|
|
|
வங்கி மற்றும்
கடன் ::தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் |
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
இந்தியாவில் வங்கி முறைகளில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. வங்கிகள் தேசியமயமாக்கல் திட்டம் 1969 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அம்மையார் அவர்களால் கொண்டு வரப்பட்டது. இதன் நோக்கம் கிராமப்புறங்களில் வங்கிகள் மற்றும் அதன் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி விவசாயிகளுக்கு வங்கிக் கடன்கள் எளிதாக பெறச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. 1969 ஆம் ஆண்டு மொத்தம் பதினான்கு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இதற்கு முன் பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே பொதுத் துறை வங்கி. பாரத ஸ்டேட் வங்கி 1955 ஆம் ஆண்டு எஸ்.பி.ஐ (SBI) 1955 விதியின் கீழ் தேசியமயமாக்கப்பட்டது.
இரண்டாம் கட்ட வங்கிகள் தேசியமயமாக்கல் 1980 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் மேலும் ஏழு வங்கிகள் இணைக்கப்பட்டு 200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டது.
|
|
|
|
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015 |