பால்பண்ணை கூட்டுறவுகள்
நாட்டில் பதப்படுத்தப்பட்ட பால் விற்பனையில் பால் பண்ணைக் கூட்டுறவுகள் அதிக பங்குகளைப் பெற்றுள்ளது. பால் பதப்படுத்தப்பட்டு, 170 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு, அதை 15 மாநிலக் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு மூலம் விரிவுப்படுத்தப்படுகிறது.
பால் வாரியத்தின் நிகழ்ச்சிகள் மற்றும் செயல்கள் பால் பண்ணைக் கூட்டுறவுகளின் செயல்திறனை வலுப்படுத்த உற்பத்தியாளர் சொந்தமாக வைத்திருத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. என்டிடிபி பால் பண்ணைக் கூட்டுறவுகள் மேம்பாட்டிற்கு உதவி செய்து, இந்திய விவசாயிகளுக்கு நல்ல எதிர்காலத்தை உறுதிப்படுத்துகிறது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, கூட்டுறவுகள் ஏற்படுத்திய வர்த்தக குறியீடுகள் பின் தரம் மற்றும் மதிப்புகளில் பெயர் பெற்று விளங்கியது, (ராஜஸ்தான்), நந்தினி (கர்நாடகா), மில்மா (கேரளா), கோகுல் (கோலாப்பூர்) ஆகியவை நுகர்வோரின் நம்பிக்கையை சம்பாதித்தது.
சில பெரிய பால் பண்ணைக் கூட்டுறவு கூட்டமைப்புகள்
ஆந்திரப்பிரதேச பால் பண்ணை மேம்பாட்டுக் கூட்டுறவு கூட்டமைப்பு லிமிடெட் (APDDCP),
பீகார் மாநிலக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (COMPFED, )
குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு லிமிடெட் (GCMMP),
ஹரியானா பால் பண்ணை மேம்பாட்டுக் கூட்டுறவு கூட்டமைப்பு லிமிடெட் (HDDCF),
ஹிமாச்சல பிரதேச மாநிலக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (HPSCMPF),
கர்நாடகா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் (KMF),
கேரள மாநிலக் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு லிமிடெட் (KCMMF),
மத்தியப் பிரதேச மாநிலக் கூட்டுறவு பால் பண்ணைக் கூட்டமைப்பு லிமிடெட் (MPCDF),
மஹாராஷ்டிரா ராஜ்ய சகாகரி மர்யாடிட் டுக்ட் மஹாசங் (மஹாசங்),
ஒரிசா மாநிலக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (OMFED),
பிரதேசிக் கூட்டுறவு பால் பண்ணைக் கூட்டமைப்பு லிமிடெட் (UP) (PCDF),
பஞ்சாப் மாநிலக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (MILKFED)
ராஜஸ்தான் கூட்டுறவு பால் பண்ணைக் கூட்டமைப்பு லிமிடெட் (RCDF),
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (TCMPF),
மேற்கு வஙகாளம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (WBCMPF).
ஆதாரம்:
http://www.nddb.org |