வங்கி மற்றும் கடன் :: வங்கி -  ஒரு கண்ணோட்டம்

பகுதி - 2

விடுதலைக்குப் பின் இந்திய வங்கித் துறையை சீரமைக்க அரசு நிறைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கிராமப்புற மற்றும் சிறு நகர்ப்புற பகுதிகளில் பெரிய அளவில் வங்கி வசதிகளை ஏற்படுத்த இம்பீரியல் இந்திய வங்கி 1955 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கியாக மாற்றப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கியை பாரத ரிசர்வ் வங்கிக்கு முதன்மை முகவராக ஏற்படுத்தி மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளில் உள்ள வங்கி பணமாற்றங்களை நாடு முழுக்க செய்து கொள்ள ஏற்படுத்தப்பட்டது.

 ஜீலை 19, 1960 ஆம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியின் ஏழு மானிய வங்கியை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியாக மாற்றப்பட்டது. 1969 ஆம் ஆண்டு வங்கிகள் தேசயிமயமாக்கலை பெரிய அளவில் ஏற்படுத்தப்பட்டது. பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி அம்மையாரின் முயற்சியால் 14 வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. இரண்டாம் கட்ட வங்கிகள் தேசியமயமாக்கல், இந்திய வங்கித் துறை சீரமைத்தல் மூலம் 1980 ஆம் ஆண்டு மேலும் ஏழு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டில் உள்ள வங்கித் துறையில் 80 சதவிகிதம் அரசின் கீழ் கொண்டு வரப்பட்டது.

வங்கித் துறைகளுக்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை இந்திய அரசு ஏற்படுத்தியது.

  1. : வங்கி சீரமைத்தல் விதி ஏற்படுத்தப்பட்டது.
  2. : பாரத ஸ்டேட் வங்கி தேசியமயமாக்கப்பட்டது.
  3. 1959 : பாரத ஸ்டேட் வங்கியின் கீழ் மானியம் பெறும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது.
  4. : வைப்பு நிதிகளுக்கு காப்பீடு வழங்கப்பட்டது.
  5. : 14 பெரிய வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது.
  6. : கடன் உறுதி கழகம் தொடங்கப்பட்டது.
  7. : மண்டல கிராமப்புற வங்கிகள் தொடங்கப்பட்டது.
  8. : மேலும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு அதில் 200 கோடிக்கு மேல் வைப்பு நிதியாக சேர்க்கப்பட்டது.
வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்ட பின்பு தான் அதன் மேல் மக்களுக்கு நம்பிக்கையும் அதைப் பற்றிய தொடர்ச்சியும் முழுதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016