இந்திய வங்கி முறையில் கடந்த 30 வருடங்களாக பல வியத்தகு சாதனைகளை புரிந்துள்ளது. இது முக்கியமாக எல்லோரிடத்திலும் சென்றடைந்துள்ளது. நகரம் மற்றும் சிறு நகரங்கள் மட்டுமன்றி இந்தியாவின் கிராமப்புற மூலை முடுக்குகளில் எல்லாம் சென்று, வங்கித் துறை மிகப் பெரிய அளவிற்கரிய சாதனைகளையும் வளர்ச்சிகளையும் அடைந்துள்ளது.
இந்திய அரசின் கொள்கைகளில் 1969 ஆம் தனியார் வங்கிகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளாக மாற்றியதன் மூலம் நிறைய லாபங்களை அடைந்துள்ளது.
இந்தியாவில் பழமையானதாக இருந்தாலும், முதல் வங்கி 1786ல் துவங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்திய வங்கி முறைகளை 3 கட்டமாகப் பிரிக்கலாம்.
- இந்திய வங்கிகளில் முதல் கட்டமான 1786 முதல் 1968 வரையிலான காலம்.
- இந்திய வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது முதல் 1991 வரை அதாவது இந்திய வங்கித் துறையின் சீரமைப்பு வரை.
- இந்திய வங்கிகள் துறையின் புதிய தொடக்கமான இந்திய நிதி மற்றும் வங்கித் துறை சீரமைப்பு 1991 பின்.
பகுதி -1
இந்தியாவில் பொது வங்கி 1786 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் வங்கி மற்றும் பெங்கால் வங்கி தொடங்கப்பட்டது. கிழக்கு இந்திய நிறுவனம், பெங்கால் வங்கி (1809), பாம்பே வங்கி (1840) மற்றும் மெட்ராஸ் வங்கி (1843) ஆகிய வங்கிகளை தனித்தனி பிரிவுகளாக ஏற்படுத்தி இதைத் தனி அதிகாரம் கொண்ட வங்கியாக அறிவித்தது. இந்த மூன்று வங்கிகளும் 1920ல் கலைக்கப்பட்டு இந்திய இம்பீரியல் வங்கி என்று ஆரம்பிக்கப்பட்டது. இதில் தனியார் பங்குதாரர்கள் வங்கியாகவும் மற்றும் ஐரோப்பியர்களை அதிக பங்குதாரர்களாக் கொண்டு தொடங்கப்பட்டது.
இந்தியர்களால் முதன் முறையாக 1865 ஆம் ஆண்டு அலஹாபாத் வங்கி தொடங்கப்பட்டது பின் பஞ்சாப் நேஷனல் லிமிடெட் 1894ல் லாகூரை தலைமையிடமாக் கொண்டு தொடங்கப்பட்டது. 1906 முதல் 1913 வரையிலான இடைப்பட்ட காலத்தில் பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் வங்கி, பாங்க் ஆப் மைசூர் ஆகியவை தொடங்கப்பட்டது. பாரத ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
முதல் கட்டத்தில், வங்கியின் வளர்ச்சி மிகவும் மெதுவாகவும் மற்றும் 1913 வரை அவ்வப்போது தோல்விகளையும் அடைய நேரிட்டது. தோராயமாக 1100 வங்கிகள் பெரும்பான்மையான சிறிய வங்கிகள் இருந்தன. வணிக வங்கிகளின் செயல்பாடுகள் ஒழுங்கு நிலைப் படுத்த, இந்தய அரசு மூலம் வங்கி நிறுவனங்கள் விதி 1949 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பின் வங்கி ஒழுங்கு முறை விதி 1949, நடைமுறைப்படுத்தப்பட்ட விதி 1965 (விதி எண். 23, 1965) என்று மாற்றப்பட்டது. பாரத ரிசர்வ் வங்கி பின் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட வங்கியாகவும், இந்தியாவின் வங்கித் துறையை கண்காணிக்கும் ஒரு மத்திய வங்கி ஆணையமாகவும் செயல்படுகிறது.
அந்தக்கால கட்டங்களில் வங்கிகள் பொது மக்கள் மத்தியில் குறைந்த நம்பிக்கையையே பெற்றிருந்தது. அதே போல் மிகக் குறைவாகவே இருந்தது. தபால் துறையில் சேமிப்பதே பாதுகாப்பானதாகக் கருதப்பட்டது. மேலும் நிதி வியாபாரிகளுக்கே அதிகமாக வழங்கப்பட்டது.
பகுதி - 2
விடுதலைக்குப் பின் இந்திய வங்கித் துறையை சீரமைக்க அரசு நிறைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கிராமப்புற மற்றும் சிறு நகர்ப்புற பகுதிகளில் பெரிய அளவில் வங்கி வசதிகளை ஏற்படுத்த இம்பீரியல் இந்திய வங்கி 1955 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கியாக மாற்றப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கியை பாரத ரிசர்வ் வங்கிக்கு முதன்மை முகவராக ஏற்படுத்தி மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளில் உள்ள வங்கி பணமாற்றங்களை நாடு முழுக்க செய்து கொள்ள ஏற்படுத்தப்பட்டது.
ஜீலை 19, 1960 ஆம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியின் ஏழு மானிய வங்கியை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியாக மாற்றப்பட்டது. 1969 ஆம் ஆண்டு வங்கிகள் தேசயிமயமாக்கலை பெரிய அளவில் ஏற்படுத்தப்பட்டது. பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி அம்மையாரின் முயற்சியால் 14 வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது.
இரண்டாம் கட்ட வங்கிகள் தேசியமயமாக்கல், இந்திய வங்கித் துறை சீரமைத்தல் மூலம் 1980 ஆம் ஆண்டு மேலும் ஏழு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டில் உள்ள வங்கித் துறையில் 80 சதவிகிதம் அரசின் கீழ் கொண்டு வரப்பட்டது.
வங்கித் துறைகளுக்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை இந்திய அரசு ஏற்படுத்தியது.
- : வங்கி சீரமைத்தல் விதி ஏற்படுத்தப்பட்டது.
- : பாரத ஸ்டேட் வங்கி தேசியமயமாக்கப்பட்டது.
- 1959 : பாரத ஸ்டேட் வங்கியின் கீழ் மானியம் பெறும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது.
- : வைப்பு நிதிகளுக்கு காப்பீடு வழங்கப்பட்டது.
- : 14 பெரிய வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது.
- : கடன் உறுதி கழகம் தொடங்கப்பட்டது.
- : மண்டல கிராமப்புற வங்கிகள் தொடங்கப்பட்டது.
- : மேலும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு அதில் 200 கோடிக்கு மேல் வைப்பு நிதியாக சேர்க்கப்பட்டது.
வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்ட பின்பு தான் அதன் மேல் மக்களுக்கு நம்பிக்கையும் அதைப் பற்றிய தொடர்ச்சியும் முழுதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பகுதி - 3
இந்தப் பகுதியில் நிறைய பொருள்கள் மற்றும் வசதிகளை வங்கித் துறையில் சீரமைப்புக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1991 ஆம் ஆண்டு நரசிம்மன் குழு மூலம் வங்கி முறைகளில் தாராளமயமாக்கல் திட்டத்தைக் கையாள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தொலைபேசி வங்கி மற்றும் இணையதள வங்கி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறை மிகவும் வசதியாக இருந்தது. பணத்தை விட காலம் மிகவும் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
முன்பு, வேளாண்மை பாரம்பரிய வழியில் மேற்கொள்ளப்பட்டது. அது மானியம் மூலமும் மற்றும் சுயதேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் இருந்தது. விவசாயிகளுக்கு கடன் தேவைகள் மிகவும் குறைவாகவும் மற்றும் உறவினர்கள், உள்ளூரில் கடன் கொடுப்பவர்கள் நண்பர்கள் மூலமும் அரசிடம் தக்காவிக் கடன் மூலமும் பெற்றுக் கொள்வர். கடன் கொடுப்பவர்கள் அதிக வட்டி மற்றும் பொய்யான ஆவணங்கள் மூலம் விவசாயிகளை உறிஞ்சிக் கொண்டிருந்தனர்.
இந்திய விடுதலைக்குப் பின், குறிப்பாக பசுமை புரட்சிக்குப் பின், வேளாண்மை நவீனமயமாக்குதல் மூலம் விவசாயிகளுக்கு கடன் தேவைகள் அதிகமாகத் தேவைப்பட்டது. இக்காலக்கட்டத்தில் சந்தைச் சார்ந்த பண்ணையம் என்பதால்இ கடன் என்பது ஒரு முக்கிய இடுபொருளாகக் கருதப்படுகிறது.
மாறுபடுகின்ற சூழ்நிலைக்கு ஏற்பவும் மற்றும் அரசுக் கொள்கைகளினாலும், வங்கிகள் விவசாயத்திற்கு நிறையக் கடன்கள் கொடுக்க வேண்டி நிர்பந்திக்கப்படுகின்றனர். தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகள் இரண்டும் தங்களை நிறைய வேளாண் சார்ந்த தொழில்களுக்கு கடன் வழங்க ஈடுபடுத்திக் கொள்கின்றனர். மேலும், வங்கிகள் விவசாய ஆலோசனை மையங்கள், விவசாய மருந்தகம், ஏற்றுமதி மற்றும் விவசாய பொருள்களை சந்தைப்படுத்துதல் போன்றவற்றிற்கு பயிற்சியும் நிதியுதவியும் அளிக்கின்றது.
தோட்டக்கலை, மீன் வளர்ப்பு, கால்நடை, மலரியல், பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் போன்ற குறிப்பிட்ட விவசாயத் தேவைகளுக்கு கடன்கள், விவசாயிகளுக்கு வங்கிகள் வழங்குகின்றது. விவசாயிகள் இந்தக் கடன்களை சரியான நேரம், முறையான அணுகுமுறை மற்றும் திருப்பிச் செலுத்துதல் மூலம் பயன்பெறலாம். |