வங்கி மற்றும் கடன் :: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
பாரத ஸ்டேட் வங்கி
  • பயிர் கடன் (ACC)
  • விலைபொருள் சந்தை கடன் திட்டம்
  • சேமிப்பு கிடங்கு இரசீது / குளிர்பதன சேமிப்பு இரசீது மீது கடன் பெறுதல்
  • கிசான் கடன் அட்டை திட்டம் (KCC)
  • விவசாய தவணை கடன் (ATL)
  • நில மேம்பாட்டுத் திட்டம்
  • சிறு பாசன திட்டம்
  • பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டம்
  • கூட்டு அறுவடை இயந்திரத்திற்கு நிதியளிக்கும் திட்டம்
  • கிசான் தங்க அட்டை திட்டம்
  • நிலம் வாங்குவதற்கான திட்டம்
  • கிரிஷி ப்ளஸ் திட்டம்
  • ஆர்தியாஸ் ப்ளஸ் திட்டம்
  • பால் பண்ணை ப்ளஸ் திட்டம்
  • கறிக்கோழி ப்ளஸ் திட்டம்
  • தோட்டக்கலைக்கு நிதியளித்தல்

1. பயிர் கடன் (ACC)

தேவை
பல்வேறு பயிர்களுக்கு உற்பத்திச் செலவு

தகுதி
விவசாயிகள், நிலத்தை வாடகைக்கு எடுத்து பயிர் செய்யும் விவசாயிகள், பயிர் உற்பத்தியை நில உரிமையாளரிடம் பகிர்ந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பு விவசாயிகளும் சிறு மற்றும் குறு விவசாயிகள்.

கடன் தொகை
பயிர் உற்பத்திச் செலவு ஒரு ஏக்கருக்கு ஆகும் செலவு மற்றும் உற்பத்தி செலவில் 9% (நிதியின் அளவு) 

தேவையான ஆவணங்கள்

  • பயிர் செய்வதற்கான நில ஆதாரங்கள்
  • பலவித பயிர்களின் அளவு
  • கடன் வாங்கும் ஆதாரம் (எ.க.) கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள்

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

2. விலைபொருள் சந்தை கடன் திட்டம்

தேவை:
விலை பொருட்களை விவசாயிகள் தங்கள் கட்டுப்பாட்டில் சேமித்து வைத்து குறைவான விலையில் இருந்து பாதுகாத்தல்.

தகுதி:
பயிர் கடன் பெறும் அனைத்து வகை விவசாயிகளும் 

கடன் தொகை
சேமித்து வைத்த பொருளின் விலை மதிப்பில் 6% (குறைந்த பட்ச ஆதரவு விலை)

தேவையான ஆவணம்
இருப்பு விவர அறிக்கை மதிப்பீடு செய்வதற்காக கோடோன் அல்லது இருப்பிடத்தில் இருக்கும் சேமிப்பு விவரத்தை வங்கி அதிகாரி தனியாக சரிபார்த்த ஆதாரம்.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

3சேமிப்புகிடங்கு இரசீது / குளிர்பதன சேமிப்பு இரசீது மீது கடன் பெறுதல்

தேவை
விவசாயிகள் பொருட்களை தனியார் / அரசு சேமிப்பு கோடோன்கள் / குளிர்பதன சேமிப்புகள் மீது வைத்த இரசீது வைத்து கடன் பெறுதல் அதிகபட்சமாக 6 மாதத்தில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். 

தகுதி
பயிர் கடன் பெறும் அனைத்து தரப்பு விவசாயிகளும் 

கடன் அளவு
சேமித்து வைத்த பொருளின் விலை மதிப்பில் 6% (குறைந்த பட்ச ஆதரவு விலை)

தேவையான ஆவணம்
அங்கீகரிக்கப்பட்ட சேமிப்பு கிடங்கின் காப்பாளர் கொடுக்கும் இரசீதில் கையொப்பம் இட்டு அதில் வங்கிக்காக வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

4. கிசான் கடன் அட்டை திட்டம் (KCC)

தேவை
விவசாயிகளுக்கான சிறு தவணை கடன் தேவை

தகுதி

  • சரியாக திருப்பிச் செலுத்தும் பதிவுகள் இருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
  • விவசாயிகள் திருப்பிச் செலுத்துவதை தவிர்த்து இருந்தாலும் வெளியில் இருக்கும் கடன்களை கட்டியிருத்தல் அவர்களும் இதற்கு தகுதியானவர்கள்

கடன் அளவு
கடன் அளவு விவசாயிக்கு ஒரு வருடத்திற்குத் தேவையான பயிர்முறை அவசரத் தேவைகள் ஆகியவற்றைப் பொருத்து நிர்ணயிக்கப்படும். பயிர் உற்பத்திச் செலவில் 9% (நிதி அளவு) கடனாக ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும். ரூ.50,000 வரை கடனாக செலவில் 10% மற்றும் ரூ.1,00,000 மேல் கடனாக செலவில் 85% வழங்கப்படுகிறது. 

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

5. விவசாய தவணை கடன் (ATL)

தேவை
சொத்துக்கள் வாங்குவதற்கு (பண்ணை இயந்திரங்கள், எருதுகள், செம்மறியாடு சொத்துக்கள் உருவாக்குவதற்கு (பழப் பண்ணை, கோழிப் பண்ணை, பால் வள மேம்பாடு) அனைத்து கிராமப்புற வேலைகளில் விவசாயம், தோட்டக்கலை, மலைப்பயிர்கள், பட்டுப்புழு, கால்நடை, மீன் வளம் இவைகளில் கடன் 3 வருடங்களுக்கு மேல் திருப்பிச் செலுத்தினால் போதும். 

தகுதி
அனைத்து தரப்பு விவசாயிகள் மற்றும் விவசாய வேலைசெய்வோர்

கடன் தொகை
ரூ.50,000 வரை - சொத்து மதிப்பில் / திட்ட மதிப்பில் 10% கடனாக வழங்கப்படும் 
ரூ.50,000 மேல் - சொத்து மதிப்பில் / திட்ட மதிப்பில் 85% கடனாக வழங்கப்படும்

தேவையான ஆவணங்கள்
எருதுகள் வாங்குவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை. அதிக தொகை கடன்களுக்கு திட்ட மதிப்பு அறிக்கை பெறப்படும். நிலம் போன்ற வேலைகளுக்கு நில ஆவணங்களைக் கொடுக்க வேண்டும். ரூ.25,000 மேல் கடன் பெறுவோர் வங்கி கிளையில் செயலக பகுதிகளில் உள்ள வேறு வங்கிகளில் கடன் இல்லா சான்றிதழ் வழங்க வேண்டும். 

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

6. நில மேம்பாட்டுத் திட்டம்

தேவை
பயிர் செய்வேர்க்கு அதிக உற்பத்தி திறன் பெற நேரடியாக நிதியளித்தல். நிலம் சரிசெய்தல் (மரம், அடர்ந்த முட்கள் ஆகியவற்றை எடுத்தல்), நிலம் சமமாக்குதல், எல்லைக் கோடு, மலைப் பகுதியில் சமதளப்படி மட்டம், சமதள வரப்பு, சமதள கற்சுவர், ஆங்காங்கே சமதளக் கால்வாய், வடிகால் அமைப்பது, களர் மண் வேலி அமைப்பது ஆகியவற்றிற்கு நிதி அளித்தல். 

தகுதி
விவசாய நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும்

கடன் தொகை

  • ரூ.50,000 வரை - சொத்து மதிப்பில் / திட்ட மதிப்பில் 10% கடனாக வழங்கப்படும்
  • ரூ.50,000 மேல் - சொத்து மதிப்பில் / திட்ட மதிப்பில் 85% கடனாக வழங்கப்படும்

தேவையான ஆவணங்கள்
கட்டிட பொறியாளர் கொடுக்கும் திட்ட மதிப்பு
மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

7. சிறு பாசன திட்டம்

தேவை
நிலத்திற்கு கீழ் / நிலத்திற்கு மேல் உள்ள நீர் ஆதாரங்களுக்கு பாசன வசதிகள், அனைத்து கட்டமைப்பு, உபகரணம், புதிய கிணறு தோண்டுதல், இருக்கும் கிணற்றை ஆழப்படுத்துதல், கிணறுகளுக்கு மின் பம்பு செட் / எண்ணெய் விசைப்பொறி வைத்தல் குழாய்கள் அமைப்பது, சொட்டுநீர் பாசன வசதிகள் அமைத்தல், இரைநீர் பாசன முறைகள் அமைத்தல். 

தகுதி
நீர் ஆதாரம் கொண்ட அனைத்து விவசாயிகளும்.

கடன் தொகை
ரூ.50,000 வரை - சொத்து மதிப்பில் / திட்ட மதிப்பில் 10% கடனாக வழங்கப்படும் 
ரூ.50,000 மேல் - சொத்து மதிப்பில் / திட்ட மதிப்பில் 85% கடனாக வழங்கப்படும்

தேவையான ஆவணங்கள்
கட்டிட வேலைகளுக்குத் தேவையான மதிப்பீடு மற்றும் சொத்துக்களின் மதிப்பீடு சமர்ப்பிக்க வேண்டும். நில ஆவணங்கள், சொத்தின் தலைப்பு, புவியியலரின் சான்றிதழ் மற்றும் திட்டம் ஆகுமை பெறும் சான்றிதழ் மின்சார வாரியத்திடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

8. பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டம்

தேவை
பண்ணை இயந்திரம் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு கடன் வசதி தருதல், உழவு உந்து மற்றும் அதன் சார்ந்தவைகள் வாங்குவது, டிரெய்லர்கள், பவர் டில்லர், அறுவடை இயந்திரம், மின் தெளிப்பான், கதிர் அடிக்கும் இயந்திரம்.

தகுதி:

  • குறைந்த பட்சம் பாசன வசதி கொண்ட நிலம் வைத்திருக்கும் விவசாயிகள்
  • மற்ற பண்ணை இயந்திரங்கள் விவசாயம் மூலம் பெறும் வருவாய் கொண்டு வாங்கப்படும்

கடன் தொகை
ரூ.50,000 வரை - சொத்து மதிப்பில் / திட்ட மதிப்பில் 10% கடனாக வழங்கப்படும் 
ரூ.50,000 மேல் - சொத்து மதிப்பில் / திட்ட மதிப்பில் 85% கடனாக வழங்கப்படும்

தேவையான ஆவணங்கள்
தேவையான பொருட்களுக்கு மதிப்பீடுகள் பெறப்படும். நில ஆவணங்கள் கொண்டு அதில் விவசாயம் செய்வதற்கான உரிமை உள்ளதா என்று பார்க்க வேண்டும். 

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

9. கூட்டு அறுவடை இயந்திரத்திற்கு நிதியளிக்கும் திட்டம்
தேவை
கூட்டு அறுவடை இயந்திரம் வாங்குதல்

தகுதி

  1. குறைந்த பட்சம் 8 ஏக்கர் பாசன நிலம் கொண்ட விவசாயிகள்
  2. விவசாயி அல்லாத சுயதொழில் முனைவோர் கூட்டு அறுவடை இயந்திரம் மூலம் வாடகைக்குச் செல்லுதல்
  3. குறைந்தது 1000 மணி நேரம் வேலை இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்

கடன் தொகை
கூட்டு அறுவடை இயந்திரம் மற்றும் அதன் உபகரணம் சேர்த்து 75% வரை வழங்கப்படும்

தேவையான ஆவணம்
அதற்கான மதிப்பீடு பெறப்படும். நில ஆவணம் மூலம் விவசாயம் செய்ய உரிமை உள்ளவரா என்று பார்க்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

10. கிசான் தங்க அட்டை திட்டம்
தேவை
விவசாயிகளுக்கு இலவச தவணை கடன்

தகுதி 
குறைந்தபட்சம் 2 வருடங்களுக்குள் சரியாக திருப்பிச் செலுத்துதல். புதிய விவசாயிகள் 3 முதல் 4 வருடங்கள் எங்கள் கிளையில் வைப்புத் தொகை இருந்திருக்க வேண்டும். ஆண்டு பண்ணை வருவாயில் 5 மடங்கு அளவு கடன் வழங்கப்படும் அல்லது நில மதிப்பில் 50% அளவு அடமான பாதுகாப்பாகவும் வைக்க வேண்டும் மற்றும் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

தேவையான ஆவணம்
நில ஆவணம் மற்றும் நில உரிமை / சுமைகள் - தேவைப்பட்டால் 

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

11. நிலம் வாங்குவதற்கான திட்டம்

தேவை:
சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற வேலையாட்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு கடனுதவி அளித்தல்.

தகுதி
சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள், பயிர் உற்பத்தியை நில உரிமையாளரிடம் பகிர்ந்து கொள்ளும் விவசாயிகள் குறைந்தபட்சம் 5 ஏக்கருக்கு குறைவான வறண்ட நிலம் / 2.5 ஏக்கர் பாசன நிலம் மற்றும் நிலமற்ற விவசாய வேலையாட்கள் கடனை சரியாக திருப்பி செலுத்துவதற்கான ஆதாரம், நிலம் வாங்கிய பிறகு பாசனமற்ற நிலம் 5 ஏக்கருக்கு மேலும் / பாசன நிலம் 2.5 ஏக்கருக்கு மேலும் செல்ல கூடாது. 

கடன் தொகை
இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச கடன் தொகை ரூ.5 லட்சம் நில மேம்பாடு, பாசன வசதிகள் மற்றும் பயிர் செய்தல் ஆகியவற்றிற்கு வழங்கப்படும். விவசாயி அவர் சொந்த ஆதார நிதியில் இருந்து மொத்த செலவில் 15% கொடுக்க வேண்டும். 

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

12. கிரிஷி ப்ளஸ் திட்டம்

தேவை
கிராமப்புற இளைஞர் 45 வயதிற்கு கீழ் மற்றும் உழவு உந்து வண்டி வாங்க நிதியளித்தல்.

தகுதி

  1. கிராமப்புற இளைஞர் 45 வயதிற்கு கீழ் மற்றும் உழவு உந்து வண்டி நிர்வகித்தல் / பழுதுபார்த்தல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பம் சிறு மற்றும் குறு விவசாய பிரிவில் இருக்க வேண்டும்
  3. உழவு உந்து வண்டி ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அது தானே ஓட்டுநராகவும் இருத்தல் வேண்டும்

கடன் தொகை

  • உழவு உந்து வண்டியின் மதிப்பீடு மற்றும் அதன் உபகரணங்கள் மற்றும் டிரெய்லர்கள் அனைத்தும் வாங்குபவரின் விருப்பத்தை பொருத்து.
  • உழவு உந்து நிதியளிக்கும் வண்டி அந்த வங்கி கிளையின் கீழ் அங்கீகரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். மொத்த சொத்தில் 85% கடன் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும்.

தேவையான ஆவணம்
குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் மற்றும் ஆவணம் விண்ணப்பதாரர் பெயரிலோ / குடும்பத்தார் பெயரிலோ இருத்தல் வேண்டும். தகுதியான ஓட்டுநர் உரிமம் ¦பற்றிருத்தல் §வண்டும்.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

13. ஆர்தியாஸ் ப்ளஸ் திட்டம்

தேவை
விவசாயிகளிடம் இருந்து பெறும் (கமிஷன் ஏஜெண்ட்களுக்கு) இடைத்தரகர்களுக்கு நிதியளித்தல்

தகுதி
கமிஷன் ஏஜெண்ட்களுக்கு தகுதியான உரிமம் சந்தைப் பகுதி / வாரியத்திடம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் கடந்த 3 வருடங்களாக தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்து பெறும் கமிஷன் ஏஜெண்ட்களுக்கு மட்டும்.

கடன் தொகை
அதிகபட்சம் பணமாக ரூ.25 லட்சம்

தேவையான ஆவணங்கள்
கடன் புத்தக வரைவு (6 மாதத்திற்கு அதிகமாக இருத்தல் கூடாது), நில ஆவணம், கமிஷன் ஏஜெண்ட் உரிமம், தனிக்கை செய்யப்பட்ட பலங்கைச் சுவடு, ஆகியவை வழங்க வேண்டும். 

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

14. பால் பண்ணை ப்ளஸ் திட்டம்
தேவை

  • பால் கால்நடை வாங்குதல்
  • கறவை இயந்திரம்
  • கொட்டகை அமைத்தல்
  • தீவணம் வெட்டும் இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள்

தகுதி

  • பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்
  • சிறிய பால் பண்ணை நிர்வாகிகள் குறைந்தது 1 பால் மாடு மற்றும் குறைந்தது 0.25 ஏக்கர் நிலம் ஒவ்வொரு  கால் நடைகளுக்கும் வைத்திருத்தல் வேண்டும்.

கடன் தொகை

  • ரூ.2 லட்சம் வரை கடன் வாங்குவோர்
  • ரூ.50,000 வரை 10% நிதி வழங்கப்படும்
  • ரூ.50,000 மேல் 85% நிதி வழங்கப்படும்

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

15. கறிக்கோழி ப்ளஸ் திட்டம்

தேவை
விவசாயிகள் கறிக்கோழிப் பண்ணை அமைத்தல் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்கள் வாங்குதல்

தகுதி
ஒப்பந்த பண்ணையம் மூலம் பெரிய நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கறிக்கோழி பண்ணை வளர்க்கும் விவசாயிகள்.

கடன் தொகை

  • ரூ.3 லட்சம் வரை 500 பறவைகள் திட்டமிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.15 லட்சம்
  • ரூ.50,000 வரை 10% நிதி வழங்கப்படும்
  • ரூ.50,000 மேல் 85% நிதி வழங்கப்படும்

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

17.தோட்டக்கலைக்கு நிதியளித்தல்

தேவை
பழ தோட்டங்களான மா, சப்போட்டா, கொய்யா, திராட்சை, மாதுளை, ஆப்பிள், லிட்சி மற்றும் சிறு கால பழங்களான வாழை, பைனாப்பிள், மலர்கள் சாகுபடி - திறந்தவெளி மற்றும் பசுமை குடில் வளர்க்கும் பூக்களான ரோஜா, கார்§னசன், செவ்வந்தி, மல்லிகை, காய்கறிப் பயிர்களான தக்காளி, கத்தரி, பட்டானி, உருளைக்கிழங்கு, கொடி வகைள் காய்கறிகள் ஆகியவற்றிற்கு நிதியளித்தல்

தகுதி
நிலமுள்ள அனைத்து விவசாயிகளும்

கடன் தொகை
ரூ.50,000 வரை - திட்டம் / சொத்து மதிப்பில் 10% கடனாக வழங்கப்படும் 
ரூ.50,000 வரை - திட்டம் / சொத்து மதிப்பில் 85% கடனாக வழங்கப்படும்
குறைந்த கால தவணை கடன்கள் பயிர் கடன் / கிசான் கடன் அட்டை திட்டம் மூலம் வழங்கப்படும். கிசான் கடன் அட்டை திட்டம் மூலம் கொடுக்கப்படும் நிபந்தணைகள் இந்த கடன்களுக்கும் பொருந்தும்.

மேலும் விபரங்களுக்கு அழுத்தவும்.

ஆதாரம்:
http://www.sbi.co.in

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015