஒரு ஏக்கர் விவசாய நிலம் வாங்குதல்
- பயிர் கடன்
- பண்ணை வீடு கட்டுதல்
- சூரிய ஒளி சக்தி மற்றும் சாண எரிவாயு கலன் மூலம் வேறு வகையான ஆதார சக்திகளைப் பெறுதல்.
- நுகர்வு செயலக சேவைகளைச் செய்வது
- உழவு உந்து வண்டி மற்றும் சாதனங்கள் சொந்த உபயோகம் அல்லது வாடகைக்கு செல்ல வாங்குதல்.
- வேளாண் வணிகங்களான உரம், பூச்சிக்கொல்லி, விதை விற்பனை
- விவசாய மருந்தக செயல்களான ஆலோசனை, வேளாண் சேவைகள் மற்றும் வானிலை அறிக்கை, சந்தை படுத்துதல் ஆகியவை.
- வேளாண் செயலக இதர துறைகளான கால்நடை, கோழிப் பண்ணை, பால் பண்ணை.
தகுதி
- வேலையில்லா விவசாய பட்டதாரிகள் 22 வயதிற்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும் மற்றும் வேளாண் பட்டதாரிகள் வேலையை விட்டு வந்தவர்கள் இதற்குத் தகுதியானவர்கள்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
10. 2/3/4 சக்கர வாகனங்கள் வாங்க நிதியளித்தல்
குறிக்கோள்
விவசாயிகளுக்கு 2/3/4 சக்கர வாகனங்கள் / டிரக்குகள் / ஜீப்புகள் / பிக் அப், வேன்கள் வாங்குவதற்கு நிதியளித்தல்.
தகுதி
- விவசாயிகள் பகுதி பகுதியாக நிலம் வைத்திருப்போர் / நிலம் இரண்டு அல்லது அதற்கு மேல் உள்ள கிராமங்களில் இருப்பின் மற்றும் பண்ணை வீட்டிலிருந்து தொலைவாக இருப்பின் அவர்களுக்கு வழங்கப்படும்.
- தீவிர மற்றும் பல பயிர் சாகுபடி முறையைப் பின்பற்றும் விவசாயிகள்
- பலதரப்பட்ட செயல்களை மேற்கொள்ளும் விவசாயிகள், கலப்புப் பண்ணை முறைகளான பால் பண்ணை, கோழிப் பண்ணை, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு, தேனீ வளர்ப்பு, காய்கறி வளர்ப்பு, தோட்டக்கலை மலைப்பயிர்கள் மற்றும் இதர பருவகால பயிர்களை விளைவித்தல்.
கடன் அளவு
- வாகன மதிப்பில் 75 சதவிகிதம்
11. இதர திட்டங்கள்
- குளிர்பதன சேமிப்பு மற்றும் கோடோன்களின் விவசாய விளை பொருட்களுக்கு மொத்தமாக நிதியளித்தல்.
- சிறு பாசனம் மற்றும் சொட்டு நீர் / தெளிப்பு நீர் முறை
- நில சீரமைத்தல் மற்றும் மேம்பாடு
- யூனியன் வெள்ளை அட்டை
- இதர செயல்களான பால் பண்ணை / கோழிப் பண்ணை / வெள்ளாடு / செம்மறியாடு / பன்றி வளர்ப்பு / தேனீ வளர்ப்பு.
- பட்டுப்புழு வளர்ப்பு
- நுகர்வுக் கடன்
- வேளாண் தேவைகளுக்கு FDR/NSC மூலம் கடன் பெறுதல்
- வேளாண்மைக்கு மறைமுக முன்பணம் அளித்தல்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
விண்ணப்பங்களுக்கு அழுத்தவும்
ஆதாரம் : http://www.unionbankofindia.co.in
|