வங்கி மற்றும் கடன் ::தேசிய பால் பண்ணை மேம்பாட்டு அமைப்பு
தேசிய பால் பண்ணை மேம்பாட்டு அமைப்பு (NDDB)

தேசிய பால் பண்ணை மேம்பாட்டு அமைப்பு ஊக்குவிப்பு, நிதி, ஆதரவு ஆகியவை சொந்தமாக உற்பத்தி மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றிற்காக தொடங்கப்பட்டது. என்டிடிபியின் திட்டங்கள் மற்றும் செயல்கள் விவசாயிகள் கூட்டுறவுகளை வலிமைப்படுத்தவும் தேசிய கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்கு வழிவகை செய்கிறது. என்டிடிபியின் முயற்சிகளுக்கு அடிப்படை கூட்டுறவு கொள்கைகள் மற்றும் கூட்டுறவு திட்டங்கள்.

  • தத்துவம்
  • கூட்டுறவு மேம்பாடு மற்றும் ஆட்சி
  • பொருட்கள் மற்றும செயலக தொழில்நுட்பம்
  • ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உயிரித் தொழில்நுட்பம்
  • பயிற்சி மற்றும் ஆலோசனை
  • பால் பண்ணை கூட்டுறவுகள்

தத்துவம்

  • ஒற்றுமையுடன் இருப்பது என்பது மிகவும் விரும்பப்படுவது. இது மக்களுக்கு வளங்களின் மீது ஒரு கட்டுப்பாட்டை ஜனநாயக சுய ஆட்சி முறை மூலம் வழங்குதல்.
  • மக்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்யும பொழுது, சுயசார்பு அடைவர் மற்றும் அவர்கள் நிதி பங்கு மற்றும் இருவரும் சுய ஆட்சி உரிமையை அனுபவித்தனர். அவர்களின் சுய நிறுவனங்களை நிர்வகித்து வளர்த்து அதை ஏற்றுக் கொள்வர்.
  • படிப்படியாக மேலும் சமுதாயத்தில் அடைவது என்பது அதன் வளர்ச்சிக்குத் தேவையான நன்மையை நாடுபவர்களுக்குச் சென்றடையும்.
  • குறிப்பாக பெண்கள் மற்றும் நலிவடைந்தவர்கள், கூட்டுறவு நிர்வாகம் மற்றும் முடிவு எடுக்கும் வேலைகளில் ஈடுபடுதல்வேண்டும்.
  • சந்தை இயக்கங்களை தலைமையிடத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமானால், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் புதுமையான நல்ல வழிகளை எப்பொழுதும் தேடிக் கொண்டே இருத்தல் நல்ல வழிகளை அடைய வழிவகுக்கும்.
  • நமது வழிமுறைகள் மாறுகின்ற சூழலை பிரதிபலிக்கும் பொழுது, நமது தேவை மற்றும் மதிப்பு எப்பொழுதும் நிலையாக இருத்தல்வேண்டும்.

கூட்டுறவு மேம்பாடு மற்றும் ஆட்சி

பால் வாரியம் கூட்டுறவு மேம்பாடு மற்றும் ஆட்சித் திட்டங்களை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துகிறது. இதன் குறிக்கோள் உறுப்பினர்களுக்கு சுய சார்பு அடைய உதவி செய்தல் மற்றும் தனியாக கூட்டுறவு நிறுவனங்கள் நிர்வாகம், மற்றும் பொருளாதாரம் சமுதாய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல், என்டிடிபி அதன் கிராமப்புற தொகுதிகளை மகளிர் மேம்பாடு மற்றும் தலைமை பண்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் அதன் செயல்களில் முக்கியப் பகுதியாக வைத்துள்ளது. தேவைக்கு ஏற்ற ஆலோசனை உதவிகளைச் செய்து திட்டங்களை வைத்து பால் பண்ணை கூட்டுறவுகள் வலிமைப்படுத்தி அதன் பால் கொள்முதலை அதிகரித்தல்.
தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் நிறுவன அமைப்பு (ஐபி), கூட்டுறவுகளில் பெண்களின் ஈடுபாடு அதிகரித்தல் (இடபிள்யூஐசி) கொள்முதல் முறைகளை வலிமைப்படுத்துதல் (எஸ்பிஎஸ்).

நமது நுகர்வு அமைப்புக்களில் கூட, மாநில கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், என்டிடிபியின் கூட்டுறவு மேம்பாடு மற்றும் ஆட்சி சேவைகள் அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது மற்றும் மேம்பாட்டு முகவர்கள் பால் பண்ணைகளில் வேலை செய்வோர் மற்றும் அதன் சார்ந்த கூட்டுறவுகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் அதனுடன் சேர்ந்தது.

பால் பண்ணை கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும் பெரிய நோக்கத்துடன், என்டிடிபியின் பொறியியல் சேவைக் குழு பால் பண்ணை மற்றும் அதன் சார்ந்த திட்டங்கள் சர்வதேச தர நிர்ணயத்தை ஈடு செய்யும் அளவிற்கு செயல் திட்டம் நிறைவேற்றுதல்.

என்டிடிபியின் பொறியியல் சேவைகள் குழு தொழில்நுட்ப உதவி மற்றும் பொறியியல் இடுபொருட்களை திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசனை மூலம் அல்லது திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதன் மூலமும் செய்யலாம். இதன் நுகர்வோர் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் எண்ணெய் விதை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள், மத்திய மாநில அரசுகள் மற்றும் பால் பண்ணை களன் அமைத்தல், குளிர்விக்கும் நிலையங்கள், கால்நடை தீவனத்திட்டங்கள் மற்றும் அதன் சார்ந்த இதர தொழில்கள் ஆகியவற்றை அமைத்தல். என்டிடிபி அதன் பொறியியல் மற்றும் திட்ட நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த திட்டங்களை இதரப் பகுதிகளான பழம் மற்றும் காய்கறி திட்டம், தானியங்கி பால் கறக்கும் முறை, எப்எம்டி தடுப்பூசிக் களன், அதிக பாதுகாப்புடன் கூடிய கால்நடை நோய் ஆராய்ச்சி சோதனை நிலையம் ஆகியவை ஜீலை 2001ன் நிலவரப்படி, 500க்கும் மேற்பட்ட திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 

பொறியியல் சேவைகள் திட்டங்களுக்கு  மதிப்புக் கூட்ட அதன் நவீன தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரிய வரைபடம் ஆகியவற்றை இணைத்து நிலையான பால் கறக்கும் இயந்திரம்  உருவாக்குதல் விற்பனையாளரை மேம்படுத்துதல் மற்றும் பால்  மற்றும் அதன் சார்ந்த திட்டங்களுக்கு வாரியத்தின் தகுதியுள்ள பொறியாளர்கள் எடுத்து அதன் குறியீடுகளை உபகரணங்களுக்கு நிர்ணயித்தல் ஆகியவை தனியான பங்களிப்பு அதன் சாலை மற்றும் ரயில் டேங்கர்களுக்கு வழித்தட வடிவமைப்பு இந்தியாவின் தேசிய பால் கட்டம் (என்எம்ஜி) ஏற்படுத்துதல்.

பொருட்கள் மற்றும் பதப்படுத்தும் தொழில்நுட்பம்
பால்பண்ணை கூட்டுறவுகளின் தொழிலுக்கு மதிப்பு சேர்க்கும் வகையிலான பகுதியில், பால் பண்ணை வாரியம் தேர்வு செய்து, வளர்த்தி, சோதனை செய்துப் பொருட்களை மாறுதல் செய்து தொழில்நுட்பத்தைப் பதப்படுத்துதல்.

பொருட்கள் உருவாக்குதல் மற்றும் அதன் தயாரிப்பு செயலகங்களுக்கு மண்டல வாரியான முன் தேர்வுகள் மிகவும் முக்கியம். இதில்கூட உபகரணம் வடிவமைத்து அதை பாரம்பரிய பால் பொருட்கள் தயாரிப்புகளான ‚கண்ட், பண்ணீர், கோவா, லசி, குலாப்ஜாமூன், மிஸ்டி டோய் மற்றும் தயிர் மற்றும் மேற்கத்திய பொருட்களான ஐஸ்கிரீம்கள், பாலாடைகள் ஆகியவை வணிகப்படுத்துதல்.

பதப்படுத்தும் பொருட்கள் உபகரண தொழில்நுட்பம் உருவாக்குதல் அதிகத் தர நிர்ணயத்தை பராமரிக்க முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. பால் தரத்தை சரி பார்க்க, சோதனைக் கிட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பால் பொருட்கள் பரிசோதிக்க என்டிடிபி சேவைகளை வழங்குகிறது.

என்டிடிபி மற்றும் மேம்பாட்டு செயல்களை உயிர்த் தொழில்நுட்பத்தில் அதன் வேலைகள் மற்றும் தொழில்நுட்பங்களை கறவை மாடுகளில் உற்பத்தித் திறனை அதிகப்படுத்த முனைந்துள்ளது. 1979ல் பால் வாரியம் கால்நடை நோய் கண்டறியும் சோதனைக்கூடத்தை ஆனந்தில் அறிவியல் ஆராய்ச்சி செயல்களுக்காக அமைக்கப்பட்டது. என்டிடிபி அதன் ஆராய்ச்சி செயல்களை விரிவுப்படுத்தி கால்நடை மரபியல்புகள், கால்நடை ஆரோக்கியம் மற்றும் அதன் ஊட்டச்சத்து ஆகியவை மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் திட்டத்திற்காக பால் பண்ணை கூட்டுறவுகளுக்கு உதவ விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு - உயிரித் தொழில்நுட்பம்
ஆராய்ச்சிக்குத் தேவையான உள்வீடு வசதிகள் மற்றும் தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்களை வைத்து நிர்வகித்து சோதனைக்கூடத்தின் கால்நடை உடல்நலப்பிரிவு கோமாரி நோய் மற்றும் போவைன் டிராபிகள் தெய்லெரய்யோஸிஸ் நோய்களுக்கு ஆராய்ச்சியில் மிகவும் சிறப்பாக செயல்படும் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்களைத் தொடர்ந்து என்டிடிபி ஆலோசனை சேவைகள் மற்றும் பயிற்சி திட்டங்களை இனவிருத்தி அமைப்புகளுக்கு வழங்குதல், கால்நடைத் தீவனக் களன்கள், நோய் கண்டறியும் சோதனைக்கூடங்கள், தடுப்பூசி தயாரிப்பு செயலகம் மற்றும் தேசிய, சர்வதேச அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்குகிறது. பயிற்சிகள் செல் மரபியல்கள், மூலக்கூறு மரபியல்புகள், கரு மாற்றுதல், கால்தீவனக் கலவைகள், மருந்தக சோதனை, ஒட்டுண்ணி நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் சார்ந்த இதர பகுதிகள்.

பயிற்சி மற்றும் ஆலோசனை
தற்போதைய அதிகரிக்கும் போட்டி நிறைந்த சூழலில், பால் பண்ணை கூட்டுறவுகளின் வெற்றி மக்களைப் பொருத்தே அமையும். வாரியங்கள், முதன்மை இயக்குநர்கள், மேலாளர்கள், கள அலுவலர்கள், வேலை செய்வோர் அவர்களுடன் இணைந்து வேலை செய்யும் நபர்களுக்கு முதலீடுகள் சுயமாக இருக்கும் அமைப்புகள், உதவி செய்யும் கூட்டுறவுகள் அதில் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் அவர் தொழிலில் அத்துப்படியானவராக இருப்பது என்டிடிபியின் முக்கியக்கூறுகளில் நீண்ட நாட்களாக இருப்பவை, சில ஆண்டுகளுக்குப் பிறகு, பால் வாரியம் உள்கட்டமைப்பு வசதிகள், அனுபவம் முறைகள் மற்றும் பயிற்சி திறன்கள் ஆகியவை தேவையான பொறுப்புணர்வு நிறைவேற்றுதல்.

என்டிடிபி தேவைக்கு ஏற்ப நிறைய பல பயிற்சி திட்டங்களை வழங்கும் மற்றும் ஆலோசனைகளை பல்வேறு தொழில்நுட்பம் மற்றும், செயற்கூறு பகுதிகளில் வழங்குகிறது. பயிற்சி மற்றும் ஆலோசனைகளின் எதிர்காலம், கூட்டுறவு நிறுவனம் அமைப்பு உருவாக்குதல் விற்பனை மற்றும் மேம்பாட்டு படிப்புகளை, பால் பண்ணை நிர்வாகம், லாபக் கணக்கு மற்றும் அதன் விளைவுகளின் படிப்புகள், பயிற்சி திட்டங்கள் வீடுகளில் வடிவமைத்து என்டிடிபி பயிற்சியாளர்கள் அந்தத் துறையில் சிறப்பு நிபுணர்களைக் கொண்டு நடத்தப்படும்.

நிறைய பயிற்சி திட்டங்கள் கூட்டுறவு அமைப்புகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. சில ஆலோசனை சேவைகள் மற்றும் குறிப்பிட்ட பயிற்சி திட்டங்கள் சில இதர அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

பால்பண்ணை கூட்டுறவுகள்
நாட்டில் பதப்படுத்தப்பட்ட பால் விற்பனையில் பால் பண்ணைக் கூட்டுறவுகள் அதிக பங்குகளைப் பெற்றுள்ளது. பால் பதப்படுத்தப்பட்டு, 170 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு, அதை 15 மாநிலக் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு மூலம் விரிவுப்படுத்தப்படுகிறது.
பால் வாரியத்தின் நிகழ்ச்சிகள் மற்றும் செயல்கள் பால் பண்ணைக் கூட்டுறவுகளின் செயல்திறனை வலுப்படுத்த உற்பத்தியாளர் சொந்தமாக  வைத்திருத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. என்டிடிபி பால் பண்ணைக் கூட்டுறவுகள் மேம்பாட்டிற்கு உதவி செய்து, இந்திய விவசாயிகளுக்கு நல்ல எதிர்காலத்தை உறுதிப்படுத்துகிறது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, கூட்டுறவுகள் ஏற்படுத்திய வர்த்தக குறியீடுகள் பின் தரம் மற்றும் மதிப்புகளில் பெயர் பெற்று  விளங்கியது, (ராஜஸ்தான்), நந்தினி (கர்நாடகா), மில்மா (கேரளா), கோகுல் (கோலாப்பூர்) ஆகியவை நுகர்வோரின் நம்பிக்கையை சம்பாதித்தது.

சில பெரிய பால் பண்ணைக் கூட்டுறவு கூட்டமைப்புகள் 
ஆந்திரப்பிரதேச பால் பண்ணை மேம்பாட்டுக் கூட்டுறவு கூட்டமைப்பு லிமிடெட் (APDDCP), பீகார் மாநிலக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (COMPFED, ) குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு லிமிடெட் (GCMMP), ஹரியானா பால் பண்ணை மேம்பாட்டுக் கூட்டுறவு கூட்டமைப்பு லிமிடெட் (HDDCF), ஹிமாச்சல பிரதேச மாநிலக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (HPSCMPF),
கர்நாடகா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் (KMF), கேரள மாநிலக் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு லிமிடெட் (KCMMF), மத்தியப் பிரதேச மாநிலக் கூட்டுறவு பால் பண்ணைக் கூட்டமைப்பு லிமிடெட் (MPCDF), மஹாராஷ்டிரா ராஜ்ய சகாகரி மர்யாடிட் டுக்ட் மஹாசங் (மஹாசங்), ஒரிசா மாநிலக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (OMFED), பிரதேசிக் கூட்டுறவு பால் பண்ணைக் கூட்டமைப்பு லிமிடெட் (UP) (PCDF), பஞ்சாப் மாநிலக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (MILKFED)
ராஜஸ்தான் கூட்டுறவு பால் பண்ணைக் கூட்டமைப்பு லிமிடெட் (RCDF), தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (TCMPF), மேற்கு வஙகாளம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (WBCMPF).

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
ஆதாரம்
http://www.nddb.org

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015